வாழ்க்கை எனப்படுவது யாதெனின்

வாழ்க்கை எனப்படுவது யாதெனின், இரா.சாந்தகுமார், இரா.சாந்தகுமார் வெளியீடு, விலை 50ரூ. 33 புதுக்கவிதைகளை இந்த நூல் தாங்கி இருக்கிறது. டாலர் மோகம், ஒன்பது உயர்ந்ததே, பிறப்பொக்கும் அரவாணிகளுக்கும் என்ற கவிதைகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, கவிஞர் பொன்.செல்லமுத்து,  வைகுந்த்பதிப்பகம்,  பக்.792,  விலை ரூ.950. விரல் நுனியில் சினிமா என்று சொல்வதற்கு ஓர் எடுத்துக்காட்டு கவிஞர் பொன்.செல்லமுத்து. தமிழ் சினிமா குறித்தும், திரைப்படங்கள் குறித்தும், திரையிசைக் கவிஞர்கள் குறித்தும் அவர் செய்திருக்கும் ஆய்வுகள் குறித்துக் கேட்டால் நமக்கே தலைசுற்றும். அந்த அளவுக்கு எல்லாமே அவருக்கு அத்துப்படி. தமிழ் சினிமா குறித்து கவிஞர் பொன். செல்லமுத்து இதுவரை தொகுத்திருக்கும் புத்தகங்கள் 14. எழுதியிருக்கும் புத்தகங்கள் 12. இப்போது 15 ஆவது தொகுப்பாக அவர் வெளிக் கொணர்ந்திருக்கும் புத்தகம் […]

Read more

கிணற்றுக்குள் காவிரி

கிணற்றுக்குள் காவிரி , ஜெ. பாஸ்கரன், பவித்ரா பதிப்பகம்,  பக்.146, விலை ரூ.160. நூலாசிரியர் ஜெ. பாஸ்கரன், அடிப்படையில் நரம்பியல் மருத்துவர். பல்வேறு பருவ இதழ்களில் அவர் எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்புதான் "கிணற்றுக்குள் காவிரி'. ஏழாவது சிறுகதை கிணற்றுக்குள் காவிரி. அத்தனைக் கதைகளும் முத்தான கதைகள். இயல்பான மொழியில் (ஓரிரு மருத்துவச் சொல்லாடல்கள் தவிர) நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் கதைகள் அவை. பெரும்பாலானவை பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளே. ஒவ்வொன்றும் வெவ்வேறு சமூகத் தளத்தில் பயணிக்கின்றன. இந்தக் கதை எப்படி முடியப் போகிறது […]

Read more

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென்

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலைரூ.360. நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவத்தை போதிப்பது, சூபியிசம். கருணை, அடக்கம், பணிவு போன்ற மகத்தான அறங்களை எளிய கோட்பாடாக விளக்குவது தாவோயிசம். இந்த மூன்று உயர் நெறிகளையும் அறிந்து சிந்தனை தெளிவுடன் பகிர்ந்துள்ள நுால். மனதின் நுண்ணிய ஆற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று தத்துவங்களும் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தத்துவத்திலும் ஆர்வமுள்ள […]

Read more

ஓம் சக்தி!

ஓம் சக்தி! தமிழக சக்தி பீடங்கள், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஆதியானவள் அன்னை காமாட்சி காஞ்சியிலே குடியிருக்கும் விதம், ஆதிசங்கரர் கோவிலை அமைத்த விதம், தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காத்தருளிய கருணை ஆகியவற்றை ஆசிரியர் பிரபுசங்கர் குறிப்பிடுகிறார். அன்னை காமாட்சியின் அருள் கிடைப்பதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கிறார். இரண்டாவதாக அன்னை மீனாட்சியின் அருளை புத்தகத்தில் வாரி வழங்குகிறார். அன்னையின் வரலாறு, மதுரையின் […]

Read more

ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் […]

Read more

திருக்குறள் புத்துரை

திருக்குறள் புத்துரை, புலவர் சுப்பு.லட்சுமணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.150. திருக்குறளுக்கு விளக்கவுரை வழங்கியுள்ள நுால். பிற உரைகளைப் போலவே குறள்களின் கீழே உரைகளைத் தந்திருப்பதோடு, சிலவற்றில் இலக்கணக் குறிப்பும், அதிகாரத் தலைப்புகளுக்கு சிறு விளக்கமும் தந்திருப்பது சிறப்பு. வழமையான விளக்கங்களாக இருப்பினும் எளிய நடையில் அமைந்திருக்கின்றன. குறள்கள் பலவற்றில் மாறுபட்ட கருத்துகள் மற்றும் பொருள்கள் பிற உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. தாரணமாக, எண்குணத்தான் என்பதற்கு ‘எண்ணத்தக்க குணத்தவன்’ என்றும், வாலறிவன் என்பதற்கு ‘மெய்யறிவு கொண்டவன்’ என்றும், பிறவாழி என்பதை, ‘பிற பொருளின்பம்’ என்றும், இறைவனடி […]

Read more

கடுவழித்துணை

கடுவழித்துணை, கமலதேவி, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150. இறப்பு வீடுகளின் துயரம் நேரடியான கதைமொழியுடன் தமிழ்ச் சூழலில் அறிமுகமானவர் எழுத்தாளர் கமலதேவி. ‘சக்யை’, ‘குருதியுறவு’ என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் (2019) இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கடுவழித்துணை’ (2020) இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளே இவரது கதைகளின் நிலம். கிராமமும் நகரமும் கதைகளில் மாறி மாறி வருகின்றன. கதையின் திறப்பு ஏதாவதொரு ஒற்றைச் சொல்லில் மறைந்து கிடக்கும்படி எழுதுவது ஒரு வகை. அந்த மந்திரச் சொல்லைப் பிடித்துக்கொண்டுதான் மொழியால் […]

Read more

தமிழன்னையின் மாட்சி

தமிழன்னையின் மாட்சி, கவிஞர் இரா.கருணாநிதி, வனிதா பதிப்பகம், விலைரூ.140. சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை, விழிப்புணர்வு போன்ற கவிதைகளில் பொது நலப் பார்வையைக் காண முடிகிறது. இயற்கை, இல்லறம், தாய்மை, காதல் மற்றும் கையறு நிலை சார்ந்த கவிதைகளில் இதம் இழையோடுவதை உணர முடிகிறது. பொதுவான தலைப்புகளில் வரும் இசைப்பாடல்கள் மற்றும் தத்துவப் பாடல்களில் மனித நேயம் எதிரொலிக்கிறது. சில மழலைப் பாடல்கள் தாலாட்டுகின்றன. – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275. வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more
1 4 5 6 7 8 23