அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு, சேவியர், அருவி வெளியீடு, விலை 250ரூ. ‘ஏவுகணை மனிதர்’ ‘மக்கள் ஜனாதிபதி’ ‘மாணவர்களின் நண்பன்’ ‘அணு விஞ்ஞானி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். அப்துல்கலாமுடைய புகழுக்கும் பெருமைக்கும் அவரது எளிமையும், பணிவும் நேர்மையுமே காரணம். இந்தப் பண்புதான் அவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக மாற்றியது. இன்றைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் கலாமிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்று பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தாஒர் சேவியர் இந்த நூலை […]

Read more

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் (வாழ்வும் படைப்பும்), சேவியர், தோழமை வெளியீடு, பக். 184, விலை 150ரூ. பாலசந்தரைப் பல பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒரு பிலிம் மேக்கர் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டதை செய்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கே.பி.யே சொல்லி இருக்கிறார். பெண்களை மையப்படுத்திப் பல கதைகளைச் சொன்னவர். நடிகர்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே அவர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்தது இல்லை. அவர் தன், எழுத்தையே நம்பினார். அவர் இயக்கிய, ஏக் துஜே கேலியே இந்திப் […]

Read more

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ. மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் […]

Read more

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், விட்டல்ராவ், நிழல், 31/48, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, பக். 230, விலை 100ரூ. விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர். தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து தொகுத்திருக்கிறார். சிறு வயது முதலே படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். 1935-1950 வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து, பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார். நடிகர்களோடு நின்றுவிடாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும்கூட பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும்போதே திரையரங்கிலேயே […]

Read more

மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி

மாற்றங்களின் நாயகன் ராகுல்காந்தி, சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-9.html பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல் காந்திதான் பிரதமர் என்று பொதுவாக பேச்சு அடிபடுகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக விறுவிறுப்பான நாவல்போல் எழுதியுள்ளார் சேவியர். இந்திய மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்று அவர் சபதம் செய்த நிகழ்ச்சி வெளிநாட்டுப் […]

Read more

குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் […]

Read more

சுவரில்லாமல் சித்திரம் வரையலாம்

சுவரில்லாமல் சித்திரம் வரையலாம், சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக். 320, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-511-6.html கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல, பரிசுகளும் பெற்றுள்ளன. இந்த நூலும்கூட இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. தினத்தந்தி இளைஞர் மலரில் இந்நூலாசிரியர் எழுதி தொடராக வெளியான 60 கட்டுரைகள், […]

Read more

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி […]

Read more