அச்சம் தவிர்… ஆளுமை கொள்

அச்சம் தவிர்… ஆளுமை கொள், பரமன் பச்சைமுத்து, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.150. படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு […]

Read more

அர்த்தமற்ற மனித மனம்

அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ), வ.ராஜ்குமார். கவிதா பப்ளிகேஷன், பக்.176. விலை ரூ.160. அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, பக். 453, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.100 மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி: தமிழ் இந்து, 1/2/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஏர்வாடியார் கருவூலம்

ஏர்வாடியார் கருவூலம், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், பக். 114, விலை 70ரூ. கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின் ஆசிரியர், ஏர்வாடியாரின் படைப்புலகம் குறித்து இரு பெரும் தகுதிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒன்று, ஏர்வாடியார் தன் படைப்புகள் மூலம் எவ்வாறு மற்றவர்களை ஈர்த்தார் என்பது. மற்றொன்று, அவர் தன் திறனாய்வுகள் மூலம் எவ்வாறு படைப்பாளிகளை ஊக்குவித்தார் என்பது. சரியாகச் சொன்னால் இந்த நுாலாசிரியரான கவிஞர் ரவியை, அவர் எவ்வாறு ஊக்குவித்தார் […]

Read more

மனம் சொல்லுமே மகிழ்ச்சி

மனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள்

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள், எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தோன்றியது என்று வரலாறு இருக்கிறது. ஆனால், மதுரை எப்போது தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாவட்டம் என்கின்றனர் சிலர். எனவே, கோவில் மாநகர், அரசியல் நகரம், துாங்கா நகரம், பண்பாட்டு நகரம், கடம்பவனம் என, பல்வேறு […]

Read more

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள்

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், மொத்த விலை: ரூ.1,300 திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இயங்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகள் முக்கியமானவை. சமீபத்தில், இந்த வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளியின் முக்கியமான கோயில்களினுடைய வரலாற்றையும் கலைச் சிறப்புகளையும் கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு ஐந்து தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். அவை ‘சோளர் தளிகள் ஏழு’, ‘சோழர் தளிகள் நான்கு’, ‘எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள்’, ‘பாச்சிள் கோயில்கள்’, ‘தவத்துறையும் கற்குடியும்’. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மையப்படுத்தி […]

Read more

பெரியார் இன்றும் என்றும்

பெரியார் இன்றும் என்றும், (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்), விடியல் பதிப்பகம், விலை: ரூ. 300. பெரியார் தன் வாழ்நாளில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், ஆற்றிய உரைகள் போன்றவற்றைப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு ஆயுள் வேண்டும்! பெரியார் எழுத்துக்களின் தொகுப்புகள் அனைத்தையும் படிக்க முடியாதவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நிச்சயம் பரிந்துரைக்கலாம். பெரியார் தொட்ட எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய பெருந்தொகுதி! மிகவும் மலிவான விலை என்பது கூடுதல் வாசகர்களை ஈர்க்கும் நன்றி: தமிழ் இந்து, 18/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more
1 28 29 30 31 32 88