108 தென்னக சிவஸ்தலங்கள்

108 தென்னக சிவஸ்தலங்கள், பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 250ரூ. எந்நாட்டவருக்கும் இறைவனாகி, தென்னகத்தை தன்னகத்தாய் கெண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்தினையும் தனதாக்கிக் கொண்ட சிவபெருமானுக்கும் நம் முன்னோர்களால் எண்ணற்ற சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. அவைகளில் பிரதானமான 108 சிவாலயங்களைப் பற்றிய முழு விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கோவில்களோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற கோவில்களும், பின் இணைப்பாக காசி, கேதாரேஸ்வர கோவில்களும் ஸ்தல புராணம், ஆலய அமைப்பு, அமைவிடத்தோடு அரிய […]

Read more

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள்

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள், ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், (பாகம் 1) பக். 152, விலை 125ரூ, (பாகம் 2) பக். 152, விலை 125ரூ. குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் அந்த இதழில் பல்வேறு திருத்தலங்கள் குறித்து எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 2 பாகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில் 18 கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் 23 கட்டுரைகளும் உள்ளன. பலருக்கும் தெரியாத அபூர்வ திருத்தலங்கள் குறித்தும், ஏற்கெனவே தெரிந்த கோயில்கள் குறித்த தெரியாத பல தகவல்களையும் தனக்கே உரிய […]

Read more

ஆதி சைவர்கள் வரலாறு

ஆதி சைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதி சைவர்கள் நல வாழ்வு மையம் வெளியீடு, பக். 184, விலை 200ரூ. சிவாலயங்களில் பூசனை புரியும் மரபினர் ஆதி சைவர் எனப்படுகின்றனர். சிவ வேதியர், சிவாச்சாரியர் முதலாகிய இருபது பெயர்களால் அழைக்கப்படும், ஆதி சைவர்கள் ஆகமங்களினால் திருக்கோவில்களின் நாட்பூசனைகள், சிறப்புப் பூசனைகள், வேள்விகள், சடங்குகள் முதலியவற்றைச் செய்வோர் ஆவர். சிவாச்சாரியர் மரபு பற்றி சங்க நூலாகிய பரிபாடல் துவங்கிப் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், சில பல வரலாற்றுக் குறிப்புகளையும் […]

Read more

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 56, விலை 50ரூ. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் இது. திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்ப நாயனாரின் பிறப்பிடமான பொத்தப்பி நாடும், காளத்தி மலையும் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன என்பதையும், வேட்டுவர்களின் வாழ்க்கையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. வேட்டுவச் சிறுவர்களுக்கு வில் வித்தை துவங்கும் போது, அக்காலத்தில் […]

Read more

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை, சு. இலம்போதரன், முல்லை நிலையம், பக். 656, விலை 450ரூ. வேதாந்த – சித்தாந்த நெறி நின்ற தாயுமானவரின், 1,451 பாடல்களுக்குப் பலர் எழுதிய உரைத் தொகுப்போடு, செய்குதம்பி பாவலரின் கைவண்ணமும் கலந்து வெளிவந்துள்ள இவ்வரிய உரை தனித்தன்மை வாய்ந்தது. காலத்தால் பிற்பட்டவர் எனினும் அத்வைத நெறியை, தனது செழுமைச் சிந்தனைகளால் வெளிப்படுத்திய மகான். உரைச் சிறப்பிற்கு ஒரு சில உதாரணங்கள்: ‘அங்கிங்கெனாதபடி’ என்ற முதல்பாடலில், ‘மனவாக்கனிற் தட்டாமல் நின்றதெது’ என்னும் அடிக்கு, (பக்.100) […]

Read more

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள், ம. நித்யானந்தம், மணிவாசகர் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. காசி முதல் ராமேஸ்வரம் வரை 400க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று தரிசித்த அனுபவம் கொண்ட ம. நித்யானந்தம், ‘சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வரலாற்றுக் குறிப்புடன் புராணத் தகவலுடன் ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் இந்நூலில் அளித்துள்ளார். கோயில்கள் என்பது நம் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்பு. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை இந்த நூல் ஆணித்தரமாகச் சொல்கிறது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ, ப்ரியா கல்யாணராமன், குமுதம், விலை 150ரூ. திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோயின்மை, பில்லி சூனியங்களிடமிருந்து பாதுகாப்பு என ஏராளமான வரங்களை அள்ளித்தரும் ஆலயங்களின் அற்புத வரலாறு அடங்கிய நூல். அம்மன் மீது பெண்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நெருக்கத்தை நூலாசிரியர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். குமுதம் இதழில் வெளிவந்த தொடர்களின் தொகுப்பே இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

தென்திசை வீரன் சிவன்

தென்திசை வீரன் சிவன், க.மனோகரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 350ரூ. ‘ஈஸ்வர்’ என்றும் ‘தட்சிணாமூர்த்தி’ என்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும், சிவா, சிவன் என்ற பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகள் மிக்க சிவன் தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் என்றும், அவர் எப்படி வட திசைக்கச் சென்று அவர்களின் தலைவர் ஆனார் என்பதையும் நாவல் வடிவில் எழுதியுள்ளார் க. மனோகரன். புராணத்தையே சரித்திரக்கதை வடிவில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

இஸ்லாம் ஒரு பார்வை

இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது. பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், […]

Read more

வெற்றித்திருமகன்

வெற்றித்திருமகன், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 140ரூ. வெறும் பழையாறையுடன் இருந்த சோழ நாட்டை, தமிழகமெங்கும் பரந்து விரியச் செய்தவன் விஜயாலயன். அதற்காக அவன் அடைந்த இன்னல்களும், எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தனிச் சரித்திரமாகும். முழுக்க முழுக்க சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு, சில கற்பனைப் பாத்திரங்களோடு, கற்பனைச் சம்பவங்களையும் கலந்து விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்துள்ளார் நூலாசிரியர் ந.மணிவாசகம். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- விநாயகர், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 24ரூ. திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய விநாயகர் வரலாறு […]

Read more
1 57 58 59 60 61 128