பாதுஷா என்ற கால்நடையாளன்

பாதுஷா என்ற கால்நடையாளன், உண்ணி.ஆர், தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175. இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை […]

Read more

எங்க ஊரு வாசம்

எங்க ஊரு வாசம், பாரததேவி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை ரூ.130. கரிசல் எழுத்தாளர் கி.ராவுடன் இணைந்து நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தவர் பாரததேவி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. வீட்டுப் பெரியவர்கள் கதை சொல்வதுபோல மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளால் கிராம வாழ்க்கையை விவரிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைக் கிராமத்துக்கே அழைத்துச்செல்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 27/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

காசி கதைகள்

காசி கதைகள், மயிலம் அய்யப்பன், காவ்யா, விலை160ரூ. நூலின் பெயர் காசி கதைகள் என்றாலும், இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் காசு, துட்டு, பணம் தொடர்பான சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மயிலம் வட்டாரத்து மக்களின் அன்றாட வாழ்வீயல், அவர்களது குடும்பம், வழிபடும் தெய்வம் என்று பல அம்சங்களை இந்தக் கதைகள் தாங்கி இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. நீரோட்டம் போன்று அமைந்துள்ள நடை, இந்த நூலுக்கு வலுவூட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028021.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்த நூலில் இடம் பெற்றுள்ள 17 சிறுகதைகளும், உணர்ச்சிப் பிரவாகமாக ஜொலிக்கின்றன. ஆசிரியரின் வித்தியாசமான மொழி நடை உயிர்ப்புடன் கூடி, அத்தனைக் கதைகளுக்கும் கூடுதல் சுவாரசியத்தைக் கொடுக்கின்றன. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை காட்சிப்படுத்தி இருக்கும் ஆற்றலால் நம்மை பிரமிக்க வைத்துவிடுகிறார். நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குறள் இனிது கதை இனிது

குறள் இனிது கதை இனிது, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 200ரூ. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 108 குறள்களைத் தேர்ந்தெடுத்த அவற்றின் பொருளை விளக்கும் வண்ணம் ஒரு பக்க கதைகளாக எழுதி இருக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆசிரியர். புராண இதிகாசம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையிலான பல நிகழ்வுகளைப் படம்பிடித்து அவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டு கதைகளை பின்னி இருப்பது படிக்க சுவாரசியமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

விலைக்கு வந்த வாழ்வு

விலைக்கு வந்த வாழ்வு, அமரந்தா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. தெலுங்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இந்நுால். இதில், தலைசிறந்த கதையான, ‘கவுரவ ஒப்பந்தத்தில்’ பெண்கள் குறித்து எதிரெதிர் மனநிலை கொண்ட இரண்டு ஆடவரின் உளவியலைப் படம் பிடிக்கிறது. இந்நுாலில் இடம் பெற்றுள்ள பெண் பாத்திரங்கள் தைரியமிக்கவர்களாக, துணிந்து முடிவெடுப்பவர் களாக உள்ளனர். பிரியத்தையும் காமத்தையும் வேறுபடுத்தி பார்க்கத் தெரியாத ஆண்கள், அன்பிற்குரிய பெண்களைப் பாடாய் படுத்துவதே, ‘அப்பாவிப் பெண், காம விளையாட்டு’ போன்ற சிறுகதைகளைச் சொல்லலாம். நன்றி: தினமலர், 7/4/2019 இந்தப் […]

Read more

பேரன்பின் பூக்கள்

பேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் யூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், புக்ஸ் ஃபார் சில்ரன்,  விலை 350ரூ. அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு […]

Read more

திருக்கார்த்தியல்

திருக்கார்த்தியல்,ராம் தங்கம், வம்சி புக்ஸ், விலை: ரூ.170. குரலற்றவர்களின் பெருங்குரலாய்! என் தலைமுறையின் பலரும் கடந்துவந்த பாதைதான் ‘திருக்கார்த்தியல்’ செந்தமிழுக்கானதும். கேவும் ஆன்மாவைத் தவிர்த்துக் கடக்க முடியவில்லை. பொருளாதார, அரசியல் அரங்குகளில் பலமாய் வியாபித்திருக்கும் சமூகங்களின் அக வேர்களில் நடத்திய விசாரணையே இ்த்தொகுப்பிலுள்ள கதைகள். சமூக அவலங்களை அதன் அக, புறக் கூறுபாடுகளோடுடனான உணர்வுகளாய்க் கொட்டுகிறது. ராம், அடிப்படையில் ஆய்வாளராய் இருப்பதால் அடித்தள மக்களின் வாழ்வு அதன் ஆணிவேரான தொன்மங்களோடு கதைகளில் தெறிக்கிறது. – ஜோ டி குருஸ் நன்றி: தமிழ் இந்து, 30/3/19. […]

Read more

சர்க்யூட் தமிழன்

சர்க்யூட் தமிழன், புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 100ரூ. அறிவியல் புனைகதை புத்தகமான இதில் எல்லா கதைகளும் எதிர்காலத்தில் நடக்கிறது. அப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவுதூரம் முன்னேறியிருக்கும். நம் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு, நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து விருந்து படைத்திருக்கிறார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூலாசிரியர். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்

ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும், கவியேோகி வேதம், மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம், விலை 140ரூ. அற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை. நாயுருவி என்ற கதையில், சுகுமார், செல்லாயி வாழ்க்கை மாற்றங்கள், கடைசியில் இருவரும் அல்லல்பட்டு, கிராமத்தில் ஊழலற்ற சேவை செய்யும் போது, பழைய காதலர்கள் மீண்டும் இணைவதை ஆசிரியர் கூறுகிறார். வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம், வசதி வாய்ந்த வாழ்க்கை மட்டும் மன நிம்மதி தராது என்பதை வெளிப்படுத்தும், அனுபவச் சுழல்கள் பலவிதமாக பல […]

Read more
1 16 17 18 19 20 80