அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள், விகடன் பிரசுரம், பக்.290, விலை ரூ.160. சிறந்த ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளரான இலங்கை ஜெயராஜ் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பல கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன; சில கட்டுரைகள் சிரிக்க வைக்கின்றன; அதேவேளையில், சில கட்டுரைகள் நம்மை அழ வைக்கின்றன. இதற்கிடையே, வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய தத்துவங்களும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. “பெரிய மாமி’‘ என்ற கட்டுரை தமிழ்ப் பெண் குலத்தின் மாண்பையும், பண்பாடு, கணவன் மீதான பாசத்தையும் பறைசாற்றுகிறது. கணவனுடன் வாழ்ந்தபோது பட்டுப்புடவை, நகைகள், அலங்காரங்களுடன் வலம் […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. சென்ற ஆண்டு தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து 20 புத்தகங்களை மட்டும் எடுத்து விமர்சனமாக எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அழகியசிங்கர். மருத்துவம், கவிதை, கதை என எல்லாமும் இதில் உள்ளன. சாருவின் நூல் பற்றிப் பேசுவதையில் அவர் எழுத்துத் திறனை சிலாகித்தும் அவரின் சில கருத்துகளை நிராகரித்தும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம். எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இந்நூல் எனலாம். நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், விஸ்டம் வில்லேஜ், பக். 274, விலை 245ரூ. பிரதமர் கார் வாங்கிய கண்ணீர் கதை! நிர்வாகக் குறைபாடுகளுக்காகவும், ஊழல் விவகாரங்களுக்காகவும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இங்கே காலம் காலமாக வைக்கப்படுகின்றது. அமைச்சர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் பழக்கமில்லை. என்பது ஒரு தற்காப்பு விதி. இதில் முக்கியமான விதிவிலக்கு, லால் பகதுார் சாஸ்திரி. கடந்த, 1956, நவ., 22-ம் தேதி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டது […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ. இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் […]

Read more

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம்

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம் ,  பக். 296; ரூ.200. பன்னிரு ஆழ்வார்களுள் ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப்படுபவர் நம்மாழ்வார். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த போதிலும், கலியன் எனப்படும் திருமங்கையாழ்வார்தான் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவர். இவர் ஏன் இவ்வாறு போற்றப்படுகிறார் என்னும் காரணத்தை, “பெருமானிடம் ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணியவர் ஆழ்வார் என்று அதாவது – பெருமானும் பிராட்டியும் புதுமணத் தம்பதிகளாக வந்தபோது, அவர்களை வழி மறித்து, அவர்கள் ஆபரணங்களை எல்லாம் பறித்தார். அவற்றை ஒரு பெட்டியில் வைத்து எடுக்கப் பார்க்க, எடுக்க முடியவில்லை. “என்ன மந்திரம் போட்டாய்? […]

Read more

சுப்ரஜா சிறுகதைகள்

சுப்ரஜா சிறுகதைகள், சுப்ரஜா, கவிதா பப்ளிகேஷன், பக். 544, விலை 400ரூ. வெவ்வேறு சூழ்நிலைகளில் சுப்ரஜா எழுதிய கதைகளின் தொகுப்பு. வீடென்று எதைச் சொல்வீர்? இன்றைய ஃபிளாட் மயமாகலில் நகரத்தின் ஆன்மா சிதைந்து போவதை வலியோடு சொல்லும் கதை. எல்லாமே இது மாதிரி மனதைப் பிசையவைக்கும் கதைகள்தான். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- திமிரும் நீயும் ஒரே சாயல், ஷர்மிவீரா, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. காதலர்கள் தங்களை அடையாளம்காண வைக்கும் பாசாங்கற்ற கவிதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம்

எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம், இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், விலை 150ரூ. எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றிய நூல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நூல், இதயக்கனி எஸ். விஜயன் தயாரித்துள்ள இந்தப் புத்தகம். உண்மையில் இது கருவூலம்தான். எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி. அதில் போலீஸ் அதிகாரியாக சிறு வேடத்தில் தோன்றினார். அதில் இருந்து எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படத்தின் ‘ஸ்டில்’களும் இதில் இடம் பெற்றுள்ளன. படங்கள் பெரிய அளவில் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிக்குறிப்பை படித்தாலே, எம்.ஜி.ஆரின் […]

Read more

இசை மேதைகள்

இசை மேதைகள், கே. ஆர். கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு சந்திரா சங்கர், விலை 75ரூ. அந்தக் காலத்து இசை மேதைகள் முதல் இந்த காலத்து இசைக்கலைஞர்கள் வரை, அவர்களது வாழ்க்கை வரலாற்றை சுவைபடக் கூறும் நூல். சங்கீதப் பிதாமகர் என்று அழைக்கப்படும் புரந்தர தாசர் (கி.பி. 1494 – 1564), தான் சென் (1506 – 1589) ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தான் சென்னின் இயற்பெயர் ராம்தனு. இவர் அக்பரின் மகளான மெஹருன்னிசைவை மணந்தார். அக்பரின் சபையில், ‘தீபக்’ என்ற […]

Read more

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள்

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள், ஆற்காடு ஸ்ரீநாத், டாக்டர் பாலசந்தர், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. பிரம்மம், மனிதன், ஆன்மிகம், தியானம், பக்தியோகம் உள்பட 14 தலைப்புகளில் இந்து தர்மத்தின் மேன்மையான தகவல்கள் தொகுக்கப்பட்ட நூல். படித்து கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், விலை 100ரூ. தம் முயற்சியால் பெரும் பொருள் ஈட்டி, அப்பொருளைக் கல்வி வளர்ச்சி மற்றும் […]

Read more

பூபாள இராகங்கள்

பூபாள இராகங்கள், நா. அப்துல் ஹாதிபாகவி, ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம், பக். 150, விலை 100ரூ. சமூக அவலம், வறுமை, கொடுமை, சமத்துவம், பெண்ணுரிமை, இஸ்லாம் இந்த மானுட சமுதாயத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் என்று பலவற்றையும் கவிதைகளாகத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- திருக்குறள் தமிழ் ஆங்கில உரை, மு.க.அன்வர்பாட்சா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 344, விலை 200ரூ. பாமரர்களும், மாணவர்களும் எளிதில் புரியும் வண்ணம் புதிய சிந்தனைகளுடன் திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரை நூல். தமிழோடு ஆங்கிலத்திலும் உரை […]

Read more
1 20 21 22 23