தமிழ் மலாய் சொல் அரங்கம்

தமிழ் மலாய் சொல் அரங்கம், க. கந்தசாமி, ஸ்ரீ விஜயன் பதிப்பகம், ‘சுமா’ என்றால் என்ன அர்த்தம்? வயது வரம்பின்றி அனாயாசமாக எல்லாரும் பயன்படுத்துவது ‘சும்மா’ என்ற சொல். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மாதான் செய்தேன்’ என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய் மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மட்டும் சிறிய மாற்றம். அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள். Cuma என்றால், ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம். அதுவே ‘பெர்சுமா’ (percuma) […]

Read more

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களு

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ்.பி. மதியழகன், சுரா பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. மகாத்மா காந்தியடிகள் நினைவாக கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் தொடங்கி, சுதந்திரப் பொன்விழா, குடியரசுப் பொன்விழா நினைவுத் தூண், சட்டசபை வைரவிழா நினைவு வளைவு, மகாமகம் கலையரங்கம் ஈறாகத் தமிழக அரசு அமைந்துள்ள நினைவகங்களை, படங்களுடன் அவற்றின் வரலாற்றையும் சுருக்கி உள்ளடக்கமாக, 71 தலைப்புகளில் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக அரசின் சுற்றுல்லாத் துறை செய்ய வேண்டியதை, அதில் பணியாற்றிய நூலாசிரியர், […]

Read more

காங்கேயக் காளை

காங்கேயக் காளை, குமாரவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 91, விலை 80ரூ. ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது காங்கேயம் காளைகள்தான். விவசாயம் குறைந்து, வண்டிகளும், ஏர்களும் காணாமல் போன பின், காளைகளின் தேவையும் குறைந்துபோனது. அதன் விளைவு இப்போது காங்கேயம் காளைகளும் காணாமல் போய் வருகின்றன. காங்கேயம் காளைகள் தோற்றம், அவற்றின் வரலாறு, சிறப்பு, உள்ளிட்டவற்றை நூலாசிரியர் விளக்குகிறார். காங்கேயம் மாடுகளை வளர்க்கும் முறை, அவற்றை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது பற்றியும் விளக்கியுள்ளார். காங்கேயம் மட்டுமின்றி, மணப்பாறை, உம்பளச்சேரி, புலிக்குளம் […]

Read more

ஆணிவேர்

ஆணிவேர், நா. நாச்சாள், ஓம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. இயற்கை விவசாயம் முதல், நஞ்சில்லா உணவு வரை, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை பற்றி விரிவாக கூறியுள்ளார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பலவும், ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரும், நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்த மரபு என்பதை நிறுவுயுள்ளார். பற்பசை, சோப்பு, முகப்பவுடர் என அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்று என்ன என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார். நம் பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சத்தான சிறுதானியங்கள் […]

Read more

பேலியோ டயட்

பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக். 175, விலை 150ரூ. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, தகுந்த பின்னணியை விளக்கும் நூல். அதாவது முறையான உணவு வழக்கத்தைக் கையாண்டால் எடை குறைவதோடு உடல் நலனும் மேம்படும் என்பதைச் சொல்லும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/5/2016.   —- நோய்களும் தடுக்கும் உணவு முறைகளும், உமா பாலகுமார், குமுதம், பக். 128, விலை 120ரூ. ஒரு நோயைக் குணப்படுத்த மருத்துவ […]

Read more

தமிழாய்வு: தடங்களும் தளங்களும்

தமிழாய்வு: தடங்களும் தளங்களும், முனைவர் சு. தமிழ்வேலு, விலை 250ரூ. தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்குகளில், 65 தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்ட 1402 கட்டுரைகள் பற்றிய பட்டியல் (கட்டுரை ஆசிரியர், கட்டுரையின் தலைப்பு, ஆண்டு முதலிய விவரங்கள்), இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்கு பயன்படும். நன்றி: தினத்தந்தி, 23/3/2016.   —- வில்லங்கம் இல்லாமல் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது எப்படி, ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 170ரூ. மனை வாங்குதல், அதன் பிறகு பத்திரம் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற அனைத்து […]

Read more

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது, வி.செ. இம்மானியேல், விலை 150ரூ. ஜெபம் என்றால் என்ன? ஜெபம் அவசியம்தானா? ஜெபம் என்னவெல்லாம் செய்யும்? யாரை நோக்கி யார் வழியாக ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கும் நூல். கிறிஸ்தவ மக்களுக்கு சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 9/3/2016.   —- பாரதிதாசன் தமிழ் முழக்கம், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. “தமிழுக்கு வாழ்வதே வாழ்வாகும்” என்று பாடும் அளவுக்கு ஆழமாகச் சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரது நூல்களிலிருந்து […]

Read more

விளம்பர வீதி

விளம்பர வீதி, ந. அருள், கௌதம் பதிப்பகம், பக். 88, விலை 45ரூ. நூலாசிரியர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதுடன் நியூசிலாந்து, லண்டனில் விளம்பர வகைப்பாடுகள் மற்றும் விளம்பர உத்திகள் குறித்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் நூல் முழுவதும் தெரிகிறது. கல்வெட்டுகள், மரசறைதல், தண்டோராபோடுதல் போன்ற விளம்பரங்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப சுவரொட்டி, விளம்பரத்தட்டி, பதாகைகள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் என விரிவாக்கம் பெற்று வளர்ந்ததை தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன்முதலாக 1878இல் விளம்பரம் இடம்பெற்றது என்பன போன்ற […]

Read more

நலவாழ்வின் படிகள் நான்கு

நலவாழ்வின் படிகள் நான்கு (நான்கு நூல்கள்), பேராசிரியர் எம். ராமலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 264, 152. 232, 264, விலை ரூ. 170, 95, 145, 170. உணவு, உடல், உள்ளம், வாழ்க்கை என, மொத்தம் நான்கு நூல்கள். உணவு- உணவின் அவசியம், பகுதிப் பொருட்கள், உணவில் குற்றமும், உண்பவர் குற்றமும் என, பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியது இந்த நூல். உடல்-உடற்பயிற்சி, தூக்கம், ஆகாயம், சூரியன், காற்று, நீர், உணவும், உபவாசமும், மவுனத்தின் மாண்பு ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள்ளம்- ஏற்றத்திற்குப் […]

Read more

இனிதே தொடரும் வானப்ரஸ்தம்

இனிதே தொடரும் வானப்ரஸ்தம், விஜயலட்சுமி சுந்தரராஜன், காவ்யா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. காலவெள்ளத்தில் தோன்றிய முதியோர் இல்லங்களின் தேவை, அவசியத்தை பற்றி பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் முதியோர் இல்லத்தில்தான் வசிக்கிறார். ‘கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக நிர்ப்பந்தங்களுக்காக, பெற்றோரைக் கவனிப்பதாக கூறி, நம்மையும் வருத்தி பெற்றோரையும் சிறுமைப்படுத்தினோம். வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் பிள்ளைகள், சம்பளத்தையும் அங்கு கிடைக்கும் வசதிகளையும் பெற்றோருக்காக விட்விட்டு வரவேண்டுமான என்று யோசிக்கும் தலைமுறை’ (பக். 76) என, காலமாற்றத்தை சுட்டிக் காட்டுகிறார். முதியோர் […]

Read more
1 10 11 12 13 14 23