தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள், இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழில் எஸ்.டி.ஜெயபாண்டியன், மீள்பார்வை பக்தவத்சல பாரதி, வெளியீடு அடையாளம், விலை 480ரூ. நாடார்கள் அரச பரம்பரை சேர்ந்தவர்கள் என்று ஆங்காங்கே கூறப்பட்டு இருந்தாலும் இந்த ஆராய்ச்சி புத்தகத்தின் நோக்கம் அது அல்ல. தனது ஆராய்ச்சி பட்டத்துக்காக நாடார் சமுதாயத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆசிரியர் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நாடார்கள் பற்றிய ஆய்வை தொடங்கி இச்சமூகத்தின் முன்னேறத்தை அழகாக தொகுத்து வழங்கி உள்ளார். நாடார்ஸ் ஆப் தமிழ்நாடு த பொலிடிகல் கல்ச்சர் ஆப் எ கம்யூனிடி […]

Read more

குறள் இனிது கதை இனிது

குறள் இனிது கதை இனிது, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 200ரூ. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 108 குறள்களைத் தேர்ந்தெடுத்த அவற்றின் பொருளை விளக்கும் வண்ணம் ஒரு பக்க கதைகளாக எழுதி இருக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆசிரியர். புராண இதிகாசம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையிலான பல நிகழ்வுகளைப் படம்பிடித்து அவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டு கதைகளை பின்னி இருப்பது படிக்க சுவாரசியமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய சே.சாதிக், தனது விரிவான வரலாற்றை ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். தற்போது மூன்றாம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், அவர் மேல் படிப்புக்காக சென்னையில் இருந்து கனடா நாட்டுக்கு சென்றது முதல் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. கனடாவில் அவரது வாழ்க்கை, அவ்வப்போது விமான நிலையங்களில் சந்தித்த அனுபவங்கள், சென்னை வந்து பதவி ஏற்றது. பல தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற […]

Read more

ஜீனியஸ்

ஜீனியஸ், பி.வி.பட்டாபிராம், யுனீக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 175ரூ. தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் நூல் வரிசையில் இந்தப் புத்தகம் சிறப்பிடம் பெறுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது பல விதமான பயிற்சி விளக்கங்களாகவும், சிலரது வாழ்வில் நடைபெற்ற அனுபவங்கள் பற்றிய தகவல்களாகவும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிச் செய்திகளில் நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை, இயக்குனர் வ.கவுதமன், பன்மை வெளியீடு, விலை 250ரூ. தமிழ் தேசியத்துக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளை சந்தித்து உண்மை தொண்டராக இருந்தவர் வடமலை. தலைவணங்காத் தமிழ்தேசியப் போராளியாக இருந்த, அவருடைய வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் பற்றி சான்றோர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைவரும் இதனை வாங்கி படிப்பதன் மூலம் வடமலை தமிழ்த்தேசியத்துக்காக ஆற்றிய பணிகளை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். அதனை நாமும் பின்பற்ற உதவிகரமாக இருக்கும். நன்றி: […]

Read more

சீரடி அனுபவங்கள்

சீரடி அனுபவங்கள், தமிழாக்கம் நீலம் மதுமயன், பாபாஜி பதிப்பகம், விலை 90ரூ. சீரடி சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவரான ஜி.எஸ்.கபர்டே என்பவர் 1910 டிசம்பர் முதல் 1912 மார்ச் வரை சீரடியில் சாய்பாபாவை நேரடியாக சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். அந்த நாட்குறிப்புகள் இப்போது புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. சாய்பாபா பற்றிய புதிய செய்திகளையும் அவர் கூறிய கதைகளையும், பாபாவின் அபூர்வ படங்களையும் இது தாங்கி இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

யாதுமாகி நின்றாள்

யாதுமாகி நின்றாள், சுப்ர.பாலன், கங்கை புத்தக நிலையம், விலை 150ரூ. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் குடி கொண்டு இருக்கும் ஆன்மிகத் தலங்களுக்கு ஆசிரியர் சென்று வந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் உள்பட பல கோவில்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027763.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

நானும் என் தமிழ் எழுத்தும்

நானும் என் தமிழ் எழுத்தும், ஆசிரியர் தீபம் எஸ். திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 130ரூ. தமிழறிஞர்கள், இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள், கவிஞர்கள் போன்றவர்கள் தங்கள் எழுத்து அனுபவங்களை, தீபம் இலக்கிய மாத இதழில் பதிவு செய்துள்ளனர். அந்த கருத்துக்களின் 10-வது தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. வில்லிசை கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள், மகன் மற்றும் எழுத்தாளர்களான தமிழ் ஞான குரு, கவுதம நீலாம்பரன், கீரனூர் ராமமூர்த்தி உள்பட 26 பிரபலங்களின் எழுத்து அனுபவங்கள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, […]

Read more

என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும்

என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப. சங்கர், பாவை பிரிண்ட்ர்ஸ், விலை 460ரூ. தெய்வ பக்தியுடன், ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, ஒழுக்கத்தோடும் நற்குணங்களோடும் வளர்ந்து பல பெரியோர்களின் ஆசியாலும், ஆதரவாலும் கல்வி பயின்று, அரசின் மிக உயர்ந்த பதவிகளில் நேர்மையும், மனிதநேயமும் சிறக்கப் பணியாற்றி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சங்கரன். இவருடைய வாழ்க்கை வரலாறே இந்த நூல். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைய […]

Read more

காவிரியின் செல்வன்

காவிரியின் செல்வன், தேசிக மணிவண்ணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில், தேசிக மணிவண்ணன் படைத்துள்ள காவிரியின் செல்வன் என்ற சரித்திர நாவலின் கதாநாயகன், சோழ மன்னர்களில் ஒருவரான கோச் செங்கட்சோழன் ஆவார். கி.பி. 101 முதல் கி.பி. 200 வரை நடைபெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவலில், அப்போது வாழ்ந்த மன்னர் பரம்பரையுடன் சில கற்பனை கதாபாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நாவல் முழுவதும் காதல், வீரம், போர் என்று சரித்திர நாவலுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் […]

Read more
1 28 29 30 31 32 223