10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?

10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?, வடகரை செல்வராஜ் ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பிறகு என்ன வேலை வாய்ப்பைப் பெறலாம்? அல்லது அதற்கும் மேற்கொண்டு என்ன பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தால் எந்த விதமானவேலை வாய்ப்பைப் பெற முடியும்? என்பதற்கு முழுமையான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருககிறது. கல்வி முறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், தொடர்ந்து எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்பதை முடிவு […]

Read more

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில்பாடலெனும் படகோட்டி, பொன் செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. தமிழ்த் திரைப்பட உலகில் பாடலாசிரியராக இருந்து கோலோச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் வாலி, கன்னட நடிகரும் இயக்குனருமான டி.கெம்பராஜ் அர்ஸ் மூலமாக திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனவர் என்ற தகவல் உள்பட, கவிஞர் வாலி தொடர்பான பல ருசிகர செய்திகளை இந்த நூல் தருகிறது. கவிஞர் வாலி, 1959ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் 297 படங்களுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதினார் என்று கூறி அந்தப் பாடல்கள் அனைத்தையும் […]

Read more

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. அசாதாரணமான விஷயங்களை மனதின் உள்ளுணர்வு மூலம் தெரிந்துகொள்ளும் ஆற்றலான ஈ.எஸ்.பி. எனப்படுவது எல்லோரிடமும் சிறிதளவாவது இருக்கும் என்று கூறும் இந்த நூல், அந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதற்கான சோதனைகளையும் விவரிக்கிறது. அமானுஷ்யமான இந்த விஷயம் தொடர்பாக பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதோடு, அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமது ஆழ்மனதின் […]

Read more

அம்பேத்கர் பிள்ளைத் தமிழ்

அம்பேத்கர் பிள்ளைத் தமிழ், வித்துவான் வீ.சேதுராமலிங்கம், உரை ஆசிரியர் ரா.சரவணன், டுடே கிராபிக்ஸ் வெளியீடு, விலை 250ரூ. சமூக நீதி சிந்தனையாளர் டாக்டர் அம்பேர்கர் மீது பாடப்பட்ட, தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக இந்த நூல் திகழ்கிறது. அம்பேத்கர் தொடர்பான பல வரலாற்று தகவல்களை, இலக்கியச் சுவையுடன் பாடல்களாகத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூல் மூலம் ஆசிரியரின் இலக்கிய புலமை முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. வளரும் தலைமுறையினர், அம்பேத்கர் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இலக்கியச் சுவையுடன் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி. […]

Read more

அய்யாவின் அடிச்சுவட்டில்

அய்யாவின் அடிச்சுவட்டில்,கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. தந்தை பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு 75 ஆண்டுகளாக தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் குறித்து ஏற்கனவே எழுதிய 224 கட்டுரைகள், 5 பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில், மேலும் 41 கட்டுரைகளுடன் இந்த ஆறாவது தொகுதி வெளியாகி உள்ளது. ஆங்கில நாளேட்டை தமிழர் தொடங்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியது, தஞ்சையில் வரலாற்றுச் சாதனையாக மகளிர் பாலிடெக்னிக் […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பதிப்பாசிரியர் அனந்த் பய், விளக்கம் திலிப் கதம், வெளியீடு அமர் சித்ர கதா, மூன்று தொகுதிகளும் சேர்த்து 2199ரூ. அமர் சித்ர கதை என்ற தலைப்பில் வெளியாகும் அனைத்து சித்திரக் கதைகளும், சிறுவர்களையும் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்பது, மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாபாரதப் புத்தகத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. வியாசர் அருளிய மகாபாரதக் கதை எவ்வாறு, எந்த சமயத்தில் சொல்லப்பட்டது என்பது முதல் தொடங்கி இந்த இதிகாசத்தின் இறுதிப் பாகம் வரை உள்ள அனைத்து முக்கிய சம்பவங்களும் அழகாகத் […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம். மகாகவி பாரதியார் பற்றி நீண்ட கட்டுரையாக எழுதுவதைவிட பாரதியார் பற்றி 100 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக பாரதியாரின் புகழைப்பாடி இருக்கும் இந்த நூல், நல்ல தகவல்களைத் தந்து இருப்பதுடன் படிக்க சுவையாக உள்ளது. பலவிமான பாடல்களைப் பாடிய பாரதியார், தாலாட்டுப் பாடல் மட்டும் பாடாதது ஏன்? பாரதியார பாடலைக் கேட்டபடி உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர் யார்? சக்திதாசன் என்ற புனைபெயரை பாரதியார் வைத்துக்கொண்டது ஏனு- […]

Read more

சித்த நூல் ரகசியங்கள்

சித்த நூல் ரகசியங்கள், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், விலை 140ரூ. சித்த நூல் ரகசியங்கள் ரிஷிவர்ஷா என்ற தேசம் தான் இப்போது ரஷியா என்று அழைக்கப்படுகிறது என்று கூறும் ஆசிரியர். இதே போல பல எடுத்துக்காட்டுகளைக் கூறி, பழங்காலத்தில் உலகம் முழுவதும் பாரத கண்டத்தோடு தான் இருந்தது என்பதையும் விளக்குகிறார். வானூர்தி, கப்பல் சாஸ்திரம் ஆகியவற்றை அந்தக் கால சித்தர்கள் அறிந்து இருந்தார்கள் என்றும் மாந்திரீக மற்றும் அட்டமா சித்திகளில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறும் ஆசிரியர், தனது கருத்து நம்ப முடியாததாகவும் […]

Read more

வெற்றி உங்களுடையதே

வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 250ரூ. அனைத்துத் திறமையும் கொண்ட இளைஞர்களை கடுமையான கட்டுப்பாடில் வைத்து இருக்காமல், வாழ்க்கையின் மீத புரிதல், தைரியம், உலகை உற்சாகமாக எதிர்கொள்ளும் சக்தி ஆகியவற்றை வழங்குவதன் மலம் அவர்களை வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு சுலபமாக அழைத்துச் செல்ல முடியும் என்பதை இந்த நூல் விளக்குகிறது. சுய பரிசோதனையாக பல கேள்விகளை அமைத்து அவற்றுக்கு தகுந்த விடை தந்து இருப்பது நல்ல வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பருவ வயதில் வரும் கேள்விகளுக்கான அறிவியல் ரீதியான பதில்கள், திக்கிப் […]

Read more

மலை உச்சியில் மறுபிறப்பு

மலை உச்சியில் மறுபிறப்பு, அருனிமா சின்ஹா, தமிழில் ஆண்டாள் பிரியதர்ஷினி, விலை 140ரூ. ரெயில் பயணத்தின் போது, சங்கிலி திருடர்களுடன் போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இடது காலை இழந்த அருனிமா சின்ஹா என்ற வீராங்கனை, சிகிச்சைக்குப் பிறகு ஊனமுற்ற காலுக்கு செயற்கை கால் பொருத்தி புது வாழ்வு பெற்றதோடு, அந்தக் காலுடன் இமயமலை சிகரம் ஏறி அதன் உச்சம் தொட்ட உண்மையான சாதனை வரலாறு. அவரது வார்த்தைகளால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் இந்த […]

Read more
1 25 26 27 28 29 223