காக்க காக்க உடல் நலம் காக்க

காக்க காக்க உடல் நலம் காக்க, டாக்டர் பெ.போத்தி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ. கால்நடை மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இந்நூலாசிரிர், மனிதனைத் தாக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள், உடல்நலம் காக்க உன்னத வழிகள், நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்’ போன்ற நூல்கள் வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் இந்நூலையும் இயற்றியுள்ளார். பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள், […]

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன்,  நலம், பக்.128, விலை ரூ.125. மனிதனுக்கு வெளியே நிகழ்கிற ஒவ்வொன்றும் மனிதனின் மூளையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் , மூளையில் ஏற்படுகின்ற மாற்றங்களால் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும் இந்நூல் அறிவியல் அடிப்படையில் விளக்குகிறது. யோகாசனம், தியானம், இசை கேட்பது, வழிபடுவது ஆகியவை மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் அவை நமது செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்த தூண்டுகோலாக இருப்பதையும் நூலாசிரியர்கள் விளக்கியிருக்கின்றனர். ஆண் மூளை, பெண் மூளை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், தனித்தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம், (பாகம் 7), பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், பக்கம் 296, விலை 220ரூ. ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூல் ஆசிரியர், தினமணி கதிரில் 2004 முதல் 2017 வரை வாசகர்கள் தங்கள் நோய்களுக்கான மருத்துவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் இந்நூலின் ஆறு பாகங்கள் இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பு […]

Read more

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம், கே.ஜி.எப். பழனிச்சாமி, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், உடலில் ஏற்படும் சிறு, சிறு வியாதிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நிலைமை உள்ளது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் மூலமாகவே அந்த நோய்களை விரட்டலாம் என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி உள்ளது. மேலும், எந்த வியாதிக்கு என்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000006865.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மனநலமே உடல்நலம்

மனநலமே உடல்நலம், முனைவர் சசி. வின்சென்ட், வைகறை பதிப்பகம், விலை 50ரூ. உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். அலைபாயும், அச்சப்படும் மனதை ஒரு நிலைப்படுத்தி, சங்கடங்களை சமாளிக்க வழிகாட்டும் புத்தகம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026852.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாங்க, மனசுக்குள் போகலாம்

வாங்க, மனசுக்குள் போகலாம், டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி, மனோரக்ஷா, விலை 100ரூ. மனம் கெட்டால் உடலும் கெட்டு நோய்களுக்கு ஆளாகும். மனநல பாதிப்புகள் எப்படியெல்லாம் ஏற்படும், அதில் இருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் விடையாக தன்னிடம் வந்த உளநலப் பிணியாளர்களின் அனுபவங்கள் வாயிலாக விறுவிறு நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீநிவாசன், லஷ்மி மோகன், நலம் வெளியீடு, பக். 128, விலை 125ரூ. தாயின் வயிற்றில் உள்ள கருவிலேயே மூளையில் நியூரான்கள் உதிக்கத் துவங்கி, குழந்தை கற்கவும் துவங்கி விடுகிறது என்பது இறைவனின் விந்தை. எந்தக் குழந்தைக்கும் முதல் மூன்று மாதத்திலேயே ஒவ்வொரு வினாடியும், 2,500 நியூரான்கள் உருவாவது, பேதமற்ற முழு முதல் கடவுளின் வித்தை. குழந்தைப் பருவத்தின், ‘சிதறும் மனநிலை’ முதல், வயோதிகத்தின் இறுதிக்கட்டமான, ‘ஒடுக்கப்பட்ட மனநிலை’ வரை, பல்வேறு காலகட்டங்களில் எண்ணங்களைத் தாங்கி நிற்கும் மூளையின் […]

Read more

உயிர்மெய்

உயிர்மெய்,  கு.சிவராமன், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.185. பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல். தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை 200ரூ. எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்த அறியாமையை இந்நூல் போக்குகிறது. நன்றி: குங்குமம், 12/1/2018.  

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய். ஆர். மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. உடல் நலனில், இதயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதய நலனுக்கான, சித்தா மருத்துவ நுால். இதயத்தின் இயக்கம், இதய நோய் வகை, உணவில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை, உடற்பயிற்சி, தியானம் என, பல்வேறு தகவல்கள், இந்நுால் நிரம்பியுள்ளன. இதய நோய்க்கான, சித்தா மருத்துவமுறைகளும், அதை தயாரிக்கும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சித்தா மருத்துவமுறைகளை பின்பற்றுவோருக்கு, இந்நுால் முக்கியமானது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more
1 7 8 9 10 11 32