கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை, மலையாள மொழியில் ரங்க ஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம், விலை 120ரூ. போர்ச்சுக்கீசிய ஆட்சியில் கோவாவில் நடந்த மதமாற்றத்தால் ஏற்படும் கொடுஞ்செயல்களை நூலாசிரியர் அனைவருக்கும் புரியும் வகையில் நேரடி காட்சியாக காண்பித்து உள்ளார். கொங்கன் பகுதியில் இருந்து ஓடிச்செல்ல வேண்டிய ஒரு பகுதி மக்களின் சோகக் கதையை நூலாக, நூலாசிரியர் வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை விட்டு விலகுவதில்லை, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் எஸ். செல்வசுந்தரிக்கு இது முதல் நாவல். ஆயினும், வார்த்தைகளையும், சம்பவங்களையும் செதுக்கிச் செதுக்கி, இதை ஒரு நல்ல நாவலாக உருவாக்கியிருக்கிறார். கதையில் முக்கிய பாத்திரங்களாக வருகிறவர்கள் திருநங்கைகள். அவர்களுடைய வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்த நாவல். முதல் நாவலையே வெற்றி நாவலாக உருவாக்கியுள்ள செல்வசுந்தரி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள்

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 350ரூ. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் “சதிலீலாவதி”. இது 1936-ம் ஆண்டு வெளிவந்தது. அறிவிருந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய 15-வது படமான ‘‘ராஜகுமாரி” , அவரை கதாநாயகனாக உயர்த்திய படம். அது முதல் ஏறுமுகம்தான். 1977-ல் சட்டசபை தேர்தலில் அவருடைய அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. முதல் – அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் நடித்து முடித்து படம் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” (1978). இது […]

Read more

அரசியல் அறிவியல்

அரசியல் அறிவியல், டாக்டர் S.இராமநாதன், டாக்டர் K. செந்தில்குமார், நோசன் பிரஸ், பக். 140, விலை 175ரூ. இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் அரசியல் அறிவியல் (Political Science) துறையில் மட்டுமின்றி மற்ற சில துறைகளிலும் ஆராய்ச்சி பட்டங்களைப் பெற்றவர்கள். NET/SLET. IAS மற்றுமுள்ள போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை மனதில் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார்கள். அரசியல் என்பது வெறும் நிர்வாகத்துறையை மட்டுமின்றி, சட்டத்துறை, நீதித்துறை, அறிவியல், பொருளாதாரம், விவசாயம், தொழிற்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத்துறை… என்று அனைத்து துறைகளையும் ஒழுங்கப்படுத்தி செல்லும் ஆளுமை […]

Read more

கறுப்புக் குதிரை

கறுப்புக் குதிரை, நரேன் ராஜகோபாலன், நவி பதிப்பகம், விலை 150ரூ. 500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது. இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல், ‘துறுதுறு’வென இவைகளின் சாரம் மட்டுமே புரிகிறது. கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் […]

Read more

மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)

மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]

Read more

பனைமரம்

  பனைமரம், முனைவர் இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 758, விலை 800ரூ. தமிழர் வாழ்வியலில் பனைமரத்தின் பயன்பாடு என்பது, ஒரு பண்பாட்டும் பயில்வு நிலையாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அகமாயினும் புறமாயினும் மானுட வாழ்வின் பல்வேறு படிநிலையாக்கங்களிலும் பனைமரத்தின் செயல்பாடு நீடித்திருப்பதை எண்ணற்ற சான்றுகள் வாயிலாக எடுத்துக்காட்ட இயலும். குறிப்பாக தமிழர் அறிவும் பாரம்பரியத்தின் களஞ்சியமாகத் திகழும் பல்வேறு எழுத்தாக்கங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் காத்த பெருமை, பனைமரத்தின் ஓலைகளால் ஆன சுவடிகளையே சேரும். தமிழ்ச்சுவடி மரபே உலக நூலாக்கத்தின் […]

Read more

கை நழுவும் சொர்க்கம்

கை நழுவும் சொர்க்கம், எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம். தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை கவிதையாகவும், புதினமாகவும், சிறுகதையாகவும் வெளிப்படுகின்றன. ‘செல்வசுந்தரி’யும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். அதற்கு சாட்சி, அவரின் கைநழுவும் சொர்க்கம் சிறுகதைத் தொகுப்பு. புதினம் எழுதுவது எளிது; சிறுகதைகள் எழுதுவது தான், கடினம் என்றொரு கருத்து உண்டு. செல்வசுந்தரி, தன் சிறுகதை நூல் தொகுப்பின் வாயிலாக அந்த கடினமானப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ‘கை நழுவும் […]

Read more

அங்குசம்

அங்குசம், தவசிக்கருப்புசாமி, மணல்வீடு ஏர்வாடி, பக். 60, விலை 80ரூ. ‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 5/3/2017.   —- இலையுதிர்க் காலம், டாக்டர் எஸ்.ஆர். கிஷோர் குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 102, விலை 80ரூ. பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும் அவலநிலையை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 5/3/2017.

Read more

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள், வைரமூர்த்தி, சுபா பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. மாணவர்களுக்கு பொது அறிவு வளரும் விதத்தில் எழுதப்பட்டுள்ள 33 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உழவர் திருநாள், உலக தண்ணீர் தினம், சுதந்திரதின விழா போன்ற முக்கிய நாட்கள் பற்றிய செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. பூலித்தேவன், வேலு நாச்சியார், வேலுத்தம்பி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீரத்தை எடுத்துச் சொல்வது சிறப்பு. அன்னை தெரசா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, […]

Read more
1 … 418 419 420 421 422 … 841