உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், பி.சி.கணேசன்,நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து, மு.மேத்தா, கவிதா, பக்.112, விலை 75ரூ. தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.   —-   சிறுவர்களுக்கான சிறந்த கதைகள், வைரவமணி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 70ரூ. இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.

Read more

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா, தொகுப்பு நீலன், பேசா மொழி பதிப்பகம், விலை 170ரூ. பாட்டி கதைகளை தொலைத்துவிட்ட இன்றைக்கு, தும்பிகளைத் துரத்தும் குழந்தைகளைத் தொடுவானம் ஏந்திக் கொள்வது நல்ல சினிமாக்களாலும், புத்தகங்களாலும் சாத்தியம். பள்ளிப் புத்தகங்களில் கருக்கொள்ளும் மயிலிறகுகள் குட்டிகளை ஈனும் பால்யத்தில் நமக்கு அறிமுகமாகிற அம்புலிமாமா கதைகளில், நீண்டு கிடக்கும் அரண்மனைத் தெருக்களில், இரும்புக்கை மாயாவி பறந்து வரும் கனவுக்காடுகளில், 007 துப்பறியும் தங்கத் தீவுகளில், கெளபாய் சண்டை நடக்கும் மெக்ஸிகன் மலைப் பாதைகளில் மனம் மாய வண்டாகப் பறக்கிற அனுபவத்தை இன்றைய சிறுவர்கள் […]

Read more

மாலுவின் டயரி

மாலுவின் டயரி (சிறார், பெரியவர்களுக்கான கருத்துக் களஞ்சியம்), ஞாநி, ஞானபாநு பதிப்பகம், பக். 160, விலை 225ரூ. எழுத்தாளர் ஞாநி எழுதியுள்ள மாலுவின் டயரி 10 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவருக்கான நூல். இன்னொரு பார்வையில், அது எல்லா வயதினருக்குமான நூல். ஜெனரல் பிக்ஷன் என்ற வகைப்பாட்டில் உலக அளவில் மிகச் சில நூல்களே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் இதுவே முதல் ஜெனரல் நூலாக வந்துள்ளது. எழுத்தாளனே ஒரு பாத்திரமாக தன் நூலில் வலம் வருவதே ஆத்தோகேர் வடிவமாகும். மாலுவின் டயரி இப்படி […]

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 82, விலை 50ரூ. இன்றைய குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரைக் கையாளும் வழிகளை, எளிய நடையில் விளக்குகிறது. குழந்தைகள் வளர்ப்பதை, பெற்றோரும் ஒரு சவாலாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்புத்தகம் பிள்ளை வளர்ப்பு யுக்திகள் மட்டுமல்லாமல், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, பெண்களின் மன அழுத்தம் போக்கும் வழிகள் இவற்றையும் கூறுகிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சி, ஆங்கில ஆதிக்க ஒழிப்பு பற்றி மகாகவி வெளியிட்டுள்ள கருத்துக்களை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —-   மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும், சு. தங்கவேலு, அமராவதி பதிப்பகம், பக். 48, விலை 23ரூ. பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

மீசைக்காரப் பூனை

மீசைக்காரப் பூனை, பாவண்ணன், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு தமிழ் சிறார் இலக்கியத்தில் பாடல்கள் பெரிதும் குறைந்துவிட்ட நிலையில், சமீபகாலமாகத் தொடர்ச்சியாகச் சிறார் பாடல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் பாவண்ணன். அவருடைய புதிய சிறார் பாடல் தொகுப்பு இது. ரயிலில் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

மந்திரக் கைக்குட்டை

மந்திரக் கைக்குட்டை, கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் கற்பனையை வித்தியாசமாகத் தூண்டக்கூடிய இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்தவைதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கதை வடிவிலேயே அழகாகச் சில கதைகள் சொல்லிச் செல்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.   —- மின்மினி, மொழிபெயர்ப்பு என். மாதவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளருமான என். மாவனின் […]

Read more
1 5 6 7 8 9 16