உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், பக். 151, விலை 130ரூ. மனிதர்களை கவனிக்கும் சுகாவின் ரசனைதான் ‘உபசாரம் தொகுப்பின் அடிநாதம். அது சினிமாவாகட்டும், படித்த நாவலாகட்டும், சாப்பிடப் போன விருகம்பாக்கம் ஹோட்டலாகட்டும், திருநெல்வேலி விருந்தாகட்டும், பெரிய எழுத்தாளர், ஆரம்ப எழுத்தாளராகட்டும் அவர்களின் மனதை அறிந்து, அதை எழுத்தில் தந்து நம்மையும் அங்கே பயணிக்க வைத்துவிடுகிறார். முதலில் இவர் தன் மனதை திறந்து வைத்திருக்கிறார் என்பதையே இவ்வனுபவக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. எழுத்தில் நெருடல் இல்லாத நகைச்சுவை இயல்பாய் வந்துவிட்டாலே எழுத்துக்கு ரசிகர்கள் பெருக்கம் உருவாகிவிடும். சுகாவுக்கு […]

Read more

குஜிலிப் பனுவல்கள்

குஜிலிப் பனுவல்கள், க.விஜயராஜ், நறுமுகை,  பக்.238, விலை 180ரூ. “குஜிலிக் கடை’‘ – அந்தி நேரக் கடை என்பது, பழைய சென்னைப் பட்டணத்தில் இருந்த கடைவீதியைக் குறிப்பிடுவது. வெகுஜன ரசனைக்கு ஏற்ப தயாரான புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அங்கு கிடைக்கும். இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பற்றியதாகும். இவற்றில் பலவற்றின்நோக்கம் சிற்றின்பக் கிளர்ச்சி. ஆசிரியரின் தகவல் அடுக்குகளில் “தலைகாணி மந்திரம்’‘, “குடியர் ஆனந்தப்பதமும் கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பும்‘’, “புகையிலையின் வெண்பாவும்’‘ ஏன் காலம் கடந்து நிற்கவில்லை என்பதைப் பெயர்களைப் பார்த்தே முடிவு செய்து கொள்ளலாம். […]

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பள்ளிப் பாடத்தில் திருக்குறள் முழுவதையும் சேர்க்க வேண்டும் என்று மதுரை கிளை, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண் WP(MD)11999/2015க்கு, நீதிபதி மகாதேவன், பள்ளிப் பாடத்தில், 6 முதல், பிளஸ் 2 வகுப்புக்குள் திருக்குறள் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் முழுமையாகச் சேர்க்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இத்தீர்ப்பில் மெக்காலே கல்வி முறையும், அதனால் பண்பாடு உருவாகவில்லை, நீதிநெறி முறைகள் […]

Read more

தீயரும்பு

தீயரும்பு, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், அய்யா நிலையம் வெளியீடு, விலை 150ரூ. இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. தான் வாழ்ந்த கிராமத்தின் புழுதி படிந்த வாழ்க்கையை, வியர்வை பிசுபிசுக்கும் மனிதர்களை அப்படியே தன் கதைகளுக்குள்ளும் நடமாட வைத்துள்ளார். “கொம்பால குருணிப்பாலு கற்தாலும் கூர புடுங்கற மாடு உதவாது…” என்பது போன்ற தஞ்சை வட்டார மக்களின் வழக்குச் சொல்லாடலில் வாசிப்பை விறுவிறுப்பாக கடத்திச் செல்கிறது ஞானதிரவியத்தின் மொழிநடை. நன்றி: தி இந்து, 5/11/2016.

Read more

புனித அன்னை தெரசா

புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

சித்தர்களின் சாகாக் கலை

சித்தர்களின் சாகாக் கலை, சுவாமி அகமுகநாதர், கற்பகம் புத்தகாலயம், பக். 392, விலை 275ரூ. உலகத்தில் மனித இனம் தோன்றிய வரலாறு, விழுப்புரத்தில் கிடைத்த, 1,80,000 ஆண்டுகள் பழக்கமுள்ள மண்டை ஓடு, முதலான பிரமிப்பான தகவல்களுடன் நூல் துவங்குகிறது. கண்டங்களின் தோற்றம், சுனாமி என்னும் ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்புகளின் தாக்கம், அதனால் ஏற்படும் பேரொலி முதலான, அரிய தகவல்களை தருகிறது இந்த நூல். உலகத்தில், மக்கள் தோற்றத்தை, ஏழாயிரம்… எட்டாயிரம்… ஆண்டுகளுக்கு முன் என, சில சமயவாதிகள் வரையறை செய்து கொண்டிருக்கும்போது, நம் […]

Read more

மக்கு மாமரம்

மக்கு மாமரம், தமிழில் கொ.மா.கோ. இளங்கோ, நேஷனல் புக் டிரஸ்ட் ஒரு மரம் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டுமா? ஒரு மரம் வேர்களை நிலத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு தனக்கான பாதையை, தனக்கான இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதைத்தான் செய்கிறது இந்தக் கதையில் வரும் மாமரம். பல இடங்கள், பல மனிதர்கள், உயிரினங்கள், தாவங்களைப் பார்க்கும் அந்த மரம், கடைசியில் என்னவாக மாறியது என்பதுதான் கதை. இப்படிக் கேள்வி கேட்டுப் பயணிக்கும் மாமரத்துக்கு ‘மக்கு மாமரம்’ என்று தவறாக மற்றவர்கள் பட்டப்பெயர் வைத்தாலும் […]

Read more

சுல்தானின் காடு

சுல்தானின் காடு, தமிழில் பூரணி பாலேந்திரா, தூலிகா காட்டில் வாழும் அம்மா புலிக்கும் அதன் குட்டியான சுல்தானுக்கும் ஒரு தோழி உண்டு. அவர்தான் இந்தப் புத்தகத்துக்கான படங்களை எடுத்த பீனா. அவர் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், காடுகளை நேசிப்பவர். ராஜஸ்தானில் உள்ள ரன்தம்போர் காட்டில் வாழும் குட்டிப் புலி சுல்தானின் வாழ்க்கையைப் படங்கள், அப்பகுதி பொம்மைகள் வழியாக இந்தப் புத்தகம் நமக்குச் சொல்கிறது. கமலாபாசின் எழுதிய இந்த நூலைத் தமிழில் பூரணி பாலேந்திரா மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு எளிமையாகவும், சீராகவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். […]

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more
1 18 19 20 21 22 23