முதுமை இனிமை

முதுமை இனிமை, பேராசிரியர் ச. வின்சென்ட், பன்முகம், பக். 80, விலை 80ரூ. முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையை ரசிக்கும் பண்பை கொண்டிருந்தால், முதுமையை வெல்லலாம் என, இந்த நூலில் பல உதாரணங்களை காட்டி அழகாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். முதுமையின் தனிமையிலிருந்து தப்பிக்க, குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நகைச்சுவை வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் முதுமையை மறக்கச் செய்யும் என விளக்கியிருப்பது வித்தியாசமாக இருக்கிறது. முதுமையில் உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுவதன் அவசியத்தை, கதைகளுடன் விளக்கியிருப்பது, நூலைப் படிக்க அலுப்பு தட்டாமல் […]

Read more

கிராம ஊராட்சி நிர்வாகம்

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 344, விலை 260ரூ. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. நாட்டின் முதுகெலும்பு கிராமம்தான். கிராமம் உயர்ந்தால்தான் நாடு முன்னேறும்’ என்பது தேசத்தந்தை காந்திஜியின் உறுதியான கருத்து. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு ஊரக வளர்ச்சி மிக முக்கியம். எனவே ஊரக வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், விதிகளையும் வகுத்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்டம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், […]

Read more

உள்ளங்கையில் உலகம்

உள்ளங்கையில் உலகம், அ.ஸ்டீபன், வைகறை பதிப்பகம், பக். 64, விலை 40ரூ. உலகில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் – அது குடும்பம், உறவு, நட்பு, எதிர்ப்பு, நீதி, மனிதநேயம், நாடுகள் பற்றிய சர்ச்சை, தகவல் பரிமாற்றங்கள், அண்மையில் நிகழ்ந்த காவிரி பிரச்னை என்று அனைத்தையும் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் வசதியை ஊடகங்கள் தந்துவிட்டன. ஆனால் அந்த ஊடகங்கள் குறித்த சரியான புரிந்துணர்வு இல்லை. அதை கற்பிக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?. முளங்குழி பா. இலாசர், முதற்சங்கு பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திரைப்படத் தாக்கம், போதைப் பழக்கம், காதல் மயக்கம், அரசியல் அவலம், பெற்றோர் சுயநலம், ஆசிரியர்கள் செய்யும் தவறு ஆகியவையே இளம் குற்றவாளிகளை உருவாக்கும் காரணிகள் என்பதை தக்க ஆதாரத்துடன் அனுபவ ரீதியாக தரும் நூல். இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கும்முறை பலருக்கும் பலன் தரும். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

வட்டியை ஒழிப்போம்

வட்டியை ஒழிப்போம், டாக்டர் எம். உமர்சாப்ரா, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பக். 60, விலை 40ரூ. வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது. வாழ்வின் நிம்மதியை அழிக்கக்கூடியது. எனவே வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கி முறை பற்றி சுருக்கமாக அதேசமயம் நிறைவாக விளக்கும் நூல். நன்றி: குமுதம், 12/10/2016.   —-   காக்க காக்க உடல் நலம் காக்க, வானதி பதிப்பகம், விலை 100ரூ. காய்ச்சல் முதல் இருதய செயலிழப்பு வரை பலவித […]

Read more

புது வீடு கட்டலாமா

புது வீடு கட்டலாமா, சி.எச். கோபிநாத ராவ், பிராம்ப்ட் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. கட்டடக் கலை நிபுணரான இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும், 5 நூல்களை அழகுத் தமிழிலும் எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்நூல். வீடு கட்டி, பிறர் மதிக்க நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே உண்டு என்றாலும், ஓரளவு பொருளாதார வசதி பெற்றவர்களுக்கே இது சாத்தியமாகும். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல், யாரிடம் சென்று விசாரிக்கலாம் என்பதும் புரியாமல் திணறும் நிலை […]

Read more

பழைய பேப்பர்

பழைய பேப்பர், கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விலை 225ரூ. தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், செய்திகள் சேகரிப்பதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிரூபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது. இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன். சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், […]

Read more

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.150. ஆராக்கியத்தோடு வாழ வேண்டுமானால் தற்போதைய உணவு முறையை மாற்றி, ஆதிமனிதன் சாப்பிட்ட உணவுக்கப் போக வேண்டும் என்கிறார் “பேலியோ டயட்” நூலின் ஆசிரியர் நியாண்டர் செல்வன். அவர் கூறுகிற உணவு – காலையில் 10 பாதாம் கொட்டைகள், மதிய உணவு 4 முட்டைகள். மாலை சிற்றுண்டி ஒரு கோப்பை பாலுடன் கால் கிலோ காய்கறிகள். இரவு உணவு பசி அடங்கும் வரை இறைச்சி. நன்றி: தினத்தந்தி, […]

Read more

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 76, விலை 60ரூ. ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். விவேகானந்தரை தேச பக்த துறவி என்றும், இந்தியப் பண்பாட்டையும், மேலை நாட்டு விஞ்ஞானத்தையும் இணைத்து, ஒரு புதிய பண்பாட்டைக் காண விரும்பியவர் என்றும், இந்த நூலில் ப.ஜீவானந்தம் எழுதியுள்ளார். சிகாகோவில், விவேகானந்தருக்குப் புகலிடம் தந்த பெண்மணி, மேரி ஹேல். அவருக்கு, 1886, நவ., […]

Read more
1 9 10 11 12 13 23