பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், பிரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. ஆண், பெண் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அக்கட்டுரைகளின் மூலம் தனது பால்ய காலம் தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம் பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூலாசிரியர் பிரியா தம்பி. காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்று கூறுவார். ப்ரியாவின் […]

Read more

பொன்மொழிகள்

பொன்மொழிகள், தந்தை பெரியார், திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 30ரூ. தந்தை பெரியார் பொன்மொழிகள் பெரியார் ஈ.வே.ரா. பொன்மொழிகள் கொண்ட புத்தகம், 1949-ம் ஆண்டு திருச்சி திராவிடமணி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அதை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்தது. பின்னர் 1979-ல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தத் தடையை அ.தி.மு.க. அரசு நீக்கியது. தடை நீக்கப்பட்ட புத்தகத்தை, இப்போது திராவிட கழகம் வெளியிட்டுள்ளது. அரசியல், மதம், கடவுள், சமுதாயம் இயக்கம், ஆட்சி, மொழி முதலான தலைப்புகளில் பொன்மொழிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கும் […]

Read more

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம்

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம், விலை 160ரூ. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ப. மாணிக்கம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, அவர் நிகழ்த்திய உரைகளை சேகரித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- நம்மால் முடியாதா?, மணிகண்டன், நூலாசிரியர் காட்டுப்பையூர், விலை 50ரூ. அன்பு, பாசத்தை தாய், தந்தையிடம் செலுத்துவதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பிரடெரிக் எங்கெல்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 20ரூ. கம்யூனிசத்தை […]

Read more

நம்ப முடியாத உண்மைகள்

நம்ப முடியாத உண்மைகள், எஸ்.பி. செந்தில், தந்தி பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788193129524.html 2003-ம் ஆண்டு மே மாதம் தினத்தந்தியில் தினம் ஒரு தகவல் என்ற தலைப்பில் புதிய பகுதி தொடங்கப்பட்டது. இதில் நாம் அறிந்திராத அபூர்வ செய்திகள் இடம் பெற்றன. இந்த செய்திகள் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. வாசகர்கள் அளித்த வவேற்பு காரணமாக 12 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் தினம் ஒரு தகவல் வெளியாகிவருகிறது. […]

Read more

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன்

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன், இராம. குருமர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. கடந்த 45 ஆண்டுகளாக கண்ணியம் என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன். 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் தொழிற்சங்கவாதி. அதனால் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலை நீக்க உத்தரவை கொடுத்தனர். அது ஆங்கிலத்தில் இருந்ததால், அதை வாங்க மறுத்து தமிழ் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று போராடி, தமிழில் பெற்றார். இது இவருடைய தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. அவரைப் பற்றி தமிழறிஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் […]

Read more

2020 ஆண்டுக்கு அப்பால்

2020 ஆண்டுக்கு அப்பால், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன், தமிழில் சிற்பி, டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 312, விலை 180ரூ. இந்த நூலை, கலாமின் இந்தியா 2020 என்ற நூலின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நூலின் தமிழ் வடிவத்தை பார்க்கும் முன்பே கலாம் காலமாகிவிட்டார். இதில் 2014ல் இந்தியா என்ற தலைப்பில் இருந்து, இந்தியாவில் முடியுமா? என்ற தலைப்பு வரை, மொத்தம் 15 பிரிவுகளில், விஷயங்கள் அலசப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, நான்கு குறிக்கோள்களை, நூலாசிரியர்கள் முன்வைக்கின்றனர். அவற்றின் விவரம் […]

Read more

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 330ரூ. ஒரு கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் கிராம நிர்வாக அலுவலர். அந்தக் கிராமத்தில் நில நிர்வாகம், வரி வசூல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இதரத் துறை அலுவலர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்து வருகிறார். அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இந்த நூலில் வடகரை செல்வராஜ் விரிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி.   —- கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் […]

Read more

நலம் காக்கும் சித்த மருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம், சித்த மருத்துவர் ப. செல்வசண்முகம், வலைத்தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சித்தர்கள் கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை மருத்துவர் ப. செல்வ சண்முகம் படைத்திருக்கிறார். நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ளார். உடம்பைப் பற்றியி சித்தர்களின் விளக்கம், உடல் கட்டமைப்பு, குளிக்கும் முறை, உணவு அருந்தும் முறை, முறையான தூக்கம், தூக்கமின்மைக்கான தீர்வுகள் போன்ற தலைப்புகளில் பயனுள்ள கருத்துகளை வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. […]

Read more

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்

அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும், டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு), பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளரும், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் ஆ. பத்மநாபன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) தொகுத்துள்ள அணிந்துரைகளும், வாழ்த்துரைகளும் என்ற நூல் அனைவரையும் சாதிக்க தூண்டுவதுடன், சிந்திக்கவும் வைக்கிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாழ்த்துரைகள் மூலம் நூலாசிரியர் சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய சேவைகளையும், அவருடைய நற்பண்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. நூலில் இடம் பெற்றுள்ள வைரவரிகள் அனைத்தும் பாலைவனச் சோலையின் பூக்களாக […]

Read more

இயன்றவரையில் இனிய தமிழ்

இயன்றவரையில் இனிய தமிழ், க. முருகேசன், வான்புகழ் வளர்தமிழ் மன்றம், பக். 128, விலை 60ரூ. செம்மொழி என்ற பெருமையும் பகழும் தமிழ்மொழிக்கு இருந்தாலும் தமிழர்கள் பேசும்போது, தேவையே இல்லை என்றபோதும் பிறமொழிகளைக் கலந்து பேசுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பெருகிவிட்டது. இது தமிழ்மொழிக்குச் செய்யும் பெரும் தீங்கு என்பதையே இந்நூலாசிரியர் நூல் முழுதும் அலசியுள்ளார். தக்க உதாரணங்கள் தந்து, அதற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் வழங்கி தமிழுக்கு உரமூட்டுகிறார். தமிழின் பெருமையை இனிமையை எடுத்து இயம்புகிறார். இயன்றவரை […]

Read more
1 12 13 14 15 16 23