அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள், ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இந்தியா என்பது மாபெரும் புண்ணியபூமி. அதன் புதல்வர்களாகிய நாம், பக்தி, தியாகம், தர்மம், நேர்மை, அன்பு, ஒழுக்கம், வீரம் இவையெல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மிடம் ஒற்றுமை இல்லை. இந்து நெறிமுறையைப் பாதுகாக்க வீரமும் ஒற்றுமையும் அவசியம் என்பதை உணர்த்த தம் பகுத்த அனுபவப் பின்னணி கொண்டு குமுதம் ஜோதிடம் வார இதழில் வாராவாரம் தலையங்கம் தீட்டி எழுச்சி கொள்ளச்செய்தவல் […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா பே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 200ரூ. கடந்த 1779 முதல் 1815 வரை எழுதப்பட்ட, 31 கடிதங்களின் தொகுப்பு. எலிஸா எனும் ஆங்கிலேயப் பெண்மணி, கப்பல் மூலமாகவும், தரை வழியாகவும் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தது வரை பட்ட துன்பங்களும், இன்பங்களும், கடிதங்களாய் எழுதப்பட்டுள்ளன. கள்ளிக்கோட்டை ஹைதர் அலியின் ஆட்சியின் கீழ் இருந்ததால் எலிஸாவும், அவரது கணவரும், மற்றவர்களும் சிறைப்படுத்தப்பட, சோகத்திலிருந்து விடுதலை வழங்கியது, மெட்ராஸ் எனும் சென்னை பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்கள் […]

Read more

ஔவைத் தமிழ் களஞ்சியம்

ஔவைத் தமிழ் களஞ்சியம், வேம்பத்தூர் கிருஷ்ணன், சுடர்மணி பதிப்பகம், பக். 144, விலை 50ரூ. அவ்வையாருக்கு ஒரு கோட்டம் கட்டும் முயற்சியில் பல்லாண்டுகளாக பாடுபடுபவர் வேம்பத்தூர் கிருஷ்ணன். அவ்வையார் பற்றி 36 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் படிப்பவருக்கு இனிமை ஊட்டும். இக்கட்டுரை ஆசிரியர் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் அவ்வையாரை மீட்டுருவாக்கம் செய்வதில் பேரார்வம் கொண்டவர் என்பதை, அவரது இந்தத் தொகுப்பே கூறிவடும். சிவாலயம் மோகனின் முதற்கட்டுரை, திருமூலரில் துவங்கி, அவ்வை வரையில், சிவநெறி எவ்வாறு போற்றப்படுகிறது என்று கூறுகிறது. அதில் […]

Read more

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பு மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை. ஜெயகாந்தன் என்ற ஆளுமை உருவான பின்னணி, வாழ்கைப் போராட்டத்தில் எழுதுகோலை அவர் ஆயுதமாக தேர்ந்தெடுத்த அனுபவம், தமிழ் இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த அவரது எழுத்தின் துணிவு, சமூகத்தின் மீதான அவரது அக்கறை, கோபம், அவர் எழுப்பிய குரல், மண் வாசனையைத் தாண்டி மனித நெடியை வீசச் செய்த அவரது கதைகள் பற்றிய பார்வை, சினிமா சார்ந்த அவரது விமர்சனங்கள் சினிமா உலகில் எத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்தியது, மாற்று சினிமாவுக்கான அவரது […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி! ஐம்பெருங்காப்பியங்களில் பலரும் விரும்பிப் படிப்பது சிலப்பதிகாரம். வரலாற்றுக் காப்பியம், புரட்சிக் காப்பியம், புதுமைக் காப்பியம் என்றெல்லாம் பலரும் அந்த காப்பியத்தை பாராட்டி உள்ளனர். அந்த காப்பியத்தின் தலைவி கண்ணகியை, தெய்வமாக வழிபடும் வழக்கம், அது தொடர்பான பல்வேறு தகவல்களின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சைவ சமயத்தை புனருத்தாரணம் செய்த, யாழ்பாணத்து ஆறுமுக நாவலர், சிறுதெய்வ வழிபாடுகளை, கடுமையாக கண்டித்தவர். இலங்கையில் நிலவி வரும் […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ. அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து […]

Read more

பெரியார் களஞ்சியம்

பெரியார் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை, விலை 210ரூ. தந்தை பெரியார் எழுதிய, பேசிய கருத்துகள் ஏற்கனவே ஏராளமான புத்தகங்களாக பிரசுரமாகி உள்ளன. அந்த வரிசையில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன. 36வது தொகுப்பாக கடவுள் – புராணங்கள் (பாகம் 4) என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. 1959ம் ஆண்டு முதல் 59ம் ஆண்டு ஜனவரி வரை பெரியார் பேசிய கடவுள் மற்றும் புராணங்கள் பற்றிய கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. கடவுள், […]

Read more

திருவருட்பா

திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருஅருட்பா எளியவுரை, ஆறு திருமுறைகள் மற்றும் திருவருட்பா உரைநடை, புலவர் அடியன் மணிவாசகன், முதல் திருமுறை, பக். 760, விலை 400ரூ, இரண்டாம் திருமுறை, பக். 715, விலை 360ரூ, மூன்று – நான்காம் திருமுறைகள், பக். 352, விலை 200ரூ, ஐந்தாம் திருமுறை, பக். 560, விலை 280ரூ, ஆறாம் திருமுறை, தொகுதி 1, பக். 947, விலை 480ரூ, ஆறாம் திருமுறை தொகுதி 2, பக். 1122, விலை 550ரூ, திவட்பா உரை […]

Read more

இப்படிக்கு அன்புடன் – ஆனந்தியின் கடிதங்கள்

இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக். 422, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024686.html அமரர் கல்கியின் புதல்வி ஆனந்தி ராமசந்திரன் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களின் தொகுப்பு. தாயார் ருக்மணி அம்மாள், குஞ்சக்கா என்று பிரயமுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்., சதாசிவம், கணவர் ராமசந்திரன், உறவினர்கள், இளைய தலைமுறையினருக்கும் பிறருக்கும் ஆனந்தி எழுதிய கடிதங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருப்பது இந்நூலைப் பயண இலக்கியமாகவும் மிளிர வழி […]

Read more

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் பண்டைத் தமிழக வரலாறு, சேரர் – சோழர்- பாண்டியர், (20 தொகுதிகள்), பதிப்பு வீ. அரசு, தமிழ்மண் பதிப்பகம், விலை 5495ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024249.html ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அந்த இன வரலாற்றை தொல்லியல், கல்வெட்டு, பண்பாட்டு அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிக் குவித்த ஒரு சில ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900 – […]

Read more
1 30 31 32 33 34 63