அண்ணா அருமை அண்ணா

அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 90ரூ. பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே அறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி படிப்பின்போது அவரோடு அடிக்கடி அளவளாவும் வாய்ப்பைப் பெற்று 26 வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பப்பட்டு, தொடர்ந்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர் என்று அரசியலில் நிறைய முத்திரைகளை பதிப்பித்தவர் வி.ஐ.டி.பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று 4 முதல் அமைச்சர்களுடன் அரசியல் பணியாற்றிய ஜி. விஸ்வநாதன், அண்ணா பற்றி முழுமையாக […]

Read more

நேரு குடும்ப வரலாறு

நேரு குடும்ப வரலாறு, முஹம்மத் யூனுஸ், விகடன் பிரசுரம், விலை 210ரூ. பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் மனிதர்கள் எப்படி சந்தர்ப்பவாதிகளாகி, சுயநலம் பேணி, நாட்டையும் மக்களையும் மறந்து, மாறி விடுகின்றனர் என்றும், உண்மை நண்பர்கள், பகைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்றும் ஒரு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல முக்கிய முடிவுகள் எப்படி விளைந்தன என்றும் சுவைபட கூறுகிறது இந்த நூல். நான்கு பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக காந்தீய கொள்கைகளை, சுதந்திரப்போராட்டம் – அதற்காக ஏற்பட்ட இன்னல்களை, இடர்களை தெளிவாக்குகிறது. […]

Read more

இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி.கா. மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்டவீரர், சீறாப்புராண உரையாசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட கவி.கா. மு. ஷெரீப், தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிதயர் ஆற்றியிருக்கும் அரும்பணிக்கு அடையாளமாகவும் திகழ்பவர். உயிர் நேயம் மனித உணர்வின் உச்சம். இதை இஸ்லாம் இயல்பான வாழக்கை முறைக்குள் எந்தளவு நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கும் நூல் இது. சமூக நல்லிணக்கம் நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய […]

Read more

ஈழம் அமையும்

ஈழம் அமையும், கா. அய்யநாதன், கிழக்குப் பதிப்பகம், பக். 336, விலை 250ரூ. இலங்கையில் அரசியல் சம உரிமைக்காக அறவழியில் போராடிய மக்கள், அரச பயங்கரவாதத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் ஓர் இன அழித்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது சிங்களப் பேரினவாதம். சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. ஈழம் புதைக்கப்பட்டுவிட்டது. இந்த திரைமறைவு நாடகம் எப்படி அரங்கேறியது. அதற்கு துணை நின்றவர்கள் யார்? இவற்றையெல்லாம் விரிவாக வரலாற்றுப் பின்னணி கொண்டு, அழுத்தமான அரசியல் […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பாயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பாயன், செ.ராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 120ரூ. தமிழக சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர், முதல் அமைச்சர், எம்.பி., எதிர்கட்சித்தலைவர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர், வெளிநாட்டுத் தூதர், மாநில ஆளுநர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர் டாக்டர் ப. சுப்பராயன். இவருடைய வாழ்க்கையே நிரந்தரமான பாடப்புத்தகம். அதைப்புரட்டிப் படிக்கப்படிக்க ஏராளமான புதுச்செய்திகள் எந்தக்காலத்துக்கும் பொருந்தும்படி கிடைத்துக்கொண்டேயிருக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலில் பல புதிய செய்திகள், படங்கள், ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் […]

Read more

அம்மா ஓர் உலகளாவிய தலைவி

அம்மா ஓர் உலகளாவிய தலைவி, ஸ்ரீ நித்யா பதிப்பகம், விலை 300ரூ. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி, அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஜி.ஆர்.ராமதாஸ் எழுதிய புத்தகம். அன்னை தெரசா, ஜோன் ஆப் ஆர்க், விக்டோரியா மகாராணி, மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தி ஆகியோருடன் ஒப்பிட்டு ஜெயலலிதா சிறப்புகளை எடுத்துக்கூறுகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை, துணிச்சலுடன், தொலைநோக்குடனும் தீர்த்த அவர் மதிநுட்பத்தை போற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா பற்றிய சிறந்த புத்தகம், வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.   —- பெரியாழ்வார், […]

Read more

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 40ரூ. திராவிடர் இயக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கொண்டது. இதன் வரலாறு குறித்தும், இந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொருவரின் இன்றைய இனிய வாழ்க்கைக்கு திராவிடர் இயக்கமே காரணம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மேலும் பின்னிணைப்பாக, திராவிடர் சங்கம் தோன்றிய வரலாறு, நீதிக்கட்சி காலத்தில் சமூக நீதி ஆணைகள், சமூக சீர்திருத்த ஆணைகள் நூலுக்கு மேலும் […]

Read more

காஷ்மீர் அமைதியின் வன்முறை

காஷ்மீர் அமைதியின் வன்முறை, கவுதம் நவ்லாகா, தமிழில் வெண்மணி அரிதரன், விடியல் பதிப்பகம், விலை 25ரூ. காஷ்மீருக்குள் எட்டிப்பார்க்கும் ஜன்னல் குடும்பத்துக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரச்னைகள்! நாட்டு நிர்வாகமும் குடும்ப நிர்வாகம் போன்றுதான். காஷ்மீரில் மக்கள் ராணுவத்துக்கு எதிராகக் கல்லெறியும் போராட்டம் நடத்தினார்கள் என கேள்விப்படும்போது ராணுவத்துக்கும் மக்களுக்குமான பரஸ்பர நம்பிக்கையைப் பற்றிய சந்தேகம் நமக்கெல்லாம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் கவுதம் நவ்லாகா காஷ்மிரின் உள்ளே நடப்பவற்றை நமக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு குடும்ப ஜனநாயகத்தின் அம்சங்களாக அந்த நிகழ்வுகள் இல்லை. கட்டாயப்படுத்துவதன் மூலம் அன்பைப் […]

Read more

சோசலிசம் தான் எதிர்காலம்

சோசலிசம் தான் எதிர்காலம், டாக்டர். ரெக்ஸ் சற்குணம், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூகத்தின் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் துறைக்கு வெளியே எட்டிப் பார்ப்பதும், சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதும் மிகவும் குறைவு. இவர்களிடமிருந்து டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மாறுபட்டவர். மருத்துவத் துறையிலும் மார்க்சியத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் இயங்கிக்கொண்டிருப்பவர். தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை மருத்துவத்துறையிலும் மக்கள் நல்வாழ்வைப் பேணும் நடவடிக்கைகளிலும் பயன்படுத்துபவர். முதலாளித்துவம் ஊதிப்பெருத்து ஏகாதிபத்தியமாகத் தலைவித்திதாடும் இந்தக் காலக்கட்டத்தில் ‘சோசலிசம்தான் எதிர்காலம்’ என்று இந்த நூலின் மூலம் டாக்டர் ரெக்ஸ் […]

Read more
1 19 20 21 22 23 44