தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. இயல், இசை, நாடகம் என மொழியையே மூன்றாகப் பகுத்து வளர்த்த பண்டைத் தமிழகத்தில், வளர்ச்சி பெற்றிருந்த கலைகள் ஏராளம். நமது கலை உன்னதங்கள் பலவற்றை இழந்துவிட்டோம், இப்போதும் இழந்துவருகிறோம். புகழ்பெற்ற தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய இந்த நூல் நமது கலைச் செழுமையின் முக்கியத்துவம், பின்னணி பற்றி எடுத்துரைக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000017806.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தித்திக்கும் விருந்து

தித்திக்கும் விருந்து, மருதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.80 தாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

பாதி நீதியும் நீதி ப{ா}தியும்

பாதி நீதியும் நீதி ப{ா}தியும், கே.சந்துரு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்துக்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுப்பாராயும் மேனாள் நீதிபதி சந்துருவின் கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு. இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கட்டுரைகள், ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானபோது வழக்கறிஞர்கள், சட்டத் துறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை. இப்போது புத்தக வடிவம் பெறும் இக்கட்டுரைகள், விவாதிப்பதிலும் ஓர்ந்து கண்ணோடாத முறைமைக்கு ஒரு முன்னுதாரணம். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. […]

Read more

திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா வெளியீடு, பக். 223, விலை 230ரூ. தமிழ்ச் சமுதாயத்தில் பல நுாறு ஆண்டுகளாக, ஆழமாக வேரூன்றிப் புரையோடிப் போன மடமைகள், பழமைகள் ஆகியனவற்றை நகைப்புக்கு உள்ளாக்கிப் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவை திராவிட இயக்க படைப்பாளிகளின் படைப்புகளும், அவர்தம் இலக்கிய ஆய்வுகளுமாகும். திராவிட இயக்கப் படைப்பாளர்கள் தம் படைப்புகளில் சமூக நீதி, வகுப்பு வாரி உரிமை, மொழி மானம், இன மானம், பெண்ணுரிமை, தமிழ் மொழி வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு போன்ற கோட்பாடுகளை உள்வாங்கி ஜாதி, […]

Read more

நீ நதி போல ஓடிக் கொண்டிரு

நீ நதி போல ஓடிக் கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன், பக்.120, விலை ரூ.100. பெண்களின் பிரச்னைகளைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். தீர்வுகள் சொல்லலாம். ஆனால் ஒரு பெண் தன் பிரச்னைகளுக்கான தீர்வுகளைச் சொல்வதைப் போல ஓர் ஆணால் சொல்ல முடியாது என்பதற்கு இந்நூலே ஓர் எடுத்துக்காட்டு. பெண்களை வீட்டில் யாரும் பாராட்டுவதில்லை. தேவையற்ற பழிச்சொற்களுக்குப் பெண்கள் ஆளாக நேரிடுகிறது. பேருந்துகளில், பொது இடங்களில் பெண்கள் ஆண்களால் சீண்டப்படுகிறார்கள். பெண்கள் தனியாக தொலைதூரங்களுக்கு ஆண்களைப் போல பயணம் செய்ய முடியாது. பெண்கள் […]

Read more

காந்தி வந்தால் ஏந்தும் கருவி

காந்தி வந்தால் ஏந்தும் கருவி, கிருங்கை சேதுபதி,  கபிலன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் […]

Read more

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை ரூ.190 சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல் இயற்கையோடு இயைந்து வேளாண்மையை மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் பரவலாகிவருகின்றன. ஆனால், இதற்கு வழிகாட்டும் முழுமையான களக் கையேடு நம்மிடம் இல்லை. அதை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது பாமயனின் இந்நூல். ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ பகுதியில் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாகக் காரணமாக இருந்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’போல இந்த நூலும் பயன்படும். நன்றி: தமிழ் இந்து இந்தப் புத்தகத்தை […]

Read more

புதிய செலபஸ்

புதிய செலபஸ்,  கோ.வரதராஜன்,  தமிழ்ச்சுவடி, பக்.424, விலை ரூ.400. தேசியப் பண்பாட்டை வடிவமைத்த ஆன்மிக அறிஞர்கள் முதல் தற்கால தூய்மை இந்தியா திட்டம் வரை-அவற்றைப் பற்றி மிக எளிமையாக, அதே நேரத்தில் அதன் சாரம் குறையாத வகையில் நூலாசிரியர் கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். பொதுவியல், கல்வியியல் மற்றும் தத்துவவியல், பொருளியல், விஞ்ஞானவியல் என நான்கு பகுதிகளாகப் பிரித்து, அதில் 81 கட்டுரைகளை இடம் பெறச் செய்துள்ளார். வாழ்வுக்கு வள்ளுவரையும், படிப்பறிவுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனையும், பண்பாட்டுக்கு சகோதரி நிவேதிதையையும், இலக்கியத்துக்கு பாரதி, கம்பரையும், அறிவியலுக்கு அப்துல் […]

Read more

அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு,  நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன. நீங்கள் எந்த வருட மாடல்? இளிச்சவாயர்களாக இருப்போம்,  யார் உங்கள் பிக் பாஸ்,  அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள். இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் […]

Read more

நாட்டார் கலைகள்

நாட்டார் கலைகள்,  அ.கா. பெருமாள், கோமளா ஸ்டோர் பிரபல நாட்டுப்புறக் கலை ஆய்வாளரான அ.கா. பெருமாள், பேராசிரியர் நா. ராமச்சந்திரனுடன் இணைந்து எழுதிய ‘தமிழக நாட்டார் நிகழ்த்துக்கலைகள்’ என்ற நூலை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த நூலும் முக்கியமானது. நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 32 33 34 35 36 88