சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே, மா (டி.எஸ்.பத்மாவதி), மாயா பதிப்பகம், குழந்தைகள் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர். பெற்றோர் பணிக்கு செல்வதால், அவர்களால், குழந்தைகளிடம் முழுமையாக நேரத்தை செலவு செய்ய முடியவில்லை. தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள், இன்று பெரும்பாலான வீடுகளில் இல்லை. அவர்களிடம் வாழ்க்கை நெறி தொடர்பான கதைகள், சம்பவங்களை கேட்கும் பாக்கியமும், குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு, வாழ்க்கை நெறி கல்வியைப் போதிப்பது என்பது காணாமல் போய்விட்டது. இந்த குறையை போக்கும் வகையில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் வழியிலேயே […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், இரா. காமராசு, சாகித்திய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், இதுதான் […]

Read more

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள்

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள், தீபம் எஸ். திருமலை, செந்தூரான் பதிப்பகம், பக். 200, விலை 90ரூ. தெனாலிராமன் குறும்பு, மிருகக்காட்சி சாலை கலாட்டா, ஞானம் வெளியே இல்லை, இறைவனுக்கு உதவிய இரண்யன், பொறுப்பான மருமகள், பெண்மணியால் நாட்டை ஆள முடியுமா? உங்களுக்கே தருகிறேன், தருமம் செய், இது என்ன கணக்கு கதைகள், படிக்கும் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5)

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5), பாமதி மைந்தன், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 48ரூ. பரந்த உலகில் பார்க்கும் காட்சிகள் எல்லாமே ஒவ்வொரு பாடம் சொல்லும். நாம்தான் அதனை கவனிப்பதில்லை. அந்த உண்மையே கருவாகி, கற்பனையில் கதைகளாகி, உருவெடுத்து நற்பண்புகளும் நல்லொழுக்கமும், பக்தியும் வளர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணத்தில் படித்து முடித்தாலும் மனத்தில் பல கணங்கள் தங்கி கனக்கச் செய்யும் சிறப்பான கதைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

ஜப்பான் நாட்டுச் சிறுவர்க கதைகள்,

  ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள், அரு.வி.சிவபாரதி, ஜீவா பதிப்பகம், விலை 80ரூ. ஜப்பான் நாட்டுச் சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எளிதில் புரியும வகையில் அரு.வி.சிவபாரதி அழகிய முறையில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

கதைகள் சொல்லும் கருத்துகள்

கதைகள் சொல்லும் கருத்துகள், ஆர். பத்மபிரியா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நீதிக்கதைகள் பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்கள் நீதிகளைப் பின்பற்றி சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பல அரிய பழைய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட நீதிகதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள்

சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள், பக்தவச்சலம் வேணுகோபால், அமராவதி வெளியீடு, விலை 140ரூ. திறமையும், சிந்தித்து செயல்படும் நுண்அறிவும் இருந்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பது தெனாலிராமன் கதைகள் மூலமாக நாம் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஆயிஷா இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், விலை 60ரூ. சிறுவர்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எளிய மொழியில் தரும் ஆயிஷா இரா. நடராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள அறிவியல் நெடுங்கதை இது. நம் தேசத்தை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்மையாளும் வெறியோடு வருகிறார்கள். அவ்வாறு நுழையும் அந்நிய சக்திகளை, அறிவியல் ஆற்றலின் சக்தியோடு குழந்தைகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் போராட்டமே இந்தக் கதை. குழந்தைகளின் அறிவியல் சிந்தனைக்கும் தேசபக்திக்கும் ஒரு ‘சலாம்’ போட வைத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: தி […]

Read more

சிறுவர்களுக்கான மகாபாரதக் கதை

சிறுவர்களுக்கான மகாபாரதக் கதை, தமிழாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, நற்பவி பிரசரம், விலை 90ரூ. மகாபாரதக் கதை எளிய தமிழில் முழுமையான சுருக்க வடிவில் சிறுவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் தொகுத்துள்ளார். வருணனைகள், அணி வகைகள், சொல் நயங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் காட்சிகளாக அமைத்திருப்பதன் மூலம் சிறுவர்களுக்கு இந்த நூலை படிக்க தூண்டுகிறது. அனைவரும் படித்து மகிழ வேண்டிய பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.

Read more

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள், பட்டத்தி மைந்தன், வசந்தா பிரசுரம், விலை 240ரூ. காலத்தால் அழியாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று. சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் 55க்கும் மேற்பட்ட விக்கிரமாதித்தன் கதைகள் விறு விறுப்பாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more
1 4 5 6 7 8 16