நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வுகள் அனுபவங்களாய் இருந்து கொண்டே இருக்கிறது. நிகழ்வுகளின் மொத்தத் தொகுப்பான வாழ்க்கையில் செய்வதற்கு உரிய செயல்களைச் செய்வது மனிதப் பண்பு, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்வது இறைப் பண்பு. அப்படி இயங்கும் உலகில் அரிய மனிதர்களின் உயரிய பண்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்த நுால். சென்னை மாகாண முதல்வர் ஓமந்துாரார், சாலையோர புளிய மரங்களுக்கு எண் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித்தந்த நிகழ்வு, எம்.கே.தியாகராஜ […]

Read more

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மு.வரதராசன்,பாரி நிலையம், பக்426, விலை ரூ200. காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன. காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, பொருந்தாக் காமத்தையோ திருவள்ளுவர் கூறவில்லை என்றும், அன்பின் ஐந்திணை என்று சான்றோர் புகழ்ந்த ஒத்த அன்புடைய காதலரின் வாழ்க்கையையே கூறுகின்றார் என்றும் கூறும் மு.வ., காதலையும் தொண்டையும் ஒப்புமைப்படுத்திக் கூறுமிடம் அருமை. […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.என். சாமுவேல், முல்லை நிலையம், விலை 120ரூ. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நிகழ்வுகளை முதன் முறையாக 2007 ம் ஆண்டு பதிவு செய்த இந்த நூல், இப்போது மறுபதிப்பாக வெளியாகி இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ மொழியின் சிறப்பைக் காப்பதும் உலகம் முழுவதும் அதனைப் பரவச் செய்வதும் சமுதாயப் பொறுப்புணர்வு கொண்ட தமிழனின் கடமை என்பதை இந்த நூல் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. நன்றி: […]

Read more

சிறகை விரி, பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. பட்டிமன்றப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பாரதி பாஸ்கர் எழுதி இருக்கும் இந்த நூல், இலைகளே தெரியாத அளவுக்கு, ருசியான பழங்கள் கொத்துக் கொத்தாக பழுத்துத் தொங்கும் மரம் போல சிறப்பாகக் காட்சி அளிக்கிறது. 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன. இவற்றில் ஆன்மிகம் சற்றே தூக்கலாக இருக்கின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அவை அமைந்து இருக்கின்றன. […]

Read more

நான் பார்த்து வியந்த சீனா

நான் பார்த்து வியந்த சீனா, டி.ரமேஷ், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. சீனாவின் தொன்மை, பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி சுவையான விஷயங்கள் அதிசயங்கள், பிரச்சினைகள் பற்றி எழுதியிருக்கிறார் ரமேஷ். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மேடை நயம்

மேடை நயம், சொல் அரசு ஹபீபுல்லா, காமா பதிப்பகம், பக். 300, விலை 200ரூ. தனது மிகச் சிறந்த மேடைப் பேச்சால், சொல் அரசு என்ற பட்டத்தைப் பெற்ற இந்நூலாசிரியர், ஏற்கெனவே மேடைச் சிதறல் என்று பிரபலமானவர்களின் மிகச் சிறந்த மேடை பேச்சுக்களை கொண்ட ஒரு நூலையும், மேடை நடை என்று மேடை பேச்சிற்கு வழிகாட்டியாக ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். அவற்றுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, இந்நூலையும் வெளியிட்டுள்ளார். இதில் பல வகையான மேடைப் பேச்சாளர்களின் சொல் நயத்தினை, படித்து ரசிக்கும்படியாகவும், […]

Read more

நமது அடையாளங்களும் பெருமைகளும்

நமது அடையாளங்களும் பெருமைகளும்,  இறையன்பு, கந்தவேல், எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100; தேசிய அடையாளங்களான தேசியச் சின்னம், தேசியக் கொடி, தேசிய விலங்கான புலி, தேசியப் பறவையான மயில், தேசிய நீர் வாழ் விலங்கான ஓங்கில் (டால்பின்), தேசியப் பாரம்பரிய விலங்கான யானை, தேசிய மரமான ஆலமரம், தேசிய மலரான தாமரை, தேசியப் பழமான மாம்பழம் ஆகியவற்றைப் பற்றியும், தமிழக அடையாளங்களான தமிழக இலச்சினை, தமிழக விலங்கான வரையாடு, தமிழகப் பறவையான மரகதப்புறா, தமிழக மரமான பனைமரம், தமிழக மலரான செங்காந்தள் மலர், […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.248; ரூ.200 சமூகத்தில் நிலவும் அவலங்களை எந்தவித சமரமும் இல்லாமல் தனது பார்வையில் துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். மனிதநேயம், இலக்கியம், ஆன்மிகம் என பல துறைகளில் தேசத்துக்காகப் பாடுபட்ட சான்றோர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் அது அடித்தளமாகிய வாக்காளர்களின் பலவீனம் எனக் கருத வேண்டும் என்கிறது வாக்காளன்- ஒரு வேடிக்கை மனிதன் என்ற கட்டுரை. மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது சித்தர் சொல் கேளீர் என்ற கட்டுரை. கலக மானுடப் […]

Read more

யாளி

யாளி, ச.வைரவ ராஜன், பாவைமதி வெளியீடு, விலை 180ரூ. வித்தியாசமான கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஏராளமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழகக் கோவில்களில் மட்டுமே காணப்படும் சிற்பங்களான யாளி என்ற மிருகம் இருந்தது உண்மையான என்ற ஆய்வு பல இலக்கியங்களின் மேற்கோள்கள் வழியாகக் கொடுக்கப்பட்டு இருப்பது புதுமையாக உள்ளது. மேலும் யானை, காகம், நாய், பேய் போன்றவைகள் குறித்தும் ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் தந்து இருப்பது சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கு வண்ணங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற தகவலும் வியக்க வைக்கிறது. […]

Read more

கன்னித் தமிழும் கணினித் தமிகும்

கன்னித் தமிழும் கணினித் தமிகும், இரா.பன்னிரு கை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 286, விலை 180ரூ. ‘என்று பிறந்தனள் இவள்?’ என அனைவரும் வியக்குமாறு விளங்கும் தமிழின் தொன்மை முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் பயணிக்கிறது, இந்நுால். தனித்தனியான இருபத்து மூன்று கட்டுரைகளைக் கொண்டிருந்தாலும், மொழியின் வளர்ச்சிப் பாதையில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் தமிழின் இனிமை மிகுதிப்படுகிறது. தமிழின் சொல்வளத்தை அறியச் செய்யும் நிகண்டுகளில் இந்நுால் தொடங்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும் சிந்தாமணி நிகண்டு, ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு […]

Read more
1 33 34 35 36 37 88