அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. ஆன்மிகம், கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை என்பது போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் வெளியான நூல்களில் முப்பது நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தராதரத்தைப் பார்த்து மெச்சுவது போல, ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரை வழங்கி அவற்றையே தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கும் முயற்சி புதுமையானதும் பாராட்டத்தக்கதும் ஆகும். ஒவ்வொரு நூலிலும் உள்ள சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவை தொடர்பான மேற்கோள்களைப் பிற நூல்களில் இருந்தும் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்தும் தேடிப்பிடித்து அவற்றைப் பொருத்தமாக வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர்.சினீவாசன் வெளியீடு, விலை 200ரூ. ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்துகொண்டே, சின்னத்திரை, வெள்ளித்திரை, நாடக மேடை ஆகியவற்றில் நடிகராக இருந்து பிரபலமான ஏ.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.சீனிவாசன், கலைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர்கள் பற்றியும், அவர்களுடன் பழகிய 50 ஆண்டுகால அனுபவங்களையும் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற பலருடன் கொண்டு இருந்த நட்பின்போது நடைபெற்ற ருசிகரமான நிகழ்வுகளை அவர் வெளியிட்டு இருக்கும் விதமும், கலைத்துறையில் சிலர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை அவர் தந்து […]

Read more

என்றும் எம்.ஜி.ஆர்.

என்றும் எம்.ஜி.ஆர்., புவனகிரி செயபாலன், விஜய் பதிப்பகம், விலை 200ரூ. மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை பற்றியும் அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பல நூல்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றில் இல்லாத பல புதிய செய்திகளை இந்த நூல் தருகிறது. எம்.ஜி.ஆருடன் பேசிப் பழகி, அவரது உணர்வுகளோடு ஒன்றி, அவரது வழி நடக்கும் 15 பேர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம், எம்.ஜி.ஆர். தொடர்பான வியப்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிகச் சாதாரண நிலையில் இருந்த மு.கற்பகவிநாயகம், […]

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் பெண்களின் பாதுகாப்பு, சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்படும் குற்றங்கள், வரதட்சணைக் கொடுமை, சிசுக் கொலை, பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டும் அல்லாமல் சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

வாடாமல்லி

வாடாமல்லி, சு.சமுத்திரம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 280ரூ. அமரர் ஆதித்தனாரின் இலக்கிய விருது பெற்ற இந்த நாவலின் கரு, மற்ற எழுத்தாளர்கள் கையாளத் தயங்கும் அரவாணிகள் பற்றியது ஆகும். அரவாணிகள் பலரை நேரில் சந்தித்து, அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்த ஆசிரியர், அவற்றின் மூலம் அரவாணிகள் தொடர்பான அத்தனை அம்சங்களையும் இந்த நூலில் தந்து இருக்கிறார். ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறிய சுயம்புவின் மன உளைச்சல்கள், சமுதாயத்தில் அவர் எதிர்கொண்ட அடி, உதைகள், அவமானங்கள் எல்லாம், வேதனை தோய்ந்த வார்த்தைகளில், கண்களில் கண்ணீர் […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, விலை 450ரூ. கவிதை உலகில் தனியிடம் பெற்றவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் சிற்பி படைத்த கவிதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த சிற்பிபின் படைப்புக்கலை, சிற்பி மரபும் புதுமையும் ஆகிய இரண்டு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக இது வெளியிடப்பட்டு இருக்கிறது. மண் சார்ந்த கற்பனைகளுடனும், மக்கள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சிற்பி எழுதிய கவிதைகளை திறனாய்வு செய்து பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரத்துடன் மிளிர்கின்றன. […]

Read more

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 300ரூ. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1984 செப்டம்பர் 15 -ந் தேதி, விழா ஒன்றில் திடீர் என்று மயங்கி விழுந்த போது தான் அவருக்கு எத்தகைய உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது என்ற தகவலை டாக்டர் எச்.வி.ஹண்டே இந்தப் புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார். அது முதற்கொண்டு எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை அவருக்கு என்னென்ன கோளாறுகளுக்கு என்னென்ன சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? […]

Read more

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும்

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 180ரூ. துர்க்கையின் அவதாரம், துர்க்கையின் வடிவங்கள், துர்க்கா பூஜை மற்றும் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள் ஆகியவை எளிய முறையில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. ராகு காலம் என்றால் என்ன? வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராகு காலம் எப்போது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளும் வழி என்ன? ராகு கால பூஜை செய்வது எப்படி என்பவையும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், […]

Read more

ரபியுல் அவ்வல் வசந்தம்

ரபியுல் அவ்வல் வசந்தம், ஹிஜ்ரா பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. உலகத்திற்கு இறைவனால் அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் பிறந்த மாதம் ரபியுல் அவ்வல். அவர்கள் பிறந்ததால் வசந்தம் வந்தது என்ற அடிப்படையில் இந்த நூலில், நபிகளாரின் புகழை கவிஞரும், எழுத்தாளருமான அபுஹாஷிமா அழகுற பாடியுள்ளார். மா நிலமெங்கும் மாநபியின் வாசம் மண்ணுக்கோ புத்தம் புது சுவாசம், நாயகமே நீங்கள் குர்ஆனின் விளக்கம், உங்கள் வாக்கும் வாழவும் அதனை விளக்கும் என்பன போன்ற நெஞ்சை அள்ளும் வரிகள். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 26 27 28 29 30 223