புதுவைப் புயலும் பாரதியும் காற்றென வந்தது கூற்றம்

புதுவைப் புயலும் பாரதியும் காற்றென வந்தது கூற்றம், முனைவர் . ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.125. புதுவையில் பெரும்புயல் பற்றி, பாரதியின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நுால். செய்திக் கட்டுரையாக, கவிதையாக, நிவாரணப் பணியாளராக என பன்முகமாக வெளிப்பட்டுள்ளது. புதுவையில் பாரதியார் வசித்தபோது, எத்தனையோ முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் பெரும் பாதிப்பு ஏற்படுத்திய புயல் ஒன்றும் வீசியது. அது தொடர்பான நிகழ்வுகளை செய்திக் கட்டுரைகளாக வடித்துள்ளார் பாரதி. கவிதைகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. புயல் வீசுவதற்கு முந்தைய தினம் புதிய வீட்டில் […]

Read more

சபாஷ் சாணக்கியா – பாகம் 2

சபாஷ் சாணக்கியா – பாகம் 2. சோம வீரப்பன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலைரூ.170.   வாய் சொல்லில் வீரர், யாருக்கு உதவக்கூடாது, சொந்த காலில் நிற்பது, கடல் கடந்து பொருள் ஈட்டுவதன் தேவை, யாரை எதற்கு மதிக்க வேண்டும், வெற்றி எப்போது கைகூடும், பெரியோர்களின் ஆலோசனை ஏன் அவசியம், நம் பலம், பலவீனம் எது, சேவல், கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை போன்ற வாழ்வியல் அடிப்படையை விவரிக்கிறது இந்த நுால்.   எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நான் […]

Read more

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!, எஸ்.வெங்கடேசன், விஜயா பதிப்பகம், விலைரூ.150. ‘இவ்வளவு பிரச்னைகளுடன் சந்தோஷமாக வாழும்போது, நீங்களும் சந்தோஷமாக வாழலாம் அல்லவா’ என கேட்கத் தோன்றும் அளவுக்கு அனுபவங்களில் இருந்து படைக்கப்பட்டுள்ள நுால். குடும்பம், கல்லுாரி காலம், பிரச்னையை எதிர்கொண்டது, அதில் இருந்து மீட்டது என உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். ‘கலகலப்பாக இருக்க முயலுங்கள்’ என துவங்கி, ‘வாழ்க்கையை காதலியுங்கள்’ என முடியும் 31 தலைப்புகள், வாழ்வியல் உண்மைகளை உணர்த்துகின்றன. பழமொழி, பேச்சு வழக்கு, திருக்குறள் பயன்படுத்திய எளிய மொழி நடை; […]

Read more

அன்னதானம்

அன்னதானம், இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர், இரா.கண்ணன், வெளியீடு: இரா.கண்ணன், பக்.644; விலை ரூ.1000. “தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பது முதுமொழி. அன்னமே உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. உயிர்களின் பலமும் ஒளியும் எப்போதும் அன்னத்தாலேயே வளர்ச்சி பெறுகின்றன. அன்னம் தண்ணீரால் உண்டாகிறது. இத்தண்ணீரால் உண்டான அன்னம் இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை. அதனால்தான் இவ்விரண்டின் பெருமைகளையும் பீஷ்மர் (மகாபாரதத்தில்) எடுத்துரைக்கிறார். “பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால் இறைவன் இருமடங்கு அருளை வழங்குகின்றான்’ என்கிறது நமது வேதம். “பசிப்பிணியால் வாடுகின்ற அனைவரும் அன்னதானம் ஏற்பதற்குரிய தகுதி […]

Read more

சித்ரவதை முகாம்

சித்ரவதை முகாம், ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.140. குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே போதும் என்பதை உணர்த்தும் நுால். குழந்தைகளுக்கு…* இரண்டு வயதில், கல்வி சுமை ஏற்றுவது சரியா* பக்கத்து வீடு, உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, கணவனும் மனைவியும் பணிக்கு செல்வது நியாயமா.இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறது. குழந்தையை சரியாக வளர்க்கிறேனா என நெருடல் ஏற்படுத்தும் உரையாடல்கள் ஏராளம். இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, வரம்பு மீறிய செல்லம், நடத்தை மீறும் பெற்றோர் என […]

