குருவிவனம்

குருவிவனம், எம். கமலசேகர், ஊஞ்சல் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. இயந்திரத்தனமும் நகர மயமாக்களும் எப்படி மனிதனையும் மற்ற ஜீவராசிகளையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளன என்ற யதார்த்தத்தை பேசும் இவரது கவிதைகளுக்கு பாராட்டு நிச்சயம். பெண்கள் பற்றிய கவிதைகளில் அவரது சமூக பிரக்ஞை பலருக்கு உதாரணம். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க

ஏர் காக்க நீர் காக்க பார் காக்க, காவி. கண்ணன், பத்மா பதிப்பகம், பக். 120, விலை 125ரூ. ஒரு ஏர் உழவனின் சீரிய சிந்தனைகளின் பிரச்னைகள், விவசாயத்தில் இன்றைய நிலை பற்றி, ஆராய்ந்து இந்திய தேசத்தின் பாரம்பரிய முறையைக் காப்பாற்றி இந்தியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்த ஆலோசனை கூறும் நூல். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

சொன்னால் நம்பமாட்டீர்கள்

சொன்னால் நம்பமாட்டீர்கள், தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ. 1978-ல் குமுதம் போனஸ் வெளியீடாக சிறுசிறு புத்தகங்கள் வெளியிட்டது. அப்போது சின்ன அண்ணாமலை வாழ்வில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களை தொகுத்து குமுதத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜியை நேரில் சந்தித்தது, ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி தந்து கடிதம் எழுதியது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்றது, மக்களே சிறையை உடைத்து இவரை விடுதலை செய்தது, […]

Read more

அசோகமித்திரன் சிறுகதைகள்

அசோகமித்திரன் சிறுகதைகள், தொகுப்பு க. மோகனரங்கன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 1450ரூ. 274 சிறுகதைகள் கொண்ட அசோகமித்திரனின் ஒட்டு மொத்தத் தொகுப்பு இது. எல்லாவற்றையும் மொத்தமாகப் படிக்கும்போது, இலக்கியத்தில் அவர் எவ்வளவு தூரம் சமரசமின்றி செயல்பட்டு இருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது. சிறுகதை என்பது வெறும் மொழியோ, புனைவோ, வடிவநேர்த்தியோ, உத்திப்புதுமைகளோ மட்டுமன்று. அது அசோகமித்திரனின் எழுத்தில் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டுவது. அப்படிப் பார்த்தால் அவரின் கதைகளில் எப்போதும் மேலதிக ஆழமுண்டு. மிக எளிய மனிதர்களின் நாடித்துடிப்புகளை ஆகப்பெரும் அன்போடும், கண்ணீரோடும் தொட்டுத் தடவி […]

Read more

பழைய பேப்பர்

பழைய பேப்பர், கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விலை 225ரூ. தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், செய்திகள் சேகரிப்பதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிரூபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது. இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன். சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், […]

Read more

கண்டி வீரன்

கண்டி வீரன், ஷோபாசக்தி, கறுப்புப் பிரதிகள், விலை 160ரூ. ஈழத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஷோபாசக்தி. அவரின் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. மேம்போக்கான வாசிப்பு தவிர்த்து, ஆழ்ந்த கவனிப்பை வேண்டுபவை அவரின் கதைகள். அவரின் படைப்பு மொழி, ஆக்கம், கதையை இறுதிக்கு நகர்த்தும் விஷயம் எல்லாமே மிகுந்த அக்கறைக்கு ஆட்பட்டு நடந்தேறும். படித்து முடித்ததற்குப் பின்னாலும், நம் மனசை இறுக்கி, அசை போடத் தூண்டும் அவர் எழுத்து. இதில் இருக்கிற ‘சுண்டி வீரன்’ சிறுகதை, கண்டிப்பாக விவாதத்திற்கு உட்பட வேண்டியது. அகதி […]

Read more

செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூழ்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு […]

Read more

பார்த்தீனியம்

பார்த்தீனியம், தமிழ்நதி, நற்றிணை பதிப்பகம், விலை 450ரூ. தமிழீழத்தில் நடந்த இன அழித்தொழிப்பு பின்புலமாக உடன் நிற்க, ஈழ நினைவுகளை துல்லியமாகவும், நேர்த்தியுடனும் வாசகப் பரப்பில் முன் வைக்கிறது பார்த்தீனியம். வரலாறு போலவும், நடப்பு போலவும், நாம் எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டது மாதிரியும் ஏக வடிவங்களில் நாவல் விரிவது பேரழகு. தமிழ்நதியின் மொழி நடையில் அலங்காரங்கள் இல்லை. அவரின் கவிதைகளில் கூடி வருகிற காவியத்தன்மை கூட இதில் இல்லாதது கதை சொல்லலை எளிதாக்குகிறது. இயல்பில் நாம் சந்தித்தவர்களே பாத்திரங்களாக வருகிறார்கள். கற்பனைப் பாத்திரங்களின் நுழைவெல்லாம் […]

Read more

செர்னோபிலின் குரல்கள்

செர்னோபிலின் குரல்கள், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், எதிர் வெளியீடு, விலை 300ரூ. ‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன? வாழ்வா, சாவா? நல்லாசியா, சாபக்கேடா? நியும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வுசெய்!’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணு உலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன. ‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது. ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு […]

Read more

திரை

திரை, கன்னடமூலம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பைரப்பாவின் ஆவரணா (2007) என்ற நாவல் தமிழில் திரை என்ற தலைப்பில் விஜயபாரம் பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியில் […]

Read more
1 3 4 5 6 7 9