வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள்

வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள், டாக்டர் மு. நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம், விலை 130ரூ. வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அவருடைய சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விரிவாகவும் கூறும் நூல். வள்ளலார் எப்படி இருப்பார், அவருடைய நடை – உடை – பாவனைகள் எப்படி என்பதையும் ஆசிரியர் வர்ணித்துள்ளார். வள்ளலாரின் கருத்துக்கள், வைரங்களாக ஜொலிக்கின்றன. அவற்றில் ஒன்று ‘இறந்தவர்களை எரிக்கக்கூடாது, இறந்தவுடன் எந்தச் சடங்கும் செய்யக்கூடாது. அவர் எந்த ஆடையில் இருந்தாரோ அப்படியே அடக்கம் செய்துவிட வேண்டும். யாரும் அழவோ, துயரப்படவோ […]

Read more

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள்

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள், வானதி பதிப்பகம், விலை 450ரூ. முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், தவவலிமையினால் இறைவனின் இன்னருளைப் பெற்றவர்கள். அட்டமா சித்திகளைக் கைவரப்பெற்று அரிய செயல்களைப் புரிந்தவர்கள். பொதுவாகச் சித்தர்கள் எண்ணிக்கையில் 18பேர் என்பார்கள். அது உண்மையல்ல, நூறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் அடிப்படையில் மா.ந.திருஞான சம்பந்தன் ஏற்கனவே ‘சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்’ என்ற நூலில் 81 சித்தர்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த நூலில் பூண்டி மகான், மல்லையா சித்தர், கொடுவிலார் பட்டி சித்தர், பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் […]

Read more

நபித்தோழர்களின் சிறப்புகள்

நபித்தோழர்களின் சிறப்புகள் (முதல் பாகம்), ஜுபைர் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. நபித்தோழர்களின் சிறப்புகள் குறித்து அரபி மொழியில் அஷ்ஷைகு முஸ்தபா அல்அதவி எழுதிய நூல் சிறப்புக்குரியது. அதைத் தமிழில் எம். அப்துல் ரஹ்மான் பாஜில் பாகவி அழகுற மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலில் கலீபாக்கள் அபூபக்கர் சித்தீக், உமர், உஸ்மான், அலி மற்றும் தல்ஹபா, ஜுபைர், அபூ உபைதா, அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் போன்ற நபித் தோழர்களின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- என்னோடு வந்துவிடு, ஸ்ம்ரித்திராம், சிவாலயம், விலை […]

Read more

அக்னியின் ஆயிரம் நாமங்கள்

அக்னியின் ஆயிரம் நாமங்கள். சு. கோதண்டராமன், கிரி டிரேடிங் ஏஜென்சி, விலை 100ரூ. அக்னியை இறைவனாகக் கருதி குத்துவிளக்கு பூஜை செய்கிறோம். கார்த்திகை தீபத்தை இறைவனின் வடிவமாக காண்கிறோம். அந்த அக்னி பிறப்பு, ஒளி, புகழ், பரம்பொருள், யாகம், வழிபாடு உள்ளிட்ட 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   தாவரவியல் மருத்துவம், மு. சண்முகவேல், அடன் புக் மால், விலை 70ரூ. நோய்கள் பற்றிய விவரங்களையும் அதைக் குணப்படுத்த மூலிகை மருந்துகள் தயாரிக்கும் வழிமுறைகளையும் எழுதியுள்ளார் மு. […]

Read more

தேவ அமுதம்

தேவ அமுதம், இரா. யுனி ஜோசப், மாவிகா அச்சகம், பக். 225, விலை 100ரூ. இரா. யுனிஜோசப் பக்தி பாடலாசிரியர், ஆலயத்தின் பாடகர் குழு தலைவராக உள்ளார். தேவ அமுதம் என்னும் இந்த இசை தொகுப்பின் வழியாக, திருவழிப்பாட்டு பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் 14 தலைப்புகளில் 303 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டிற்கு உகந்த நூல். நன்றி: தினமலர், 2/10/2016

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள், வானதி பதிப்பகம், விலை 195ரூ. பனையபுரம் பனங்காட்டீசன் கோவில், பழையாறை வடதளி தர்பூரீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி காமாட்சி ஆலயம், திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் அமைந்துள்ள அதிசய மலைக் கோவில், போடி பரமசிவம் கோவில், பேரையூர் நாகநாதசுவாமி ஆலயம் உள்பட 33 கோவில்கள் குறித்து பனையபுரம் அதியமான எழுதிய நூல். கோவில்களின் தொன்மை சிறப்பு, புராண சிறப்பு, அங்குள்ள இறைவனை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள், வழித்தடங்கள் போன்ற முழுமையான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதா ப்ரகாசனம், பக். 192, விலை 150ரூ. வைணவ ஆசார்யார்களுள் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீராமாநுஜர். அவர் ஒரு புரட்சியாளர் என்று சிலரும், சமூக சீர்திருத்தவாதி என்று சிலரும், மதமாற்றத்தில் ஈடுபட்டவர் என்று சிலரும், ஸ்ரீரங்கம் கோயிலில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த வழிபாட்டு முறைகளை மாற்றியவர் என சிலரும், அவர் ஒரு வறட்டு வேதாந்தியே தவிர சிறந்த பக்திமான் அல்ல என்று சிலரும், வேத மரபுக்கே விரோதமானவர் என்று சிலரும் அவர் மனைவியைப் பிரிந்தது நியாயமல்ல என்று […]

Read more

இளவரசியின் சபதம்

இளவரசியின் சபதம், அய்க்கண், திருவரசு புத்தகநிலையம், விலை 60ரூ. சங்க காலத்தில் ஒரு பெண்ணின் சபதம் பற்றிய ஒரு வரலாற்று நாவல். இதனை செய்தியாகவும், உவமையாகவும், சுவையோடும் நூலாசிரியர் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.   —-   மலரும் மனங்கள், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மீது ஈடுபாடு கொண்ட நூலாசிரியர், ஆன்மிகச் சிந்தனைகள், கடவுள் நம்பிக்கைக் கொள்கையை எளிய தமிழில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், ரஹ்மத் பதிப்பகம், விலை 400ரூ. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழிகள் தொகுப்புக்கு ‘ஹதீஸ்’ என்று பெயர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நபிமொழித் தொகுப்புகள் வெளிவந்தபோதிலும், இமாம் புகாரி இஸ்மாயில், இமாம் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ், திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ ஆகியோர் தொகுத்த ஆறு நூல்களே நம்பிக்கைக்குரிய ஆதாரபூர்வ நூலாகக் கருதப்படுகிறது. இவற்றில் அமாம் புகாரி தொகுத்த ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம், திர்மிதீ ஆகிய நபிமொழித் தொகுப்புகளை ரஹ்மத் பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இப்போது அபூ, தாவூத் (ரஹ்) தொகுத்த நபிகளாரின் […]

Read more
1 55 56 57 58 59 128