விண்ணோடும் முகிலோடும்

விண்ணோடும் முகிலோடும், பானுமதி கண்ணன், இருவாட்சி, விலைரூ.150 இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தாலும், பிற பாத்திரங்களையும் கவனமாகப் படைத்துள்ளார். மலையாள வாடை கலந்த ஒரு மொழிநடையைப் பேச்சு மொழியில் பயன்படுத்தியுள்ளது கனம் சேர்த்துள்ளது. சென்னைத் தமிழ் – அதிலும் கோடம்பாக்கம் தமிழும் கொலுவிருக்கிறது. எப்போதோ நடந்த அரியலுார் ரயில் விபத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ரயில் விபத்தைக் காட்டி, தன் வரலாற்று அறிவுக்கு விளக்கம் தந்துள்ளார். சினிமாவில் இரண்டாம் நிலையில் நடிப்பவர்களும், […]

Read more

தர்மேந்திரா மக்கள் கலைஞன்

தர்மேந்திரா மக்கள் கலைஞன், அப்சல், இருவாட்சி, விலைரூ.200 ஹிந்தி நடிகர் தர்மேந்திரா பற்றிய நுால். அவருடன் பணியாற்றிய, நடிகர்கள், நடிகையர், இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள், பாடகர்கள் குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.தர்மேந்திரா நடித்த, 283 திரைப்படங்களின் பட்டியல், கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்,ஊதியம் வாங்காமல் நடித்தவை, விருது பெற்றவை, சிறந்த, 13 படங்கள், அதன் புகைப்படங்கள், இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. மேலும், எந்தெந்த தமிழ் படங்கள், ஹிந்தியில் ‘ரிமேக்’ செய்து, அதில் தர்மேந்திரா நடித்துள்ளார், இவருடன் நடித்த தமிழ் நடிகர்கள், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் விவரிக்கிறது. […]

Read more

பெண்ணுடல் பேராயுதம்

பெண்ணுடல் பேராயுதம், புதிய மாதவி, இருவாட்சி, பக். 120, விலை 100ரூ. பெண் என்னும் ஆதித்தாய் வழியே, இந்த சமூகம் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பதையும், அவள் ஏன் உலகின் முக்கியமான படைப்பாக்கப்பட்டு, பின் நிலவைப் போல, மறைந்து போகிறாள் என்பதை, ஒரு பெண்ணாக வெளிப்படுத்துகிறார் புதிய மாதவி. பெண்ணுடல் பேராயுதம், பெண்களுக்கு பிடிக்கும் ஆயுதம். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

கடந்து போகிறவர்களின் திசைகள்

கடந்து போகிறவர்களின் திசைகள், ஆசு, இருவாட்சி, பக். 160, விலை 100ரூ. வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வாழ்க்கையை உணர்ந்து, சமூக அக்கறையுடன் எழுதும் கதைகளில்தான் உயிர்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதற்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் தேவை. நூலாசிரியருக்கு அத்தகைய அனுபவங்கள் இருப்பதை இந்நூலில் உள்ள சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் உள்ள சிறுகதைகளில் மிகவும் இயல்பாக, உயிர்ப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனிதர்களை […]

Read more

அம்மாக்கள் வாழ்ந்த தெரு

அம்மாக்கள் வாழந்த தெரு, ஆசு, இருவாட்சி, சென்னை 11, பக். 120, விலை 70ரூ. கிராமத்தின் வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்களின் வேதனைகள், துயரங்கள் பல கதைகளில் வெளிப்படுகின்றன. மழையில்லாமல் எங்கெங்கும் தீய்ந்து போன நிலங்கள். கிராமத்து மனிதர்களுக்கு உணவுக்கும் வழியின்றிப் போகிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்குகள், தானே முளைத்து வளர்ந்திருக்கும் பண்ணை கீரைகள், சோற்றுக்கற்றாழை எனக் கிடைப்பதையெல்லாம் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்டு, உயிர் வாழ வேண்டிய நிலையை, ஒரு சிறுகதை துயரத்துடன் […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில்நாடன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்ற பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, அரிசியில் எத்தனை வகைகள், பழங்காலத்தில் நம்மிடம் வழக்கத்தில் […]

Read more

சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ 175. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டின் முன் பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரு நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை ‘தேவதாசியும் மகானும்’ என்ற தலைப்பில் வி. ஸ்ரீராம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை […]

Read more