தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 357, விலை 230ரூ. சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே, இந்நுால். சங்க இலக்கியங்களில் ஆயர்கள், புள்ளினம், வாழ்வியல் எனப் பொதுவான கருத்துகளும், புறநானுாறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து குறித்த தனித்த சிந்தனைகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. இவ்வாறே, திருக்குறள், சீவகசிந்தாமணி, நளவெண்பா, சித்தர்கள், சிற்றிலக்கியங்கள், நாவல், சிறுகதை, மொழியியல், நாட்டார் வழக்கு, மொழிப்பயன்பாடு என இன்றுவரையிலான பல்வேறு தலைப்புகளில் […]

Read more

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள்

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள், ஞானபாரதி செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், விலை 150ரூ. மாவீரர்களின், ஞானிகளின் தன்னலமற்ற தலைவர்களின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் நாமும் அப்படி ஆக முடியும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் ஆழ விதைக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும், தோப்பில் முகம்மது மீரான், இர.பிரபா, எதிர் வெளியீடு, பக். 118, விலை 130ரூ. பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக் கூட எந்த எழுத்தாளருக்கும் வைப்பதில்லை’ (பக்., 11) என்று நியாயமாக ஆதங்கப்படும் நுாலாசிரியர், அன்பின் பெருங்கடலாய் தோப்பில் முகமது மீரானை ஆராதித்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் உரையாடிய நேர்காணல்களையும், மீரானின் படைப்புகளான தேங்காய்ப் பட்டணம், மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களையும் இதில் […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225. செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செல்பேசியின் மூலம் […]

Read more

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்,  மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், பாரி நிலையம், பக்.288, விலை ரூ.200. திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? அதற்கான பின்புலம் என்ன? என்பதை விளக்கும் கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய கவிதை நூல்கள், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அவர்கள் நடத்திய இதழ்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்களைப் பற்றியும், அவர்களின் குறிப்பிடத்தகுந்த சொற்பொழிவுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கத்துடன் 1999 இல் நடத்தப்பட்ட தமிழ் […]

Read more

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு; காவ்யா, பக்.318; ரூ.320; ஐம்பொன்னில் செம்பு அதிகம் கலந்து வார்க்கப்படும் திருவுருவத்தை செப்புத் திருமேனி என்பர். தொடக்கத்தில் இறைவன் உருவங்களே உருவாக்கப்பட்டன. பின்னர் அரசர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் திருமேனிகளையும் செப்புத் திருமேனிகளாக வடித்தனர். தமிழகத் திருக்கோயில்களில் இடம்பெறும் கலைப் பாணிகளை வரலாற்று நோக்கில் வகைப்படுத்தி விளக்கியுள்ளார் ஆய்வாளர். பண்டைக் காலத்தில் சிற்பக்கலை இருந்ததற்கான சான்றுகளை சிலப்பதிகாரத்தைக் கொண்டும், சங்க காலத்தில் உலோகங்களால் திருமேனிகள் செய்யப்பட்டதை நன்னன் என்ற அரசனின் வரலாறு கொண்டும் விளக்கியுள்ளது […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. உயிர் எப்படித் தோன்றுகிறது என்பது பற்றிய ஆர்வம் மனிதரிடம் பிறந்த எப்படி, வளர்ந்தது எப்படி, நகூன உயிரியல் இது பற்றி என்ன கருத்தை முன்வைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக வழங்குகிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எங்கே செல்கிறது இந்தியா

எங்கே செல்கிறது இந்தியா, டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ், எதிர் வெளியீடு, விலை: ரூ.350 இந்திய புள்ளியியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும், ஆர்ஐசிஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் இருவரும் இணைந்து எழுதிய ‘எங்கே செல்கிறது இந்தியா: கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள்’ புத்தகத்தில், இந்தியாவின் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றான திறந்தவெளி மலம் கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப் பார்வையை முன்வைத்திருக்கிறார்கள். இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதைச் சார்ந்த பிற சிக்கல்களையும் காரணங்கள், விளைவுகள், […]

Read more

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், சி.கே.மாணிக்கவாசகம், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. மிகச் சிறிய மாற்றங்களை நடைமுறையிலும் உணவிலும் கொண்டுவருவதன் மூலம் மிகப் பெரும் பயன்களைப் பெற முடியும் என்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து,9/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு, த. சிவக்குமார், அய்யா நிலையம், பக். 224, விலை ரூ.220. அறவழிப்பட்ட சமுதாயமோ, சமூகமோதான் சிறப்பானதாகக் கருதப்படும். ஆகவேதான், ஐம்பெருங்காப்பியங்களை இயற்றிய ஆசிரியர்கள் அவரவர் சார்ந்த சமயம், மதம் குறித்த அறக்கோட்பாடுகளை தங்கள் காப்பியங்களில் இடம்பெறச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினர். காப்பியங்களில் உள்ள அறக்கூறுகளை, ஐம்பெருங் காப்பியங்களின் அமைப்பும் நோக்கமும் சமூக அறங்கள், சமய அறங்கள், அறக்கோட்பாடுகளும் தீர்வும் ஆகிய நான்கு இயல்களின் மூலம் இந்நூல் எடுத்துரைக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை உறுதிப் பொருள்களும் […]

Read more
1 34 35 36 37 38 88