விடை தேடும் வினாக்கள்

விடை தேடும் வினாக்கள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், விலை 160ரூ. அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள், ஆன்மிகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து கருத்துகளையும், ஆன்மிகப் பெரியோர்கள், பல அறிஞர்கள் ஆகியோரின் மேற்கோள்களுடன் தந்து இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான சிறுகதைகள் மூலமும் […]

Read more

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும்

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 330ரூ. பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பான பேசுபொருளாக ஆகி இருக்கும் நிலையில், அந்தப் பிரச்சினையை சமநிலையில் இருந்து நோக்கும் வகையிலான தகவல் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. அய்யப்பனின் விரிவான வரலாறு, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரதம், கோவிலில் விரைவான தரிசனத்திற்கும் தங்கும் வசதிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வத எப்படி என்ற தகவல், கோவிலுக்குச் செல்வதற்கான வழிகள், […]

Read more

கண்டேன் கனடா

கண்டேன் கனடா, அ.கோவிந்தராஜு, வானதி பதிப்பகம், விலை 125ரூ. கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவா நகரில் 6 மாத காலம் தங்கி இருந்த ஆசிரியர், அங்கே ஒவ்வொரு இடத்திற்கும் தான் சென்ற போது பார்த்த வியப்பான காட்சிகள், வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை சுவாரசியமாக நகைச்சுவை கலந்து ஆவணப்படுத்தி இருக்கிறார். கனடாவில் தான் பார்த்த ஆச்சரியங்கள் நமது நாட்டிலும் ஏற்படாதா என்ற ஏக்கத்தையும் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

சோத்துக் கட்சி

சோத்துக் கட்சி, கஸ்தூரி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஏப்ரல் வரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் போது, நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது தனி புத்தகமாக வந்து இருக்கிறது. நித்தியானந்தா, அரசியலில் ரஜினி, கமல், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் நடிகை கஸ்தூரி அலசி ஆராய்ந்த அவற்றுக்குப் பொருத்தமான கதைகளுடன் சொல்லி இருப்பதால் காலம் கடந்த பின்னரும் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் […]

Read more

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, இராம்பொன்னு, சர்வோதய இலக்கிய பபண்ணை, விலை 200ரூ. சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை சுய சரிதையாக தானே கூறி இருந்தாலும், அதில் இல்லாத தகவலான பகத் சிங்கை காப்பாற்ற காந்தியடிகள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் சான்றாதாரங்கள் போன்றவற்றைத் தருவதன் மூலம் இந்த நூல் வித்தியாசமாக உள்ளது. தீண்டாமை ஒழிப்பு, சமயநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி காந்தியடிகள் ஆற்றிய அரும்பணிகளை அழகாகவும் சரளமாகவும் தந்து இருப்பதால் அவற்றை இளைஞர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு […]

Read more

பாவை விளக்கு

பாவை விளக்கு, அகிலன், தாகம் வெளியீடு, விலை 400ரூ. புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலன் படைத்தவற்றில் தனிச்சிறப்பு பெற்ற நாவல், பாவை விளக்கு. எழுத்தாளர் தணிகாசலம், அவர் சந்தித்த செங்கமலம், உணர்ச்சிப் பிழம்பாக அமைந்த உமா, தணிகாசலத்தின் மனைவி கவுரி, உமாவின் தந்தை சந்திரசேகரன் போன்ற கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்தைக் கொண்டு விறுவிறுப்பாக பின்னப்பட்ட இந்த நாவல், யதார்த்தமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதால், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தணிகாசலத்துக்கும் உமாக்கும் இடையே நடைபெறும் மனதளவிலான போராட்டம் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. முழு நீள […]

Read more

காசி கதைகள்

காசி கதைகள், மயிலம் அய்யப்பன், காவ்யா, விலை160ரூ. நூலின் பெயர் காசி கதைகள் என்றாலும், இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் காசு, துட்டு, பணம் தொடர்பான சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மயிலம் வட்டாரத்து மக்களின் அன்றாட வாழ்வீயல், அவர்களது குடும்பம், வழிபடும் தெய்வம் என்று பல அம்சங்களை இந்தக் கதைகள் தாங்கி இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. நீரோட்டம் போன்று அமைந்துள்ள நடை, இந்த நூலுக்கு வலுவூட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028021.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு.பாலசந்திர முதலியார், செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கம்பரசம் என்ற பெயரில் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தை மறுக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அண்ணா எழுதிய 9 பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் தக்க காரணங்களுடன் மறுப்பதோடு, கம்பரின் கவிரசம், கவித்துவம், கம்பசிருஷ்டி, கம்ப சூத்திரம் ஆகியவற்றையும் இந்த நூல் ஆய்வு நோக்கத்துடன் தந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028036.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்த நூலில் இடம் பெற்றுள்ள 17 சிறுகதைகளும், உணர்ச்சிப் பிரவாகமாக ஜொலிக்கின்றன. ஆசிரியரின் வித்தியாசமான மொழி நடை உயிர்ப்புடன் கூடி, அத்தனைக் கதைகளுக்கும் கூடுதல் சுவாரசியத்தைக் கொடுக்கின்றன. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை காட்சிப்படுத்தி இருக்கும் ஆற்றலால் நம்மை பிரமிக்க வைத்துவிடுகிறார். நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வேர்களுக்கு வெளிச்சம்

வேர்களுக்கு வெளிச்சம், சென்னை மாநாகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, தொகுப்பு ஆர்.பி.சங்கரன், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்.அகடாமி, விலை 25ரூ(மலிவு விலை பதிப்பு) பன்முகத்திறன் கொண்ட எம்.ஜி.ஆரை இன்றைக்கும் தெய்வமாகப் போற்றி வரும் பல லட்சக்கணக்கான உள்ளங்கள் உலகம் முழுவதும் வசித்து வருகின்றனர். தொடக்க காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆரின் வெற்றிக்காக உடல், பொருள், ஆவியை தியாகம் செய்தவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மனித நேய அறக்கட்டளை செய்திருக்கும் முதல் கட்டப்பதிவுதான் இந்த நூல். எம்.ஜி.ஆரின் புகழை பரப்பி வந்த ஏடுகள் மற்றும் […]

Read more
1 27 28 29 30 31 223