பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. இன்றைய பேட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகளை கல்வி, கேள்வி, ஞானம் யாவற்றிலும் சிறந்தவர்களாக எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு, தேர்வுக்கு படிக்க வைப்பது எப்படி? நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி? என்பன போன்ற அனைத்துச் செய்திகளையும் சொல்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. ஆத்ம சுகத்தை இருந்த இடத்தில் இருந்தபடியே பெறலாம். அதற்குச் சில மனப்பாங்குகளை மாற்றிக்கொண்டால் போதும். அதேபோல் சில மனப்பக்குவங்களை வளர்த்துக் கொண்டால் போதும். இதைப்பற்றி விரிவாகவும் எளிமையாகவும் கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

அர்த்தமுள்ள பெயர்கள்

அர்த்தமுள்ள பெயர்கள், பாலா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. குழந்தைகளுக்கு சூட்டுவதற்காக பயனுள்ள அர்த்தமுள்ள பெயர்களுடன், அவற்றின் விளக்கமும் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

மக்கள் தொடர்புக் கலை

மக்கள் தொடர்புக் கலை, எஸ்.பி. எழிலழகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 160ரூ. மக்களின் எண்ணங்களை அரசுக்கும், அரசின் எண்ணங்களை மக்களுக்கும் தெரிவிப்பது ஊடகம் என்று என்.டபிள்யூ. பி. கிரேவ் தெரிவித்துள்ள கருத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது மக்கள் தொடர்புக் கலை என்னும் இந்நூல். மக்கள் தொடர்பு பற்றிய அறிமுகத்தை விரிவாக விளக்கும் வகையில் இந்த நூலை எளிய மொழிநடையில் படைத்துத் தந்துள்ளார் எஸ்.பி. எழிலழகன். மொத்தம், 22 தலைப்புகளில் அமைந்துள்ள இந்த நூலில், மக்கள் தொடர்புக் […]

Read more

நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.104, விலை 55ரூ. நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார். சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு […]

Read more

பொன்னியின் செல்வன் ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் ஓவியங்கள், ஓவியர் சங்கர் லீ, வெளியீடு, மு.ஆ. சங்கரலிங்கம், விலை 450ரூ. ‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ. அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும், வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ -யின் […]

Read more

இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், பக். 144, விலை 90ரூ. எதையாவது உபதேசிப்பதற்காகவோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. உங்களை நீங்களே உணர்ந்துகொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது. மனிதர்களின் துடிப்புகள் சயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி, நிதானமற்ற மானுட சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கூறுகிறது. நன்றி: […]

Read more

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 70ரூ. மறைந்த ஜனாதிபதி, பாரத ரத்னா, ஏவுகணை நாயகர் அப்துல்கலாம், மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அதே சமயம் மனதைத் தொடுகிற விதத்தில் எழுதியுள்ளார் விருதை ராஜா. நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மனிதர்களின் அலட்சியங்களும் தீர்வுகளும், சா.ஜெயக்குமார், மணிமேகலைப்பிரசுரம், விலை 70ரூ. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனால், அவனுடைய வாழ்க்கையை இன்பமாகவும், சிறப்பானதாகவும் அமைத்து கொள்ள முடியவில்லை என்பதற்கு விடையளிக்கும் நூலாக […]

Read more

தண்ணீர் யாத்திரை

தண்ணீர் யாத்திரை, எஸ். அருள்துரை, வைகறை வெளியீடு, பக். 104, விலை 50ரூ. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினைகளால் இந்த சமுதாயம் என்ன விளைவுகளை சந்திக்கப் போகிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும் நூல். மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீர் பிரச்சினையால்தான் வரும் என்பதை தண்ணீரின் வரலாற்றுப் பின்னணியுடன் கூறும் நூல். படிப்போர் மட்டுமல்ல, எதிர்கால சமூகம் முழுமைக்கும் சிந்திக்க வைக்கும் நூல். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. உழவுத்தொழிலுக்கு அடிப்படையானவை காளைகள். அத்தகைய காளைகளை தெய்வமாக மதித்து அதனோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள்தான் ஜல்லிக்கட்டு. அதைப் பற்றி இந்த நூலில் எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார். விலங்குகளுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பு பற்றியும், அவர்களின் போலித்தனமான செயல்பாடுகள் குறித்தும் அவர் இந்த நூலில் எடுத்துரைக்கிறார். நமது பாரம்பரியங்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை இந்த […]

Read more
1 6 7 8 9 10 23