மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. (பக்தி வளர்த்த 31 ஹரிபக்த ரத்னங்கள்) இந்திய தேசத்தில் தோன்றிய மகான்கள் அனேகர். அந்த அருளாளர்களின் சதித்ரித்தை அறிவது, நம்மை நல்வழிப்படுத்தி, அறத்திலும், ஆன்மிக மேம்பாட்டிலும் நிச்சயம் உயர்த்தும். பக்தியால் மேம்பட்டு, பரமன் அருளைப் பெற்று, அற்புதங்கள் பல நிகழ்த்திய பத்ராசல ராமதாசர், கபீர்தாசர், கோராக் கும்பர், சோகாமேளர், கனகதாசர், பக்த மீராபாய், ராகவேந்திரர், புரந்தரதாசர் போன்ற 31 ஹரி பக்த சிரோன்மணிகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த […]

Read more

நிராசைகள்

நிராசைகள், லிங்கராஜா, மாலவன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. இந்நூல் ஒரு முக்கோண காதல் கதையைக் கொண்டது. கதையின் முடிவாக இருந்தாலும் விதியின் போக்கை நம்மால் முடிவு செய்ய இயலாது என்பதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- கன்னியாகுமரி மாவட்டம், பாரி நிலையம், சென்னை, விலை 70ரூ. கன்னியாகுமரி மாவட்டம் பற்றி அனைத்து தகவல்களையும் இந்த நூலில் எழுத்தாளர் சோமலெ எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —-   பிணங்களின் கதை, பாரதி புத்தகாலயம், சென்னை, விலை […]

Read more

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ. தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ. எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் […]

Read more

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி, சேதுராமன் சாத்தப்பன், விஜயா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. தொழில் முனைவோரை, தைரியமாக ஏற்றுமதியாளராக்கும் ஆரம்பகட்ட வழிகாட்டியாக இந்த நூல் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் ஏற்றுமதி சாத்தியக்கூறுகள், பொருட்கள், ஏற்றுமதியாளராவதற்கான அடிப்படை தேவைகள், முக்கியமான இணையதள முகவரிகள், விலை நிர்ணயம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில், எந்தெந்த மாவட்டத்தின் என்னென்ன ஏற்றுமதி பொருட்கள் கிடைக்கின்றன; வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் மற்றும் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் முகவரிகள் போன்றவை தரப்பட்டு உள்ளன. ஏற்றுமதியாளர்களால், வேதமாக கருதப்படும் சர்வதேச […]

Read more

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை

அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை, பா. சேதுமாதவன், உலா பதிப்பகம், திருச்சி, பக். 136, விலை 80ரூ. சங்ககால மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரும் சோழநாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர். காரணம் அதன் பெருவளமும் புவியியல் ரீதியாக பெற்றிருந்த இயற்கை அமைப்புமேயாகும். இம்முயற்சியில் பலர் வெற்றியும் கண்டனர். பல மொழிகள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் நிரிவாகத்தின் கீழ் சோழநாடு இயங்கி வந்ததால், காலந்தோறும் பல நெருக்கடிகளையும், பன்னாட்டு, கலாச்சார சமூக பொருளாதார மாற்றங்களையும், கலை, இலக்கிய வளர்ச்சியையும் பாதிப்பையும் கண்டது. இச்சரித்திரக் கூறுகளை […]

Read more

விதையினைத் தெரிந்திடு

விதையினைத் தெரிந்திடு, தொகுப்பு வலம்புரி லேனா, எழில்மீனா பதிப்பகம், தஞ்சை. அபூர்வ அறிமுகங்கள் ஒரு சமூகத்தின் சிந்தனைமுறை மற்றும் மதிப்பீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 18ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை தமிழ் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அச்சிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் பேரிதழ்கள் ஒருபுறம் என்றால், சிறிய தொகையில் குறைந்த அளவில் அடிக்கப்படும் சிற்றிதழ்கள் மறுபுறம். குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரே ஊரில் வசிப்பவர்கள், தொழில் சமூகத்தினர், அரசியல் குழுவினர், புலவர்கள், அறிஞர், […]

Read more

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார்

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார், தந்தி பதிப்பகம் ,சென்னை, விலை 160ரூ. தினத்தந்தியில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் நெல்லை கவிநேசன் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது ஆளுமைத்திறன்: பாதை தெரியுது பார் என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? நல்ல மனப்பாங்கை உருவாக்குவது எப்படி? உணர்வுகளைக் கையாள்வது […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை), செய்திக்குழு வெளியிடு, புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 128, விலை 90ரூ. இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் செரிக்க, இரண்டு நாட்கள் ஆகும். சிவப்பழகிற்காக தேய்க்கும் கிரீம்களால் என்னென்ன கேடுகள் வரும், மருதாணியின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மெகந்தியைக் கையில் பூசிக் கொள்வதால் வரக்கூடிய தோல் நோய்கள் என்ன? எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பிராய்லர் கோழி, தந்தூரி சிக்கன் வகையறாக்களால் குழந்தைகளும், பெரியோருக்கும் உண்டாகும் கேடுகள், வேதிப்பொருட்களில் கூட்டாக விஷத்தை விதைக்கும் பாக்கெட் பால்… இப்படி அன்றாட […]

Read more
1 14 15 16 17 18 23