பெண் எனும் பேராளுமைகள்

பெண் எனும் பேராளுமைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி, பாரதி புத்தகாலயம், பக்.128, விலை ரூ.120. நூலில் உள்ள 7 கட்டுரைகளில் “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” என்ற கட்டுரையும், பரதநாட்டியம் பற்றி என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன. “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. “பரதநாட்டியம் பற்றி“ கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400 ரூ. முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது. நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன. இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 160, விலை 150ரூ. அறிவு மட்டுமே ஒருவரை மேன்மையானவர் ஆக்கி விட முடியுமா? முடியாது என்கிறார் ஆசிரியர். மெத்த படித்தவராக, உலகே வியக்கும் தலைவராக ஒருவர் திகழ்ந்தாலும், இவ்வுலகில் யாராவது ஒருவருக்குக் கூட அவர் பகைவராகத் தென்பட்டால் அல்லது நடந்து கொண்டால், அவர் மேன்மையானவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் அல்ல. கோபம், அகந்தை, சோம்பல், வெறுப்பு, பிறழ்ந்து பேசுதல் ஆகியவை மனித இயல்பு என கருதினாலும், அவை தான் ஒருவரை பண்பட அல்லது மேன்மையடையச் […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை,  முளங்குழி பா.இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம்,  பக்.188, விலை ரூ.130. போதைப் பழக்கத்தால் எவ்வளவு பெரிய மேதைகளும், வீரர்களும், தலைவர்களும் வீழ்ந்துவிடுவார்கள். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள் எனக் கூறும் நூல். போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் நூல் எடுத்துக் கூறுகிறது. மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், பாபர், ஹுமாயூன், சிவாஜியின் மகன் சாம்பாஜி, இராபர்ட் கிளைவ் உட்பட பலர் போர்களில் தோல்வி அடைந்ததற்கும் மரணமடைவதற்கும் காரணமாக போதைப் பழக்கமே […]

Read more

வேணாடும் தமிழ்மரபும்

வேணாடும் தமிழ்மரபும்,  வ.ஆன்றனி ஜோசப், பக்.369, விலை ரூ.390. உருவங்கள் ஊடக ஆய்வு மையம், புலவன்விளை, கல்லாங்குழி அஞ்சல், குமரி நமாவட்டம். நன்னூல் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு நாடுகளில் ஒரு நாடாக வேணாடு உள்ளது. எனினும் சங்க காலத்தில் வேணாடு என்ற ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வேணாடு எங்கு அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல்துறை கல்வெட்டுத் தொகுப்புகளின்படி, தற்போதைய கேரள மாநிலத்தின் கோட்டயம், திருவல்லா, சங்கனாசேரி, ஏற்றமானூர் முதலிய பகுதிகள் வேணாட்டின் பகுதிகளாக இருந்திருக்கின்றன. கன்னியாகுமரி, மங்கலம் […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெரல் பப்ளிஷர்ஸ், பக். 220, விலை 140ரூ. ஓய்வு பெற வங்கி அதிகாரியான இந்நூலாசிரியர், சிறுகதைகள், நாடகம், பேட்டிகள், சமூகப் பிரச்னைகள் குறித்த கட்டுரைகள் என்று பல பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதோடு, அவற்றை தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இசையை பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும் இவர் எழுதிய இரண்டாவது நூல் இது. கர்நாடக இசையில் ஆயிரக்கணக்கான ராகங்கள் உள்ளன என்றும், அவற்றை எல்லாம் முழுமையாக அறியும் இசை ஞானம் தனக்கு இல்லை என்றும் எழுதியுள்ளது எப்படி என்று எண்ணத் […]

Read more

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம், கோ பெரியண்ணன், வனிதா பதிப்பகம், விலை ரூ. 150. ஒழுக்கத்துடன் வாழ்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றைக் கற்றுத் தரும் சாரணர் இயக்கம் பற்றிய முழு விவரத்தை தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சாரணர் இயக்கத்தின் சிறப்பு சின்னங்களை பெறும் முறை, உற்று நோக்கும் பயிற்சி முதலுதவி சிகிச்சை குழுவுடன் கலந்து பணி செய்தல், செய்கை பேச்சு யோகாசனம் போன்ற பல அம்சங்கள் படங்களுடன் விளக்கிக் கூறப்பட்ட இருக்கின்றன. இந்தியாவில் சாரணர் இயக்கம் முதன் முதலில் எவ்வாறு […]

Read more

பழைய சோறு

பழைய சோறு, கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 70ரூ. புதிய கோணம் புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன் எழுத்தில் பழைய சோறு நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு உணவு என்பதை தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு. இத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன் சொக்கவைக்கும் நடையில் கவளம் கவளமாக தாயன்போடு நம் கைகளில் தருகிறார்கள். அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப் பட்டிருப்பதால் படிப்பவருக்கு பழைய-சோறு […]

Read more
1 30 31 32 33 34 88