வீடுகளிலும் பள்ளிகளிலும் 5

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5, எஸ் – வேதா, டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம்,  பக்.352, விலை ரூ.500. ஜப்பானில் பெரிய தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் உள்ள பொருட்களையும், செயல்முறைகளையும் எளிமையாகவும், முறைப்படியும், சிறப்பாகவும் கையாள, அவற்றை முறைப்படுத்துவதற்காக ஏற்பட்டதுதான் இந்த 5 எஸ். இதற்குப் பின் தொடர் முன்னேற்றமாக கெய்சன் என்ற முறையும் ஜப்பானில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு தொழிற்சாலையில் குவிந்து கிடக்கும் பல பொருள்களில் தேவையானவற்றையும், தேவையற்றவற்றையும் முதலில் பிரிக்க வேண்டும் (செய்ரி), அவ்வாறு பிரித்தவற்றில் எந்தப் பொருள், எந்த இடத்தில், எவ்வளவு, எப்படி வைக்கப்பட வேண்டும் […]

Read more

மெல்லக் கொல்லும் பால்

மெல்லக் கொல்லும் பால், டாக்டர் ஜெகதீசன், எம்.டி., டிசிஎச்., எம்.எஸ்சி., விலை 100ரூ. பால் நல்லதா, கெட்டதா? என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயம் யார் வெல்வர் என்று நினைக்கிறீர்கள்? கெட்டது என்ற அணியினர் தான். காரணம் அதற்கான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி, புள்ளி விபரங்களோடு மருத்துவர் அவர்கள், மெல்லக்கொல்லும் பால் என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவர், முதுநிலை மரபியல் மருத்துவம் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர். ஒரு மருத்துவர் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் […]

Read more

வளரும் பேச்சாளருக்கு

வளரும் பேச்சாளருக்கு, முனைவர் மு. கலைவேந்தன், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 200ரூ. மேடைப்பேச்சு ஒரு கலை. சிலருக்கு மேடை ஏறினாலே உதறல் எடுக்கும். அச்சத்தைப் போக்கி, மேடைப்பேச்சில் வல்லவர் ஆவதற்கான வழிமுறைகளை இந்நூலில் விளக்குகிறார், முனைவர் மு. கலைவேந்தன். தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர், சிறந்த மேடைப்பேச்சுக்கு முன்னோடிகள். அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பந்த் ஆகியோர் மேடைத் தமிழை […]

Read more

பெரியார் ஒளிமுத்துக்கள்

பெரியார் ஒளிமுத்துக்கள், திராவிடர் கழக வெளியீடு, விலை 70ரூ. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் கொண்ட புத்தகம். சுயமரியாதை, பொதுத்தொண்டு, சமுதாயச் சீர்திருத்தம், இலக்கியம், திருக்குறள், பொருளாதாரம் முதலிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   பொது அறிவுப்பூங்கா, ஸ்ரீ ரங்கம் காயத்ரி, காய்த்ரி பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. பொது அறிவு சம்பந்தமான 1000 கேள்வி – பதில்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை, பெருமாங்குப்பம் சா. சம்பத்து, ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ், பக். 256, விலை 200ரூ. “நீரின்றி அமையாது உலகு‘’ என்று சொல்லித் தெரியும் நிலை இப்போதில்லை. ஆனால் நீரைப் பாதுகாக்கும் முயற்சிகள், நீர் வளத்தை மேம்படுத்தும் செயல்களை எல்லாம் நாம் செய்கிறோமோ? என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இந்நூலில் நீரின் தோற்றம், நீரின் இன்றியமையாமை, நீர் வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமா? ஏன் நதிகளை இணைக்க வேண்டும்? […]

Read more

சந்நியாசமும் தீண்டாமையும்

சந்நியாசமும் தீண்டாமையும், ராமாநுஜம், பரிசல், பக்.225, விலை 200ரூ. விரிவான ஆய்வையும், அதனூடாக பல்வேறு விவாதங்களையும் கோரி, நிற்க கூடிய அளவிற்கு ஆழமானது சாதி எனும் சொல்லாடல். நிலை கொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்குமுறைகள் பற்றி சமூக அறிவியலாகவும், அரசியலாகவும் விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் இயங்கி வருவதை போன்று சாதியம் பற்றி தமிழில் கோட்பாட்டு ரீதியான பார்வை சட்டகத்தை அறிமுகப்படுத்தி விவாதிக்க முனைகிறது இந்நூல். அம்பேத்கர் போன்று சாதியை, கோட்பாட்டு ரீதியாக சிந்தித்திராத நம் சூழலில் சாதியம் பற்றி முற்றிலும் வேறொரு வாசிப்பிலிருந்து […]

Read more

ஜல்லிக்கட்டு அறுபடும் மூக்கணாங்கயிறு

ஜல்லிக்கட்டு அறுபடும் மூக்கணாங்கயிறு, புதின், சரவணன் தியாகராஜன், ரெட் ஹாக் பதிப்பகம், விலை 230ரூ. ஊரெங்கும், ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற விவாதம் நடக்கும் இவ்வேளையில், அதை தடை செய்ய துடிப்பவர்களுக்கும், ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்களுக்கும், படைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இது. நாட்டு மாடுகளை காக்கவே ஏறுதழுவுதல் என்றும், இது, மூடத்தனம் அல்ல. உயிர் நேயம் மிக்க விவேக விளையாட்டு என்றும் படங்களுடன் உணர்த்துகிறது. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

வாசிப்பு வசப்படும்

வாசிப்பு வசப்படும், ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 16, விலை 10ரூ. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்து கொள்ள, நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள், நேரம், உடல் நலன், மனரீதியான முயற்சி. புத்தக வாசிப்பிற்கு, ஆழமான மனவிருப்பம் முக்கியம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிப்போம் என்ற ஆசையை தூண்டும் புத்தகம் இது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

மகாசக்தி மனிதர்கள்

மகாசக்தி மனிதர்கள், என். கணேசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. நம் இந்திய நாட்டு யோகிகளும், சித்தர்களும் கற்பனைக்கும் எட்டாத அபூர்வ சக்திகளைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். நம்மை அவர்கள்பால் வசீகரிப்பது அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் தான். இந்த மகாசக்தி படைத்த மனிதர்களில் ஏற்கனவே மிகவும் அதிகமாக அறியப்பட்ட பெயர்களோடு, பொதுவில் அதிகம் அறியப்படாத யோகிகள் பலர் புரிந்த அற்புதச் செயல்களை மிக விரிவாக இந்த நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அவற்றைப் படிக்கும்போது, நமக்கு ஏற்படும் பிரமிப்பும், ஆச்சரியமும் அளவிட முடியாதவை. […]

Read more

வளரும் ஒலிபரப்புக்கலை

வளரும் ஒலிபரப்புக்கலை, கோ. செல்வம், விஜயதிருவேங்கடம், வானதி பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சோ.சிவபாதசுந்தரம் 1954 இல் எழுதிய “ஒலிபரப்புக்கலை‘’ என்ற நூலின் தொடர்ச்சியாக – அதன் வளர்ச்சிநிலையாக – இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஒலிப்பரப்புத்துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற நூலாசிரியர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்கள். ஒலிபரப்புத்துறையின் பல்வேறு அங்கங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது. வானொலி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் குரல் வளம், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்விதம், வானொலிக்கு எழுதும் முறை, வானொலிப் பேச்சின் தன்மை, வானொலி […]

Read more
1 8 9 10 11 12 23