சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், பக்.176 விலை ரூ.100. சித்தர்கள், கோயில்களில் உள்ள சிற்பங்களிலோ, சிலைகளிலோ சிவனைத் தேடாமல் தங்கள் சித்தத்தின் உள்ளேயே சிவனைக் கண்டு, தெளிந்து வழிபட்டதனால்தான் சித்தர்கள் எனப்பட்டனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு’’ என்கிற பண்டைத் தமிழரின் சொலவடை இதை உணர்த்தும். சித்தர்களிலேயே முதல் சித்தர் சிவபெருமான்தான் என்பதைத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. பதினெண் சித்தர்களும் மெய்ஞ்ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சமய உலகிற்கும், மருத்துவ உலகிற்கும், அறிவியல் உலகிற்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். தற்போது சித்தர்கள் […]

Read more

நான் இராமானுசன்

நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், பக்.136. விலை ரூ.60. விசிஷ்டாத்வைத தத்துவத்தை புதினப் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் புதிய முயற்சி இது. அதிலும் தத்துவம் தந்த ஆசார்யர் ராமானுஜரே தற்காலத்துக்கு ஏற்ப அதனைச் சொல்லும், “நான் கிருஷ்ணதேவராயன் பேசுகிறேன்’’ பாணியிலான கதைச் சொல்லல் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல, அது அடையக் கூடிய நிலை என்பதை வஜ்ர சூசிகா (வைர முள்) உபநிஷதத்தின் துணையுடன் விளக்கியிருப்பது அருமை. பிராமணரல்லாத தமது குரு நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி […]

Read more

நான் ப்ரம்மம்

நான் ப்ரம்மம்,  ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், தமிழில்: சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.250. “நான்’ எனும் தேடலே கேள்வியாக மனதினுள் வளர்ந்து நிற்கும்போது அதற்கான தேடலும் பதிலும் அவசியமாகிறது. ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ் தமது ஆன்மிக சொற்பொழிவுகளால் பலரின் மன இருளைப் போக்கி ஆன்மபலத்தைப் பெருக்கும் கருவியாக இருந்தவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களுமே ஒரு நூலாக (முதல் பகுதி) வடிவெடுத்திருக்கிறது. “”கடவுள் ஏன் என்னை இவ்வாறு படைத்தார்?” என்பது கேள்வி. அதற்கு மஹராஜ் அவர்கள் […]

Read more

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை)

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை) , சீ.சுந்தரம், வித்யுத் பதிப்பகம்,  பக்.584, விலை  ரூ.500. ஆண்டாளும் கிருஷ்ணனும் என்பதுதான் “வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும்’ என்று நூலின் தலைப்பாகியிருக்கிறது. திருப்பாவைக்கு விளக்கவுரை இந்நூல் என்று கூறுவதைவிட, மிக அற்புதமான தத்துவக் கருத்துகளை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூல் என்றே கூறலாம். ருப்பாவைக்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப்படி வியாக்கியானம், திருநாராயணபுரத்து ஆய் என்றழைக்கப்படும் தேவராஜர் வழங்கியுள்ள ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி எனப் பல […]

Read more

நியாயமா இது நியாயமா

நியாயமா இது நியாயமா, முனைவர் கமல.செல்வராஜ், காவ்யா, விலை 200ரூ. கல்வியின் நிலை, சமுதாய அமைப்புகள், அரசியல், பண்பாடு, கல்வி ஸ்தாபனங்கள், மதம் எனப் பல்வேறு பொருட்களைக் குறித்து அவர் ஆராய்ந்த கருத்துகளின் கருவூலமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- சாயி தரிசனம், தெ. ஈஸ்வரன், திருவரசு புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ சத்திய சாயி பகவான் நேரில் தரிசித்த உணர்வை, இந்த நூலை படிப்பதன் மூலம் அனைவரும் பெற முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

