வலை வாசல் வருக

வலை வாசல் வருக, முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம், எஸ்.ஆர்.எம். கல்லூரி, பக். 72, விலை 150ரூ நம் தாய் மொழியாம் தமிழில், கணினி தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ள அற்புத நுால். ஒவ்வொரு கணினி அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மை சார்ந்த நிகழ்வுகளை தக்க சான்றுகளுடன் விளக்குகிறது இந்நுால். தரவுப் பகுப்பாய்வு, மேகக் கணிமை, வலையிணைப்புக் கணிமை, மின்வெளி பாதுகாப்பு, தன்னியக்க இயந்திரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் இரத்தினச் சுருக்கமாகப் பட்டியலிடுகிறது இந்நுால். இன்றைய தலைமுறை மாணவர்கள் […]

Read more

பி.சி.டாக்டர்

பி.சி.டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. இன்று கணிப்பொறி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். சின்னச் சின்ன இருமல், தும்மலுக்கு வீட்டு வைத்தியம் செய்துகொள்வதுபோல அவரவர் வீட்டக் கணினியில் ஏற்படும் சிறுசிறு பழுதுகளை தாங்களே சரிசெய்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிசி டாக்டர்

பிசி டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.130. கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. இந்நூல் கணினியின் வரலாறு, அவற்றில் உள்ள பல வகைகள், கணினியின் இன்றைய வளர்ச்சி நிலை பற்றி கூறுகிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் கணினி சார்ந்த பல சொற்களைப் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. மதர்போர்ட், சிப்செட், போர்ட்ஸ், புராசெசர், ஹார்ட் டிஸ்ஸ் டிரைவ், சிடி, டிவிடி, ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ், RAM, இன்புட் டிவைஸஸ், யுபிஎஸ், லைட் பென் என கணினியில் உள்ள பல பாகங்களைப் […]

Read more

கம்ப்யூட்ராலஜி

கம்ப்யூட்ராலஜி, காம்கேர் புவனேஸ்வரி, விகடன் பிரசுரம், பக் 448, விலை 310ரூ. மூலை முடுக்குகளில் வாழும் பாமரருக்கும் உலகின் சாளரங்களைத் திறந்து காட்டிய பெருமை கணினிக்கே உரித்தாகும். பூகோளத்தின் எந்த பகுதியையும் இன்று மடியின்மேல் பார்த்து மகிழ முடியும். விண்வெளிக் கோள்களின் இயக்கத்தையும் வீட்டு மேசையில் பார்க்க இயலும். வங்கிக்கணக்குகளை உள்ளங்கையிலேயே பரிவர்த்தனை செய்ய முடியும். உள்ளூரையே சரியாக புரியாதோர் மலிந்த காலம் சென்று உலகைப் பெருமளவில் புரிந்து வியக்கும் கிளர்ச்சியான அனுபவங்களை படையலிட்டது கணினி. கணினியோடு இணைய இணைப்பை ஏற்படுத்தியது மனித இனத்தின் […]

Read more

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும், ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.220, விலை ரூ.222. முழுநேரமும் கணினி முன் அமர்ந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வீடுகளிலும் கூட கணினிகள் நிறைய வந்துவிட்டன. போதாதற்கு மடிக் கணினிகளைச் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த முடிகிறது. கணினி நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்புகள், உடல் வலி, மன இறுக்கம், உடல் களைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களை இந்நூல் விளக்குகிறது. கணினியால் ஏற்படும் […]

Read more

கணினித் தமிழ்

கணினித் தமிழ், இல. சுந்தரம், விகடன் பிரசுரம், பக். 368, விலை 230ரூ. கணினி, இணையம் இவை இன்று மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறி வருகின்றன. இந்நிலையில் இவற்றைப் பற்றிய புரிதலை அனைத்துத் தரப்பினருக்கும் உண்டாக்கும் வகையில், ‘கணினித் தமிழ்’ என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அலகுகளில் ஆசிரியர் கணினி, இணையம் சார்ந்த செய்திகளைப் பதிவு செய்துள்ளார். கணினியின் பாகங்கள், அதன் செயல்பாடு, அதில் பயன்படும் வன்பொருட்கள், மென்பொருட்கள், இன்று பெருகி வரும் நவீன மொபைல்பேசிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள், […]

Read more

கணினித்தமிழ்

கணினித்தமிழ், முனைவர் இல.சுந்தரம், விகடன் பிரசுரம், விலை 230ரூ. நம் அன்றாட வாழ்வில் அனைத்து செயல்பாடுகளும் கணினி இல்லாமல் நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாள்வதற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது. வன்பொருள், மென்பொருள் தொழில் நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்து கொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் எளிதில் புரியும் வகையில் முனைவர் இல.சுந்தரம் விரிவாக விளக்கிக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.   —- மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கதைகள், […]

Read more

தந்தை பெரியார் பிறந்தநாள் மலர்

தந்தை பெரியார் பிறந்தநாள் மலர், விடுதலை வெளியீடு, சென்னை, விலை 120ரூ. தந்தை பெரியாரின் 136வது பிறந்த நாளையொட்டி விடுதலை வெளியிட்டுள்ள மலர், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது. மறைந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கி. வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட பல தலைவர்கள், பிரமுகர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வண்ணப்படங்களும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள், ஜெ. வீரநாதன், பாலாஜி கணிண […]

Read more

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள்

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 110ரூ. ஜெயகாந்தன் பற்றிய 100 அரிய தகவல்கள் அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ் இலக்கிய உலகில் புரட்சிசெய்தவர். அவருடைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் வருபவர்கள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, உயிரும், உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஜெயகாந்தன் சினிமா உலகத்திலும் தடம் பதித்தவர். உலகப்புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரேயின் சாருலதா, அகில இந்திய ரீதியில் முதல் பரிசு வாங்கியபோது இவருடைய உன்னைப்போல் ஒருவன் மூன்றாம் பரிசு பெற்றது. ஜெயகாந்தன் பற்றிய அரிய […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. வாழ்ந்த மண்ணின் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்ப்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறித் இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற சந்தர்பங்கள் எல்லாம், அவனது சொந்த மண்ணின் நினைவு வந்து […]

Read more