Read more

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிகரம் ச செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், பக்கம் 520, விலை 520ரூ. சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற பல வழக்குகளை நடத்தி வெற்றி பெற்ற இந்நூலாசிரியர் இலக்கிய உலகிலும் சிகரம் செந்தில்நாதன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழ் இலக்கியத்திற்கு இதுவரை 30 நூல்களை இயற்றியுள்ளார். தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி பலரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை தொகுத்துள்ளார். இந் நூலின் முகப்புக் கட்டுரையில் கட்டுரையிலே தொன்மையான நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் உரிய இந்தியாவில் வடக்கே சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் தெற்கே […]

Read more

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும், ந.அறிவரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.200. சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்தான். அவர் தம்முடைய பாடல்களில் இயற்கை சூழல், இயற்கைக் காட்சிகள், இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றையே பெரிதும் காட்சிப்படுத்துவார். குறிஞ்சிக் கபிலரான அவரை, “இயற்கைக் கவிஞர்’ என்றும் போற்றலாம் என்கிறது இந்நூல். கபிலரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, கபிலரின் படைப்பும் பாடுபொருளும், கபிலரின் பாடல்களில் மொழிநடை ஆகிய மூன்று உட்தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் கபிலரின் பிறப்பு, குலம், பெயர்க் […]

Read more

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள்

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.300. எம்.எல்.பிள்ளை, பூசைப்பிள்ளை, தமிழ்க்காசு என்ற பெயரிலும் போற்றப்பட்டவர் கா.சு.கா., காசு பிள்ளை என்ற கா.சுப்பிரமணிய பிள்ளை; அவரது கடைசி காலத்தில், ‘காசில்லாத காசு’ என்ற கேலிக்கும் உள்ளானவர். சைவம், சட்டம், இலக்கியம் என்ற அறிவுத் துறைகளில் காலம் முழுதும் இயங்கி வந்தார். இவரது ஆய்வு முறையை மூல முறை, ஒப்பீட்டு முறை, தருக்க முறை என பகுப்பார் பேராசிரியர் கருவை பழனிசாமி. தமிழுக்குப் பெருமை தேடியவர்; அதன் மேன்மையை நிறுவியவர்; தன்னலங்கருதாது உழைத்தவர். […]

Read more

வழிகாட்டும் விவேக சிந்தாமணி

வழிகாட்டும் விவேக சிந்தாமணி, நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க், பக்.112, விலை ரூ. 100. விவேக சிந்தாமணி இரு பாகங்கள் கொண்டது. அதில் இடம்பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 245. அதில் 98 செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து நூலாசிரியர் விளக்க உரை அளித்திருக்கிறார். “விவேகம்’ என்றால் நல்லது எது கெட்டது எதுவென்று பகுத்துணரும் அறிவு. “சிந்தாமணி’ என்றால் ரத்தினக்கல் – விலைமதிப்பற்றது என்று விளக்கமும் கூறுகிறார் நூலாசிரியர். “கூடா நட்பு’ , “அற்பரின் நட்பு கூடாது’, “வேண்டாம் நட்பு’, “நட்பின் உயர்வு’, “சான்றோர் நட்பு’- இவையெல்லாம் […]

Read more

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது, தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம், பக்.120, விலை  ரூ.100. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்வின் பல்துறை சார்ந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான புரிதலும், கருத்துகளும் உடையவராக இருந்திருக்கிறார். கப்பல் ஓட்டிய தமிழராக, தொழில்முனைவோராக இருந்த அவரே, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ்நூல்களைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். வ.உ.சி.யின் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டும்விதமாக பலரால் எழுதப்பட்ட 12 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருமூலர் […]

Read more
1 2 3 4 88