அழகர் அணை

அழகர் அணை, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைஞன் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக எந்தவித புதிய அணைகளும் கட்டப்படவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ஒரு வானம் பார்த்த பூமியாகும். அங்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்கு சரியான திட்டங்கள் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவாகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்காக குடிநீர் வசதிக்கும், நீர்பாசன வசதிக்கும் அழகர் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 90 ஆண்டுகளாக அப்படியே நிலுவையில் உள்ளது. பெரியாறு, வைகை […]

Read more

ராஜா விஸ்வநாதன்

ராஜா விஸ்வநாதன், பி,விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. ஒரு நிமிட பழக்கமாக இருந்தாலும், ஓராண்டு பழக்கமாக இருந்தாலும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து பிரியும் போது அந்த மனங்கள் தவிக்கிறதே, அந்த தவிப்புக்குப் பெயர் தான் காதல்! காதல் மகிமையால் தான் இந்த பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது; இந்த உலகத்தையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ‘காதல் ஒரு மாயை; இனிக்கவும் செய்யும்… அழிக்கவும் செய்யும்’ என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

கண்மாய்க்கரை மனிதர்கள்

கண்மாய்க்கரை மனிதர்கள், கவிஞர் பொற்கைப் பாண்டியன், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. தனது கிராமத்தின் திருவிழாக்கள், பாரம்பரிய விளையாட்டுகள், விவசாய செழிப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற பசுமையான நினைவுகளை அசைபோடும் ஆசிரியர், இன்றைய எந்திர யுகத்தில் இசையெல்லாம் மாயமாகிவிட்டதே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027067.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. ஆதார் அட்டையின் அடிப்படைத் தேவை என்ன? அரசு சார்ந்த மானியங்கள், நலத்திட்டங்கள் என அத்தனைக்கும் அது ஏன் அவசியம்? அதனால் தனிமனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆதார் அட்டை குறித்து ஏ டு இசட் தகவல்களைத் தெரிந்து கொள்ள எளிய வழிகாட்டி. நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

கவலையே வேண்டாம்

கவலையே வேண்டாம், என்.வி.சுப்பராமன், யுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ், பக். 152, விலை 120ரூ. வேகமான இந்த உலகில் ஏராளமான கடமைகளுக்குள் சிக்கித் தவிப்பதாயிருக்கிறது வாழ்க்கை. இதன் இடையே இல்லம், மனைவி, மக்கள் என்ற இல்லறக் கடமையும் நடக்கிறது. தேவைகளும், உளைச்சல்களும் நெருக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் தானே தன்வசம் இல்லாத தருணங்கள் பல. ஆயுள் இழப்பு முதல் பொருள் மற்றும் பண இழப்பு குடும்பப் பொருளாதாரத்தைத் தாக்கி விடுகிறது. இழப்புக்கு ஈடு பெறுதலே காப்பீடு. ஒருவரது ஆயுள் காப்பீட்டின் பயனாளி அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரே என்பதை […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய இலக்கணமாக திகழ்ந்து வழிகாட்டிய இல்லறத்தாளின் பங்களிப்பை, ‘மனைவி அமைவதெல்லாம்’ என்ற வாழ்வியல் நுாலாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கணவனும், மனைவியும் படித்து பயன் பெறும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026692.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

காகிதம்

காகிதம், வெ. இறையன்பு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 32, விலை 50ரூ. காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும், வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்நுால். காகிதப் பயன்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இந்நுால், வண்ணப் படங்களுடன் வர்ண ஜாலம் காட்டும் நுாலாசிரியரின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 100ரூ. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும்போது குடும்பம் எனும் கூடு கலையாமல் இருக்கும். கலகலப்பாகவும் இருக்கும். அப்படியின்றி புரிதல் கோளாறினால் பிரிதல் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், இல்லறம் நல்லறமாக இருப்பதற்கான எளிய வழிகளை இதமுறச் சொல்லும் நூல். மணவாழ்க்கை மணக்க விரும்புவோர் படிக்க வேண்டிய பாடம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026367.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மனைவிக்கு

மனைவிக்கு, பெருங்கவிக்கோ, கவியரசன் பதிப்பகம், விலை 190ரூ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தமது இல்லத்தரசிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. தனிப்பட்ட இருவருக்குமான தகவல்களாக இல்லாமல், மனம் ஒருமித்த தம்பதியராக இல்லறத்தை நல்லறமாய் நடத்திட விரும்பும் எல்லோருக்குமே வழிகாட்டும் வகையிலான மடல்களாக இருப்பது சிறப்பு!. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

பேலியோபுரம்

பேலியோபுரம், நியாண்டர் செல்வன், ஆரோக்கியம் நல்வாழ்வு, பக். 224, விலை 220 ரூ. உடலின் எடையை குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும், பலரும், டயட் மேற்கொள்கின்றனர். நேரத்திற்கு தகுந்தாற்போல் உணவையும், முறையான பயிற்சியையும், எடுத்தால், உடம்பிற்கு கொழுப்பு நல்லதுதான். நாம் சாப்பிடும் உணவு, இயற்கையிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்பதை, இந்த நூல் வாசகர்களுக்கு உணர்த்தும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more
1 3 4 5 6 7 23