திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், இராஜாமணி, சாகித்ய அகாடமி, பக். 104, விலை 50ரூ. திருலோக சீதாராம் எனும் சித்த சாகரம் திருலோக சீதாரம், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் தாய்மொழி, தெலுங்கு, கடுமையான சுய உழைப்பால் கல்வியில் மேம்பாடு உற்றார். ஆங்கிலத்திலும் அபாரமான அறிவு உடையவராக திகழ்ந்தார். கணக்கெழுதுவதிலும் அவர் திறமை அடைந்தார். இதன் மூலமும், தன் வருமானத்தை அவர் பெருக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவர், வறுமையில் அழுந்தியிருந்தார். ஆனால் தம்முடைய கடைசி. 13 ஆண்டுகள், அவர் வளமுற்று, வாகன […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ. 1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. […]

Read more

என் ஆசிரியப்பிரான்

என் ஆசிரியப்பிரான், கி.வா. ஜகந்நாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, பக். 192, விலை 145ரூ. தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூலான உ.வே. சாமிநாதையரின் என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில், அந்நூலில் இடம் பெறாத அவர் வாழ்வில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களைச் சுவையாகவும் சுருக்கமாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் உ.வே.சா.வின் மாணாக்கரான கி.வா. ஜகந்நாதன். ஒவ்வொரு சம்பவத்தையும் படிக்கும்போதும் பழந்தமிழ இலக்கியங்களைத் தேடியெடுத்துப் பதிப்பில் உ.வே.சா.வுக்கு இருந்த அளப்பரிய ஆர்வமும், அந்தப் பணியில் அவருக்கு நேர்ந்த இன்னல்களும், […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?, நோசன் பிரஸ், சென்னை, விலை 350ரூ. 40 ஆண்டுகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை அலிஸ் கே. ஜோஸ்ன் வாழ்க்கை வரலாற்று நூல். ஒரு சாதாரணப் பெண் கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப்பெண் எவ்வாறு இறையருளால் மன உரம் பெற்றாள் என்பதைக் கூறுவதே நூலாசிரியரின் நோக்கம். சுயநலத்தோடும், வன்முறையோடும் தீயவற்றைச் சொல்லிலும், செயலிலும் மறைவாகவும், வெளிப்படையாகவும் வெட்கமின்றி வெளிப்படுத்தும் மனிதர்களிடையே நன்மையில் நாட்டம் கொண்டு குற்றங்குறைகளை நீக்கி வாழ முயற்சிப்போர் பலர் உள்ளனர். அவவ்கையில் நல்ல ஆசிரியையாக வாழ்ந்து […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 264, விலை 140ரூ. விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, இந்து மித்திரன் இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பேசுவது பழங்கதை அல்ல என்பது முதல் போதி தர்மர் வரை, 31 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் அணு இயக்கத்தை, டாக்டர் பிர்டஜாப் காப்ரா என்ற விஞ்ஞானி புகைப்படமாக எடுத்திருக்கிறார். இதையே நம் முன்னோர்கள், சிவனின் ஆனந்த தாண்டவமாக வர்ணித்திருக்கின்றனர் என விளக்கி உள்ளார். […]

Read more

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. திருமணங்களில் தவறாது ஒழிப்பது நாதசுர இசை. இந்த மங்கல இசையை இசைப்பதில் புகழ் பெற்ற கலைஞர்கள் பலர். இவர்களில் முடிசூடா மன்னராக விளங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவரைப்போலவே புகழ்பெற்று விளங்கிய காருகுறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, செம்பொன்னார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவிடை மருதூர் வீருசாமி பிள்ளை, ஷேக் சின்ன மவுலானா உள்பட 126 நாதசுர வித்துவான்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் இது. மிகவும் சிரமப்பட்டு […]

Read more

மாமனிதர் நரேந்திரமோடி

மாமனிதர் நரேந்திரமோடி, திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குஜராத் முதல் மந்திரி – பிரதமர் வேட்பாளர் இப்படி பல சிறப்புகள் பெற்ற நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அழகாகவும் எழுதியுள்ளார் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.   —- ஸ்ரீ அருணாசல பஞ்சரத்தினம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீரமண பக்த சமாஜம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ. ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை. புலமையும் பக்தியும் […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ. பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார். இந்தக் கதைகளைத் தேர்வு செய்தது பற்றியும், கதைகளின் சிறப்பு பற்யும் விளக்கி, ராமகிருஷ்ணன் எழுதியுள்ள 22 பக்க முன்னுரை நன்றாக உள்ளது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் உள்பட சில எழுத்தாளர்களின் 3 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில எழுத்தாளர்களின் 2 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் ராமகிருஷ்ணனின் 2 […]

Read more

சித்தரைத் தேடி

சித்தரைத் தேடி, கயிலை புலவர் சீ. சந்திரசேகரன், விஜயா பதிப்பகம், கோவை, பக். 592, விலை 400ரூ. ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர் சித்தரான கதை தெரியுமா? சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப்போல், கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும் குரங்கைப்போல், ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை, தவம் எனும் பெருமுயற்சியால் தன்வயப்படுத்தியவர்களே சித்தர்கள். சித்தர்களைப் பற்றிய புத்தகங்கள், சமீபத்தில் பெருமளவில் வந்துள்ளன. ஆனால் இந்த நூலில் ஆசிரியர் மிக முயன்று, அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று 200பேர்களது வாழ்க்கை […]

Read more

தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. தமிழ்ச் சமூகம் எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. சங்க காலத் தமிழர்களுக்கும், இன்றைய தமிழர்களுக்கும் நடை, உடை, பாவனை அனைத்திலும் எத்தனையோ மாறுதல்கள். இதுகுறித்து நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. அதாவது சங்க காலக் கல்வி முறை, தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல், தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் இலக்கணம், கண்ணதாசன் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்பட 142 தலைப்புகளில் தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம் […]

Read more
1 31 32 33 34 35 46