திருப்புகழில் திருமால்

திருப்புகழில் திருமால், டாக்டர் எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, பக். 128, விலை 80ரூ. திருப்புகழ், முருகப் பெருமான் மீது பாடப்பட்ட கவியானாலும், அதில், கணபதி, சிவன், அம்பிகை, சூரியன், திருமால் ஆகிய எல்லா கடவுளுக்கும் இடமுண்டு. ‘முத்தைத்தரு’ என்ற முதல் பாடலிலேயே, ராமன் மற்றும் கண்ணனை, அருணகிரிநாதர் போற்றுவதை, நூலாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். பாற்கடல் வாசம், பாம்பணை நேசம், ராமனின் வீரம், கண்ணனின் கருணை, மகாலட்சுமியின் மாண்பு, கஜேந்திரனுக்கு அருளியது, அனுமனது வீரம், ஆழ்வாரின் சொல் கேட்டு […]

Read more

நபிமொழிக் களஞ்சியம்

நபிமொழிக் களஞ்சியம்,  மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி, மின்னத் பப்ளிஷர்ஸ், விலை 500ரூ. இஸ்லாமிய நெறிமுறையில் திருக்குர் ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன. ஹதீஸ் என்றால் உரை, உரையாடல், புதிய செய்தி எனப்பொருள்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் 2 ஆயிரம் ‘ஹதீஸ்’களைத் தேர்ந்தொடுத்து, இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ என்ற நூலை அரபி மொழியில் எழுதினார். அதை ‘நபிமொழி களஞ்சியம்’ என்ற பெயரில் மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி மொழிபெயர்த்தார். அது […]

Read more

இயேசுநாதர் வரலாறு

இயேசுநாதர் வரலாறு, அ,லெ. நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 250ரூ. இயேசுவின் வாழ்க்கையை மிகவும் தெளிவாக எம்மதத்தினரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். அன்பின் மறுவுருவம் இயேசு என தெளிவுபடுத்தியுள்ளார். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை – ஐந்து கால கட்டங்களாகப் பிரித்துள்ளார். இயேசுவின் 33 வருட வாழ்க்கையை பிறப்பு முதல் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளது அருமை. பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகையைக் குறித்து […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2), தொகுப்புரை கே.எஸ். சந்திரசேகரன், டாக்டர் வி. மோகன், ஓம் முருகாஸ்ரமம் வெளியீடு, பக். 84, விலை 50ரூ. பிரம்மத்தை அறியும் ஞானத்தை விளக்குவது, நான்கு வேதங்களின், 108 உபநிடதங்கள். அவற்றில், ஈச, கேன, தைத்ரீயம் முதலிய 10 உபநிடதங்கள் முக்கியமானவை. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலின் முதற்பாகம் வந்தது. இரண்டாம் பாகமான இந்த நூலில், ஈசாவஸ்யம், கேனம், மாண்டூக்யம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதர்வண வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில்தான், ‘சத்யமேவ ஜயதே’ […]

Read more

திருப்போரூர்ச் சந்நிதி முறை

திருப்போரூர்ச் சந்நிதி முறை, பி.ரா. நடராசன், சங்கர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. சிதம்பரம் சுவாமிகளின் ஒப்பற்ற நூல்! கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த இலக்கணப் புலவர், சிதம்பர சுவாமிகள். மதுரையிலிருந்து முருகன் திருவருளால், திருப்போரூர் வந்தார். புதைத்திருந்த சுயம்பு முருகனுக்கு, வியந்து போகுமளவு கற்கோவில் கட்டினார். ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் சொற்கோவிலும் படைத்தார். இவரது உரையால்தான், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு, அப்பர் பாடியது தேவாரம், சுந்தரர் பாடியது திருப்பாட்டு என்று வகைப்படுத்தப்பட்டது. இத்தகு அருட்புலவரின் புதிய பக்தி […]

Read more
1 58 59 60 61 62 128