நம் காலத்து நாயர்கள்

நம் காலத்து நாயர்கள், சைபர் சிம்மன், புதிய தலைமுறை பதிப்பகம், விலை 140ரூ. புதிய உலகம் படைத்தவர்கள்! நம்முடைய வசிப்பிடமும் பணியிடமும்தான் நம் உலகம் என்ற நிலையிலிருந்து புதிய அன்பர்களையும், ஏகப்பட்ட தகவல்களையும் இணைய உலகம் இன்று சாத்தியமாக்கிவருகிறது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க் டு – இன் என சர்வதேசத் தொலைதொடர்புக்கு பல வலைத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பயனாளிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் யார், அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் நமக்குத் தெரியாது. இவை அனைத்தும் […]

Read more

எங்கிருந்து தொடங்குவது

எங்கிருந்து தொடங்குவது, வெண்ணிலா, அகநி, விலை 100ரூ. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்கும் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், சந்தியா நடராஜன் சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. மரணம், வாழ்க்கையின் எதார்த்தம், இந்த எதார்த்தத்தை ஏற்கமறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது.இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை,  பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், பக்.208, விலை ரூ.160. திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தினமணி.காம் – இல் இது தொடராக வெளிவந்தது. தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட சின்ன வயசுல […]

Read more

உண்டு ஆனால் இல்லை

உண்டு ஆனால் இல்லை,யோகி, தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம், பக். 184, விலை 150ரூ. உலகில் எந்த உயிரும் மனதின் ஆதிக்கத்தில்தான் இயங்குகிறது. மனம் சொன்னால் உடல் சிரிக்க வேண்டும்; மனம் வருந்தினால் அழ வேண்டும்; அதிர வேண்டும்; இப்படி ஒவ்வொரு நகர்வுமே மனதின் கட்டளைப்படியே நடக்கிறது. சஞ்சலத்தில் உழலும் இந்த மனதைச் சமன்படுத்திப் பண்படுத்த பலப்பலவாக ஆன்மிகம், தத்துவம், உளவியல் சார்ந்த நுால்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கிடையே பலவகையிலும் வேறுபடும் நுால்களில் ஒன்று. ஒருவருக்கு நன்மை தரும் ஒன்று, இன்னொருவருக்கு இழப்பாக இருக்கிறது. […]

Read more

நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள்

நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள், தொகுப்பு அந்திமழை ஆசிரியர் குழு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. ‘அந்தி மழை’ மாத இதழில் ஆண்- பெண் உறவு, மண வாழ்க்கை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், தகவல்கள், சமூக ஊடகங்களினால் ஏற்படும் ஆண்- பெண் உறவு பாதிப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி வந்த கருத்துகள் எல்லாம் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், சாலமன் பாப்பையா, சகாயம் ஐ.ஏ.எஸ்., டாக்டர் நாராயண ரெட்டி, கலாப்ரியா, எஸ்.ஏ.சந்திரசேகர் […]

Read more

மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)

மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்), ஜி.ராஜசேகரன், ரிதா பிரின்ட்ஸ், பக். 128. தமிழகத்தில் முதல் முறையாக போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, மதுரை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகரன் எழுதிய இலவச புத்தகம் இது. மாணவர்களிடையே 2010ம் ஆண்டு முதல், போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் முயற்சியால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வடைந்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையே விபத்துக்கு காரணம். இதனாலேயே விலை மதிப்பில்லா உயிர்களை […]

Read more

தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

பிக்பாஸ்

பிக்பாஸ், தி.குலசேகர், எஸ்.எஸ்.பப்ளிகேஷன், விலை 100ரூ. 15 பேரை நூறு நாட்களுக்கு ஒரு வீட்டுக்குள்ளே அவர்கள் விருப்பத்தோடு இருக்க வைத்து அவர்களது நடவடிக்கைகளை சோதிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா. மக்களின் மனதில் தனதான தனித்த அடையாளங்களினால், நிரந்தர இடத்தைப் பெற்று விட்டார். அது குறித்து இந்த நூலில் தி.குலசேகர் சுவையாக அலசுகிறார். நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க

பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க,  டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.88, விலை ரூ.60. பாப்பாவுக்கு மட்டுமல்ல தாத்தாவுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். முதியோர் நலத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்ற இவர், முதியோர் நலன் குறித்து சுமார் 30 நூல்களை எழுதியுள்ளார். ‘முதுமையை முறியடிப்போம்’, ‘இதய நலம் காப்போம்’ ஆகிய இரண்டு குறுநூல்களைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கு 60 வயதில் இருந்தே முதுமைக் காலம் தொடங்குகிறது. இந்தக் காலத்தில் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணிக் காத்துக் […]

Read more
1 4 5 6 7 8 23