இதழியல் மேலாண்மை

  இதழியல் மேலாண்மை (சி.பா.ஆதித்தனார்), கவிஞர் சுரா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 90ரூ. இதழியல் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியவர், “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”. பாமரர்களையும் படிக்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் எழில்மிகு நடையில், சுவைபட எழுதியுள்ளார் முனைவர் கவிஞர் சுரா. இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என்று சொல்லத்தக்க வகையில் நூலை கவிஞர் சுரா உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்தனார் நிறுவிய ‘தினத்தந்தி’, 75 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு, பவள விழா கொண்டாடும் நேரத்தில் இப்புத்தகம் […]

Read more

முன்னொரு காலத்தில்

முன்னொரு காலத்தில், உதயசங்கர், நூல்வனம், விலை 90ரூ. கோவில்பட்டி மண்ணில்தான் எத்தனையெத்தனை படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். 1980-களில் தீவிர இலக்கிய தேடலோடு இயங்கிய 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சங்கமிக்கும் ஊராக கோவில்பட்டி விளங்கியது. எழுதுவதோடு மட்டுமே சுருங்கிவிடாமல், இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் என தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஒரு சூழல் அங்கே நிலவியிருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் தனது பின்னோக்கிய நினைவுகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார். இதில், கோவில்பட்டி எனும் ஊரில் பெருமை மட்டுமல்ல, எழுத்தாளர்களின் நட்பு மற்றும் சமூகம் குறித்த அக்கறையுள்ள மனிதர்களின் துடிப்பும் அடங்கியிருக்கிறது. […]

Read more

பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம், மல்லை சத்யா, மல்லைத்தச்சன், விலை 50ரூ. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று சொன்னார்கள். இன்று விமானம் இருக்கிறது. பறவைகள் தொலைந்துவிட்டன. உலகில் 9672 பறவை இனங்கள் இருக்கின்றன என்பது முதல், அவற்றின் உடலமைப்பு, பறவைகள் பற்றிய அற்புதமான ஆச்சரியமான உண்மைகள். இதிஹாச புராணங்களில் இடம்பிடித்திருக்கும் பறவைகள் என்று முழுவதும் சுவாரஸ்யமான தொகுப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

வங்கி சேவைகள்

  வங்கி சேவைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்களை “பொக்கிஷம்” என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக ரேவதி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது வெளிவந்துள்ள புத்தகம் வங்கி சேவைகள் பாகம் 1. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் குறித்த விவரங்களும், கடன் உதவிகள் பற்றிய விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. கடன்கள் பெறுவதற்கான தகுதிகள், ஆவணங்கள், அரசு தரும் மானியங்கள் பற்றிய விவரங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

விவசாயியை வாழவிடு

விவசாயியை வாழவிடு, விவசாயின் அழிவு சமூகத்தின் பேரழிவு, மக்கள் அதிகாரம், விலை 10ரூ. விவசாய வருமானத்தைக் கொண்டு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விவசாயச் சங்கங்கள் முன் வைக்கும் கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, நிவாரணங்கள் முதலான கோரிக்கைகளால் நிரந்தரத் தீர்வுகள் ஏற்படாது. எனவே, தற்போதைய விவசாயத்தின் மோசமான நிலைக்குக் காரணமாக இருக்கும் அரசின் விவசாயக் கொள்கைகளை மறுபரிசீலனை, செய்ய வேண்டும், நிலச் சீர்த்திருத்தங்கள், பசுமை புரட்சி என்று முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், விவசாயம் சார்ந்த தொழில் […]

Read more

ஐக்கிய நாடுகள் சபையும் உலக அமைதியும்

ஐக்கிய நாடுகள் சபையும் உலக அமைதியும், பிள்ளை லோகியா, பரத் புக்ஸ், விலை 50ரூ. மீண்டும் உலகப்போர் மூண்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டது ஐ.நா. சபை. அதுபற்றிய விவரங்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், ஜெ. ஜெயஸிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 218ரூ. ஜேகே என்கிற ஜெயகாந்தன் என்கிற எழுத்துச் சித்தரின் நூல் வடிவம் பெறாத பேட்டிகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் என, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவற்றைத் தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். பொதுவுலக வாழ்க்கையிலும், எழுத்துலக வாழ்க்கையிலும் ஜெயகாந்தன் யார் என்பதைப் பற்றி, அவருடைய வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவும். ஜெயகாந்தன் வலம் வராத துறைகளே இல்லை என்பதற்குச் சான்றாக, சினிமா, நாடகம், இலக்கியம், அரசியல், படைப்புலகம் என, […]

Read more

எமகாதக எத்தர்கள்

எமகாதக எத்தர்கள், கி.ஹரி கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 140ரூ. கற்பனைக்கு எட்டாத, பிரமிக்க வைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழிமுறைகளும், செய்யாத சட்டவிரோத செயல்களும் இல்லை என, எமகாதக எத்தர்களின் மோசடிகளைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், உரையும் மொழிபெயர்ப்பும் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஒரு மரணமும் தினசரி மரணமும்! ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். ஆனால், புத்தகமே எழுதிவிட்டார் சந்தியா நடராஜன். இதயத்தின் ஓரிடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதற்கான சிகிச்சை பெற்றபோது, அவருக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக வந்துள்ளன. எனவே, மரணத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார். அதுபற்றிய படைப்புகளைத் தேடத் தொடங்குகிறார். யோசிக்க ஆரம்பிக்கிறார். அவற்றை எல்லாம் தொகுக்கிறார்; எழுதுகிறார். அதையே புத்தகமாகவும் கொண்டுவந்துவிட்டார். யாம் பெற்ற துன்பம் […]

Read more

ஆரோக்கிய வாழ்விற்கு மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

ஆரோக்கிய வாழ்விற்கு மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும், ஆசிரியர் கயிலை சிவம் நாக. சுந்தரமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல். மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கான வழிகளை தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர் “கயிலை சிவம்” நாக. சுந்தரமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more
1 5 6 7 8 9 23