கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள், மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா வெளியீடு, சென்னை – 17, பக்கம் 192, விலை 90 ரூ. அன்பையும் அறத்தையும் அடிநாதமாகக் கொண்டது கன்ஃபூசியனிஸம். இதை சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் கன்ஃபூசியஸ். உண்மை, இரக்கம், ஒருமுகப்படுத்துவது, சகோதரத்துவம், தாய்மையைப் போற்றுதல், கல்வி, ஒழுக்கம் போன்ற பலவற்றைக் குறித்த கன்ஃபூசியஸின் தத்துவங்களை விளக்கும் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், கசப்பு மருந்துக்கு இனிப்புப் பூச்சுடன் தத்துவங்களை அளிக்கும் இந்த […]

Read more

தம்ம பதம்

தம்ம பதம், ஸ்ரீ பால சர்மா, நர்மதா பதிப்பகம், பக்கம் 160, விலை 70 ரூ. “தம்ம பதம்” போதி மரத்து புத்தன் போதித்த வாழ்வியல் வேதம். ஞானத்தின் நுழைவாயில் எனத் துவங்கி, புத்தர் காட்டிய தியான நெறியோடு புத்தகம் நிறைவடைகிறது. 29 வயதில் இல்வாழ்க்கையைத் துறந்து, 35 வயதில் ஞானோதயம் பெற்று 80 ஆண்டுகள் நிறையப் பெற்று அருள் நெறி சார்ந்த தூய்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்த புத்தரின் வாழ்வியல் வேதம் தம்ம பதம். கவுதம புத்தரின் சுவையான அரிய செய்திகளோடு, புத்தபிரான் […]

Read more

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல்

மனிதனின் நிரந்தரத் தேடல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, விலை 150 ரூ. நான் தியானம் செய்ய ஆரம்பித்த போது அதில் இவ்வளவு ஆனந்தம் காண்பேன் என நான் ஒருபோதும் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எவ்வளவு அதிகமாக நான் தியானித்தேனோ அவ்வளவு எனது அமைதியும், ஆனந்தமும் அதிகரித்தன’ என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில கொல்கத்தாவிலுள்ள ‘யோகோதா சத்தங்க […]

Read more

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் (கட்டுரைகள்), எச். பீர்முஹம்மது, அடையாளம் வெளியீடுகள், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621301. விலை 170 ரூ. கிழக்குக் காற்று அரபுலக அறிவு, அரசியல், கலாசார மதிப்பீடுகளைப் பற்றிய பார்வைகள் மீதான பார்வைகள். ஓரியண்டலிசம் அல்லது கீழையியல் என்பது வரமாகவும் சாபமாகவும் உருவான ஒரு கிளவி. தமக்குள் பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் உடைய ஆசிய நிலப்பரப்பின் சிந்தனைப் போக்குகளை ஒற்றை பரிமாணமாக முத்திரைக் குத்த இந்தச் சொல், மேற்குலகின் மேட்டிமை அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அதனூடாக கிழக்கின் பாரம்பரியங்கள் பலவற்றை […]

Read more

ரமண மஹரிஷி

ஸ்ரீரமண மகரிஷி- பாலகுமாரன்; பக்.344; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-600 002 பெரிய புராணத்தை அகத் தூய்மையோடு படித்து முடிப்போர் “தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சிவ பக்தியால் முணுமுணுப்பது உண்டு. அதுபோல் பாலகுமாரன் எழுதியுள்ள ஸ்ரீரமண மகரிஷியைப் படிப்போருக்கு “ரமணா.. ரமணா..’ என்று பக்திப் பெருக்கால் உள்ளம் உருகும். திருவண்ணாமலையை ஒரு மண்டலம் கிரிவலம் வந்த மகிழ்வும் பூரிப்பும் மகிரிஷியின் இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஏற்படுகிறது. பக்தியோ, நாம சங்கீர்த்தனமோ, மந்திர ஜபமோ, யாக விஷயங்களோ, ஹடயோகமோ.. எதுவாக இருந்தாலும் மனத்தை அழித்து […]

Read more

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே – இளையராஜா; பக்.144; ரூ.150; குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10 இசையமைப்பாளர் இளையராஜாவின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் கவித்துவமான சிந்தனைகளை தத்துவார்த்தரீதியில் வெளிப்படுத்தும் தொகுப்புதான் இந்நூல். இளையராஜா ஆன்மிகம் குறித்தே அதிகம் சிந்திக்கிறார் என்பதற்கு இதில் உள்ள பல கவிதைகள் சான்று. “நடுத்தர வயதிலேயே பாம்பு சட்டையை உரிப்பதைப் போல, பசுமரம் பட்டையை உரிப்பதைப் போல, உலகாயத விஷயங்களை உதறி தாமரையிலைத் நீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பயின்றவர்’ என்று கவிஞர் வாலி நூலின் அணிந்துரையில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு […]

Read more

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் – கமலா கந்தசாமி; பக். 128; ரூ. 60; நர்மதா பதிப்பகம், சென்னை – 17 ‘வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?’ – இது “மரணத்துக்கு பின்பான உலகம்’ பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்களாக இந்நூலில் தந்திருக்கிறார் கமலா கந்தசாமி. ஓரிடத்தில் அந்த ஞானி கூறுகிறார், ‘நீ […]

Read more
1 6 7 8