போகரின் சப்தகாண்டம் 7000

போகரின் சப்தகாண்டம் 7000, பதிப்பாசிரியர் சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், முதல்பாகம் விலை 500ரூ, இரண்டாம் பாகம் விலை 400ரூ. அமானுஷ்மான சக்திகள் கொண்டவர்கள் என்று பலராலும் நம்பப்படும் சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே வியப்பானவை என்றாலும், சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படும் இந்த நூலில் உள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன. சிவபெருமாள் உமைக்கு அருளிய 7 லட்சம் பாடல்களான ஞானவிளக்கத்தை உமையிடம் இருந்து நந்தியும், நந்தியிடம் இருந்து திருமூலரும், திருமூலரிடம் இருந்து காலாங்கி சித்தரும் அவரிடம் இருந்து போகர் […]

Read more

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி நடத்தி, மகத்தான சாதனை புரிந்தவர் வீர மிகு நேதாஜி! சுதந்திரம் பெற ஒரு லட்சம் வீரர்களைத் திரட்டி பிரிட்டிஷாருடன் போரிட்டு, மணிப்பூர் வழியாக வந்து இரண்டு நகரங்களைப் பிடித்து, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சுபாஷ் போஸ்! இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் எந்த வகையிலும் ஜப்பானையோ, வேறு நாடுகளையோ […]

Read more

துக்ளக் 50 பொன்விழா மலர்

துக்ளக் 50 பொன்விழா மலர், துக்ளக் வெளியீடு, விலை 150ரூ. துக்ளக் பத்திரிகையும், அரசியலும் இரண்டற கலந்தவை. இதன் ஆசிரியர், மறைந்த சோ பார்வையில் அலசப்பட்டு, அந்தந்த காலகட்டங்களில் ெவளியான கட்டுரைகள், செய்திகள், கார்ட்டூன்கள், கேள்வி – பதில்கள் போன்றவற்றின் குவியல் தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தை முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, சில மணி நேரங்கள் புரட்டிப் பார்த்தால், இந்திய அரசியல் மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தளபாடமாக அறிந்து கொள்ளலாம். அப்போதைய அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, இந்த நுாலில் இப்போது […]

Read more

சங்க கால மக்கள் வாழ்க்கை

சங்க கால மக்கள் வாழ்க்கை, சு.தண்டபாணி, ஜெயலட்சுமி பப்ளிகேஷன்ஸ், பக். 300, விலை 350ரூ. மதுரையில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் வைகையாற்றின் கரையில் உள்ள கீழடி எனும் இடத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியில், ஆயிரக்கணக்கான மிகத் தொன்மையான பொருட்கள் கிடைத்து உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, தொல்பொருள் ஆய்வு செய்வோர் இவை, 2,600 ஆண்டுகள் பழமையானவை என்றும், பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இப்பொருட்கள் மூலம் தெளிவாக உணர முடிகிறது. சங்க இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு தோன்றியவை. இவை […]

Read more

மணற்கேணி

மணற்கேணி, எச்.நாராயணசாமி(நானா), வானவில் புத்தக்களஞ்சியம், விலை 306ரூ. வித்தியாசமான அம்சங்களுடனும், மற்ற நூல்களில் இருந்து வேறுபட்டும் தயாராகியுள்ள இந்த நூல், பல விதமான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணம் போலக் காட்சி அளிக்கிறது. நூலாசிரியர் தான் கற்றரிந்த, தனது அனுபவத்தில் கிடைத்த மற்றும் தான் படித்த, பார்த்த பயனுள்ள தகவல்களைக் கேள்வி பதில் வடிவில் தந்து இருப்பது புதிய முயற்சி. வரலாறு, அறிவியல், காதல், காமம், முதுமை, தத்துவம், உளவியல், பத்திரிகை, மனதைத் தொட்ட பாடல்கள் போன்ற பல விஷயங்களை சுவைபடத் தொகுத்துத் தந்து […]

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா,  இரும்புப் பெண்மணி, எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.288. எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். கிளியோபாட்ரா அழகாகப் பிறந்தவர் என்பதைவிட தன்னைச் சுற்றிலும் ஆபத்துடன் பிறந்தவர் என்பதே பொருத்தம். 9 மொழிகள், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட 6 துறைகள், அரசியல் சாமர்த்தியம், போர்த்திறன், அபாரத் துணிச்சல் ஆகியவற்றை […]

Read more

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள்

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள், முத்தாலங்குறிச்சி காமராசு,காவ்யா பதிப்பகம், பக்.244, விலை ரூ. 240. நெல்லைச் சீமையைப் பற்றி, தாமிரவருணி நதிக் கரையோரம் பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்லதொரு தகவல் கருவூலம் இந்நூல்.எங்கெங்கோ தேடித் தனித்தனி நூல்களில் படிக்க வேண்டிய விஷயங்களை ஒரே நூலில் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். ஏற்கெனவே, தாமிரவருணி சார்ந்து இவர் எழுதிய, தாமிரபரணிக் கரையினிலே “தாமிரபரணி கரையில் சித்தர்களுடன் பயணிப்போம்  என்ற தொடர்கள் இணைந்து நூலாகியிருக்கிறது. நன்றி: தினமணி, 2/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பேராசிரியர் கோ. ரகுபதி, வெளியீடு: தடாகம், விலை: ரூ.160 ஒரு பெண், இதழாசிரியராக நிலைப்பதே அரிது என்கிற காலத்தில் இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வி.பாலம்மாள். பெண்களுக்கென அவர் வெளியிட்ட முதல் இதழ் ‘சிந்தாமணி’. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்க ‘சிந்தாமணி’ வழியாக பாலம்மாள் போராடினார். பெண் முன்னேற்றத்துக்காக பாலம்மாள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்திருக்கிறார். நன்றி: இந்து தமிழ், 12/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

கதவு திறந்ததும் கடல்

கதவு திறந்ததும் கடல், பிருந்தா சேது, தமிழினி பதிப்பகம், விலை: ரூ.130, கவிஞர், எழுத்தாளர் சே. பிருந்தாவின் தன் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு இது. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடித்தனமாகி, தனிக் குடும்பங்கள் உதிரி மனிதர்களாக வாழத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. நம் நாட்டில், ஒற்றைப் பெற்றோர் பெருகி வருவது தவிர்க்க முடியாத காலமாற்றம். அதன் சிக்கல்களை ஆராயவோ, எளிதாகக் கையாளவோ, மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற நிலைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்கவோ, யாரையும் குறை கூறாமல் தீர்வுகளைக் கண்டடையவோ பலர் முயல்வதில்லை. அப்படியான தீர்வை நோக்கி […]

Read more

முதல் பெண்கள்

முதல் பெண்கள், நிவேதிதா லூயிஸ், மைத்ரி புக்ஸ், விலை:ரூ.200, பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக்கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. […]

Read more
1 26 27 28 29 30 88