நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. அறிவு உள்ள யாவரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எத்தகைய கேள்வி கேட்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரையும் தனிப்படுத்திக் காட்டுகிறது. பயனுள்ள பதிலுக்கான கேள்வியைக் கேட்பவரது அறிவு முதிர்ச்சி அடைகிறது. அத்தகைய நூற்றுக்கணக்கான கேள்விகளை தமக்குத் தாமே கேட்டு, அதற்கான விடைகளையும் தாமே தேடியும் சிந்தித்தும் தொகுத்திருக்கிறார் இறையன்பு. வாசிக்க வாசிக்க நமக்குள் எழும் பல கேள்வி முடிச்சுகள் சிக்கல் பிரிந்து அவிழ்கிறது. அதன் விளைவாக அறிவில் மலர்ச்சி முகிழ்கிறது. பல […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம், முனைவர் மா.ராமச்சந்திரன், மணிமேகலை பிரசுரம், பக். 118, விலை 130ரூ. ‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள். ‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய […]

Read more

சிற்றில்

சிற்றில், பா.வெ. அருணா பதிப்பகம், விலை 50ரூ. இந்நுாலை படிக்கும் அனைவரும், தங்களது குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதைய நிலை வரை பயணப்பட்டதை வார்த்தைகளில் வடித்துள்ளார், ஆசிரியர் பா.வெ.பெற்றோரால் வரமாக வழங்கப்பட்ட, ‘பால்யம்’ எனும் சுதந்திரக் காற்று, நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அக்கறை எனும் பெயரில் சாபமாக நம்மால் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விதையாய் விதைக்கிறது, ‘பால்யம் எனும் வரம்!’ இந்த குற்ற உணர்ச்சி நம்மை சற்றே உறுத்திக் கொண்டிருக்க அதற்கு தீர்வாய் அமைகிறது, ‘சில புரிதல்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நுாலின் கடைசி அத்தியாயம். […]

Read more

21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி

21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி, யுவால் நோவா ஹராரி, பெங்க்வின் ராண்டம் ஹவுஸ், விலை: ரூ.799 குரங்கினத்திலிருந்து உருவான மனித இனம் பற்றிப் பேசிய ‘சேப்பியன்ஸ்’, கூரறிவு வாய்ந்த மனிதனின் எதிர்காலம் பற்றிப் பேசிய ‘ஹோமோ டூஸ்’ ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து வரலாற்றறிஞர் யுவால் எழுதியுள்ள இந்நூல் இன்றைய உலகின் சவால்களை அலசுகிறது. இன்றைய உலகின் அறிவுத் திறனோடு கூடவே அதன் மூடத்தனங்களையும் விரிவாக இந்நூலில் அலசுகிறார். தினமும் கண்விழித்த நேரத்திலிருந்து உறங்கச் செல்லும் நேரம் வரை நம்மை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பங்கள், பேதங்கள் […]

Read more

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி,  நூற்றுக்கணக்கான ஜாதிகள் மற்றும் தீண்டாமையினால் – சி.கண்ணன்; நோஷன் பிரஸ், பக்.146, விலை ரூ.150. எந்த விஷயத்தையும் ஒரு புதிய கோணத்தில் பார்த்து, மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. உதாரணமாக ஜாதி குறித்த நூலாசிரியரின் பார்வையைக் கூறலாம். வர்ணமும் ஜாதிகளும் வட இந்தியாவில் ஏற்படாமல் இருந்திருந்தால், வட இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள் தோல்வியில்தான் முடிந்திருக்கும். ஐரோப்பாவில் சுமார் 30 கோடி மக்களும், சைனாவில் சுமார் 140 கோடி மக்களும், அமெரிக்காவில் சுமார்30 கோடி மக்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜாதி […]

Read more

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம்

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம், வை.சந்திரசேகர், அய்யா நிலையம்,  பக்.208, விலை ரூ.200. தேசிய இயக்கத்துக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள உறவை மிக விரிவாக, தெளிவாக எடுத்துரைக்கும் நூல். தமிழ் நாடகங்களில், கவிதைகளில், புதினங்களில், சிறுகதைகளில் தேசிய இயக்கத்தின் தாக்கம் எவ்விதம் செயற்பட்டது என்பதை நிறைய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூல் விவரிக்கிறது. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பல கவிஞர்களின் படைப்புகளில் காணப்படும் தேசிய சிந்தனைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தேசத்தின் இருகண்களாகக் கொண்டு […]

Read more

நீலத்தங்கம்

நீலத்தங்கம்: தனியார்மயமும், நீர் வணிகமும், இரா.முருகவேள், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.70 மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர் எப்படி உலகம் முழுக்கச் சந்தைப் பொருளானது என்பதை இரா.முருகவேளின் ‘நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்’ நுட்பமாக விவரிக்கிறது. டெல்லியில் தனியார்மயத்திடமிருந்து குடிநீரைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் அரசியலை மெச்சும் அதேவேளையில், அதற்குப் பின்னிருக்கும் சித்தாந்தச் சிக்கல்களையும் விவரிக்கிறது. நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார். குடிநகர்த்துதலுக்குப் பின் இருக்கும் பல்வேறு காரணங்களில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. […]

Read more

உலக உத்தமர் கலாம்

உலக உத்தமர் கலாம்,  தொகுப்பாசிரியர்: கவிதாசன், குமரன் பதிப்பகம், பக்.224, விலை ரூ.150. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் பழகியவர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், காவல்துறை கூடுதல் இயக்குநர் செ.சைலேந்திரபாபு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், நெல்லை சு.முத்து உள்பட 18 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளிலிருந்து அப்துல்கலாம் என்ற மனிதரின் உயர்ந்த பண்பு, பழகும் விதம், பிறரின் துன்ப, துயரங்களில் பங்கெடுக்கும் தன்மை, வித்தியாசமான அவருடைய சிந்தனைகள் என […]

Read more

பெரியபட்டினம் காசுகள்

பெரியபட்டினம் காசுகள், ப.சண்முகம், முன்னாள் பேராசிரியர், தஞ்சாவூர் தொல்லியல் கழகம், பக். 130, விலை 125ரூ. பெரியபட்டினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்ந துறைமுகப் பட்டினமாக இருந்த ஊர். இன்றும் சிவகங்கை அருகே உள்ள கீழடி அகழ்வாய்வு, தமிழகத்தில் தென்பாண்டி நாடு கலாசார கேந்திரம் என்பதை உணர்த்துகிறது அல்லவா… பெரிய பட்டினத்தில் கிடைத்த பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் காசுகள் தவிர தமிழகத்தில், விஜயநகர அரசர்கள், ஆங்கில ஐரோப்பிய கம்பெனிகள் காசுகள் என்று பலவற்றை இந்த நுாலில் விளக்குகிறார் ஆசிரியர். சங்க கால பாண்டியர் காசுகளை […]

Read more

தமிழ்ச் சிறுகதை வரலாறு

தமிழ்ச் சிறுகதை வரலாறு, கி.துர்காதேவி, கி.ராஜம் வெளியீடு, விலை 225ரூ. தமிழகத்தில் பிரசண்ட விகடன் என்ற இதழ், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இதழில் 1935 முதல் அந்த இதழ் நிறுத்தப்படும் வரை ஆசிரியராக இருந்த எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் காலத்தில் அந்த இதழில் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 1951 முதல் 1952 வரை உள்ள ஓராண்டு காலத்தில் வெளியான சிறுகதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அந்த காலத்தில் வெளியான கதைகளின் சுருக்கம், அந்தக் கதைகளின் பாடுபொருள், […]

Read more
1 35 36 37 38 39 88