மாத்தி யோசி கவிதைகள்

மாத்தி யோசி கவிதைகள், மில்டன், விலை 89ரூ இளம் கவிஞர் மில்டன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கிறார் காந்தி. இன்றோ அந்தக் கிராமங்களில் தான் வாழ எவருமில்லை, உன் தலைமுறையை மருத்துவனாக்கு பொறியாளனாக்கு அதற்கு முன் சாதி வெறி இல்லா மனிதனாக்கு பிறருக்கு உதவும் மனிதநேயனாக்கு என்பன போன்ற நெஞ்சை அள்ளும் கவிதைகள். மறுக்கப்பட்ட வாழ்வை அளித்தவன் நீ மறைக்கப்பட்ட வரலாற்றை உரைத்தவன் நீ வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்புச் சட்டை நீ எந்த வேள்வியையும் சட்டை செய்யாத நெருப்புச் […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், விலை 140ரூ. மகாகவி பாரதியாரை அருந்தவப்பன்றி என்ற அடைமொழியுடன் அழைக்கும் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, சிலருக்கு வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சொல், தன்னைப் பற்றி பாரதியாரே கூறிய சொல் என்பதை இந்த நூல் மூலம் அறியும் போது வியப்பாக இருக்கிறது. பாரதியார் சில காலம் கவிதைகள் ஏதும் எழுதாமல் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடன் இருந்த கவிதை தேவி அவரை விட்டுப் பிரிந்ததாகவும், சில ஆண்டுகள் கழித்து கவிதை தேவி தன்னை அடைந்த […]

Read more

எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை

எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை, வெ.ராம்குமார், வைகை பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரில் பலர், ஆர்வம் காரணமாக எழுத்தாளர்களாகவும் பரிணமிக்கிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர்களை அறிமுகப்படுத்துவது போல அவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டித் தந்து இருக்கிறார் ஆசிரியர். வளரும் நிலையில் உள்ள எழுத்தாளர்களையும் எழுத்துலகுக்கு வரத்துடிப்பவர்களையும் ஊக்கப்படுத்தும் வண்ணம் இந்த நூல் அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தெய்வத்தின் குரலமுதம்

தெய்வத்தின் குரலமுதம், ஆர். பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. கண்கண்ட தெய்வமாக இருந்து ஏராளமான ஆன்மிக சாதனைகளைச் செய்தவர் என்று காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளை பக்தர்கள் போற்றிப் பாராட்டுவது மிகச் சரியான கருத்து என்பதை, இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரிச்சினைகள் பற்றி காஞ்சிப் பெரியவர் வழங்கிய அமுத மொழிகளை அவரது சரளமான பேச்சு நடையிலேயே தொகுத்துத் தந்து இருப்பதால், அவரே நம் முன் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. மோர் […]

Read more

சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், தமிழில் கவுரி கிருபானந்தன், சாகித்திய அகாடமி வெளியீடு, விலை 195ரூ. சா.சோ.எனப்படும் சாகண்டி சோமயாஜுலு என்ற தெலுங்கு எழுத்தாளர், அன்றாட வாழ்க்கையின் பொருளாதார பிரச்சனைகளை நன்றாக உள்வாங்கி அவற்றை சிறுகதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார். எதற்கும் சமாதானம் செய்துகொண்டு போனால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதையும், மாற்றத்திற்கு ஏற்ப மனித எண்ணங்களும் சீர்பட வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் வலியுறுத்துகின்றன. தேர்ந்தெடுத்து தரப்பட்ட 22 கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றாலும், அனைத்திலும் சமுதாய உணர்ச்சிகள் வெளிப்பட்டு […]

Read more

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?

ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?, மு.ஜோதி சுந்தரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 160ரூ. ஆங்கில இலக்கணப்பாடம் என்றால் காததூரம் ஓடும் மாணவ மாணவிகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கிராமப் புறங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கில இலக்கணத்தை மிக எளிதாகப் புரிந்து கொண்டு படிப்பதன் மூலம் ஆங்கில இலக்கணத்தில் நிபுணத்துவம் பெற முடியும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. சின்னஞ் சிறிய வாசகங்கள் மூலம் இலக்கணத்தை கற்றுத் தருவதோடு முக்கியமான பல வார்த்தைகளின் வினைச் சொற்களுக்கு தமிழில் […]

Read more

இறையன்பு கருவூலம்

இறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ. மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. ‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் […]

Read more

ஒரு பொறியாளரின் எண்ண அலைகள்

ஒரு பொறியாளரின் எண்ண அலைகள், ஏ.பி.எஸ்.ராஜ், சீதா அறக்கட்டளை, விலை 50ரூ. ஒரு பொறியாளரின் எண்ண அலைகள் என்ற கவிதை நூலை எழுதிய ஆசிரியர் ஒரு பொறியாளர். இவர் தனது எண்ணோட்டங்களை தொகுத்து அளித்துள்ளார். இவ்வுலகில் வாழ்க்கை சிறப்பாக அமைய ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவை, தள்ள வேண்டியவை எவை என்பதும், ஒருவரின் வாழ்வில் மனம்,காலம், செயல் இம்மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டு உள்ளது. சமூக சிந்தனைகளை தாங்கியிருக்கும் இந்த நூல் நல்வாழ்க்கையை கடைப்பிடிக்க நல்ல வழிகாட்டியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி. […]

Read more

ஜோதிட சாஸ்திர குறிப்புகள்

ஜோதிட சாஸ்திர குறிப்புகள், செய்யனூர், ஆர்.சுப்பிரமணியன், காளீஸ்வரி பதிப்பகம், விலை 100ரூ. ஜோதிடம் சம்பந்தமான நூல்களில் பெரும்பாலும், சாதாரண மக்களுக்குப் புரியாத பல வார்த்தைகள் இருக்கும் என்ற கோட்பாட்டை மாற்றி, ஜோதிடத்தை மிக எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த நூல் எடுத்துக்காட்டாக உள்ளது. அன்றாடம் நாம் கடைபிடிக்க வேண்டிய பல செயல்பாடுகளுக்கு பின்னணியில் உள்ள ஜோதிட சாஸ்திரங்களைக் கொடுத்து இருப்பது, அனைவருக்கும் பயன் அடையும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், மனோஸ், ஹலோ பப்ளிகேஷ்ன்ஸ், விலை 500ரூ. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியமான சிலப்பதிகாரம் முழுவதும் அப்படியே தரப்பட்டு அத்துடன் அவற்றுக்கு எளிய உரையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஏன் நேரடியாக எழுதவில்லை? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச் சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச்சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தில் உள்ள நிகழ்வுகள் கற்பனையா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஆசிரியர் தந்துள்ள விளக்கங்கள் ஆய்வுக்கு உரியவையாக விளங்குகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more
1 24 25 26 27 28 223