தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், டாக்டர் டி. நாராயண ரெட்டி, விகடன் பிரசுரம், பக். 184, விலை 125ரூ. தம்பதியரிடையே பல்வேறு தீவிரமான உளவியல் சிக்கல்கள் தோன்றவும், இருவரிடையே சண்டை சச்சரவுகள், விரோதம் தோன்றவும், தாம்பத்தியம் முறிவு படவும் முக்கியக் காரணமாக இருப்பது பாலியல் பிரச்னைகள் தான்! ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது துவங்கி, முதுமை எல்லை வரை குறுக்கு வெட்டாக ஆராய்ந்து, அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும், சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. டாக்டர் […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல். இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன. வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். […]

Read more

மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள்

மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள், நாகலட்சுமி சண்முகம், எம்பஸி புக்ஸ், பக்.230, விலை ரூ.250, மண வாழ்க்கையில் பிரச்னைகள் வராமலிருக்க, அப்படி வந்தால் அவற்றைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்நூல் பேசுகிறது. விவசாயம், கைத்தொழில், மருத்துவம் என எல்லா அறிவுகளையும் தனிநபர்களின் அனுபவ எல்லைகளுக்குள் மட்டுமே சுருக்கி, அந்த அனுபவங்களின் அடிப்படையில் தனிநபரோடு தொடர்புடைய நபர்கள், குழுக்கள் மட்டுமே குறிப்பிட்ட விஷயங்களில் தேர்ச்சி பெற்று, சிறந்து விளங்குவது நமது மரபு. அதிலும் குடும்ப விஷயங்களில் பகிர்தலின் எல்லையோ […]

Read more

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ்

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம், விலை 500ரூ. 5 -எஸ் என்பது ஒரு சிஸ்டம், பொருட்களை முறையாக வைப்பதுதான் அந்த சிஸ்டம். ஜப்பானிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் முதலிய அனைத்து இடங்களிலும் இந்த முறை அமலில் உள்ளது. அதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என்ற ஆவலில் வேதா டி.ஸ்ரீதரன் இந்த நூலை எளிய மொழி நடையில் எழுதியுள்ளார். பாராட்டக்கூடிய பயனுள்ள முயற்சி. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய […]

Read more

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்

நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன், டாக்டர் அம்பேத்கர், தலித் முரசு, விலை 150ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்கள் துன்பப்படுவதற்கு இந்து மதம்தான் காரணம்” என்று கருதியவர் டாக்டர் அம்பேத்கர். “நான் பிரம்மன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுள்கள் மீது நம்பிக்கை வைக்கவும் மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்” என்று கூறியவர். 1956-ம் ஆண்டில், 10 லட்சம் தலித் மக்களுடன், இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினார். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் மதம் மாறிய நிகழ்ச்சி உலகில் […]

Read more

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, இந்த  டிசைன்&#39 சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. அமேசான் காட்டிற்குள் போகாதவர்கள், போக முடியாதவர்கள் இந்நூலைப் படித்தால் அதன் தன்மையை ஓரளவிற்கேனும் உணர முடியும். விசித்திரமான விலங்குகள், ஆறுகள், பாம்புகள், பழங்குடிகள் என்று நம் கண்முன்காட்டி, காட்டைப் பற்றிய ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். கையை வைத்தால் சிலிர்ப்பூட்டும் ஆறும் இங்குண்டு, நொடியில் கையைப் பொசுக்கிவிடும் கொதிக்கும் ஆறுகளும் இங்குண்டு என்பது ஆச்சரியத் தகவல். நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ. புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/3/2017   —-   இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ. இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் […]

Read more
1 7 8 9 10 11 23