அள்ள அள்ள புதையல்

அள்ள அள்ள புதையல், ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை110ரூ. ஏராளமான பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பது நூற்றுக்கணக்கான துணுக்குச் செய்திகளாக இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதும், செல்வம் பெருக, வழக்குகளில் வெற்றிபெற, கொடுத்த கடனை திரும்பப் பெற என்ன செய்யவேண்டும் என்பதும், பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்தும் இந்த நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி 3/7/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

பாதை எங்கும் பாடங்கள்

பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. தினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். “கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும். “எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு […]

Read more

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. விலங்குகள் பற்றி பலரும் பொதுவில் அறிந்திராத வியக்கத்தக்க தகவல்களின் துணுக்குத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. ஒட்டகங்கள் மாலை 6 மணிக்கு மேல் எதையும் சாப்பிடாது. வாழ்நாள் முழுவதும் நீரை அருந்தாத மிருகம் கங்காரு எலி. சிங்கத்தின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்கும் என்பது போன்ற ஏராளமான தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. விலங்குகளின் சங்க காலப் பெயர்கள் விவரமும் தரப்பட்டுள்ளன. இடையிடையே காணப்படும் விலங்குகள் தொடர்பான நகைச்சுவை துணுக்குகள் […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. உயர்கல்வித் துறையில் ஏற்படும் சவால்களை இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது. கனவு, திறமை, பண்பு ஆகியவை சமமாக அமையப்பெற்றால் அதுவே வெற்றியின் அடையாளம் என்பதை ஆசிரியர் தெளிவுபடக்கூறி இருக்கிறார். இளைய சமுதாயத்துக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 10/4/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027747.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சைவத் தமிழ்

சைவத் தமிழ், தொகுப்பு பேராசிரியர் சண்முகசுந்தரம், காவ்யா, விலை 900ரூ. சைவ சித்தாந்தத்தின் சிறப்பு, அதன் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்த தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளை எழுதிய நான்கு நூல்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. தமிழ்ச் செல்வம், சைவ இலக்கிய வரலாறு, அவ்வைத் தமிழ், தமிழ்த் தாமரை ஆகிய தலைப்புகளில் அவ்வை துரைசாமிப் பிள்ளை ஆகிய நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் சைவத் தமிழ்த் தொண்டாற்றிய பல பெருமகனார்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்த நூல் தாங்கி […]

Read more

இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும்

இருதய நோய்களும் இன்றைய மருத்துவமும், த.கோ.சாந்திநாதன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 180ரூ. இருதயம் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் தாங்கி இருக்கும் இந்த நூலின் சிறப்பு, அவை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதுதான். இதயத்தின் அமைப்பு, அது எவ்வாறு இயங்குகிறது, இதய நோய்களுக்கான புற அடையாளங்கள் என்ன, இதய நோய்களின் தன்மை, அவற்றை கண்டறிவதற்கான பொதுவான பரிசோதனைகள் எவை, இதய நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்கள், விளக்கப்படங்களுடன் தரப்பட்டு இருப்பதால் அனைவரும் புரிந்து […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய், இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 180ரூ. ஐ.பி.எஸ். அதிகாரியான இரா.திருநாவுக்கரசு, சுய முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளைக் கொண்ட 31 கட்டுரைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல அமைத்து இருப்பதால் அவை, சுவையான சிறுகதைகளைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி? வாழ்க்கையை எவ்வாறு சந்திப்பது? போன்ற பல வினாக்களுக்கு இந்த நூலில் விடைகள் தரப்பட்டுள்ளன. எளிமையான வாசகங்கள், யதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு இருப்பதால், இந்தக் கட்டுரைகளை எளிதாக […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கமலக்கண்ணன் கோகிலன், மணிமேகலைப்பிரசுரம், விலை 250ரூ. இந்த நாவல், நல்கிராமம் என்று தலைப்பிடப்பட்டு இருந்தாலும் தற்போதைய நகரங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றி அதிகமாக பேசும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பொழுதுபோக்காக வெறும் கதையை மட்டும் சொல்லிப்போகாமல், தற்கால நாகரிக உலகில் பாதிக்கப்பட்ட சமூக நலன்கள், மதுவிலக்கு போன்றவை பற்றிய ஆதங்கமான கருத்துகள் கதை நெடுகிலும் வற்புறுத்தப்பட்டு இருக்கிறது. படிக்காத அந்தக் காலத்து பாட்டன் அப்பாவை விட, படித்த தற்காலத்து மக்கள் தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற […]

Read more

சோழன் ராஜா ப்ராப்தி

சோழன் ராஜா ப்ராப்தி, எஸ்.எஸ். சிவசங்கர், அந்திமழை, விலை 140ரூ தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தனது அரசியல் வாழவிலும் அன்றாட நடைமுறையிலும் சந்தித்துப் பழகியவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர், இளையராஜா, சோழ மன்னர் ராஜராஜன் உள்பட பலர் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை சிறந்த கட்டுரைகளாக ஆக்கித் துந்து இருக்கிறார். அரசியல்வாதி என்றாலும், கட்சி அரசியல் வாடை எதுவும் இல்லாமல் அவர் தந்து இருக்கும் கட்டுரைகள், அனைத்து தரப்பினரும் படித்து ரசிக்கும் வகையில் உள்ளன. […]

Read more

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல், போல் ஜோசப், மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ. “இந்த நோய்க்கு இது தான் மருந்து, சாப்பிடுங்கள்” என்று கூறி அனுப்பிவிடுவது மட்டும் மருத்துவம் அல்ல என்பதையும், மருத்துவம் என்பது உளவியல் சார்ந்த பல அம்சங்களையும் உள்ளடக்கியது என்ற கருத்தையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. மருத்துவம் படித்துப் பட்டம் பெற்று கனடா நாட்டில் பணியாற்றும் போல் ஜோசப் என்ற மருத்துவர், தற்கால மக்களுக்குத் தேவையான பயனுள்ள பல மருத்துவ உளவியல் ஆலோசனைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். […]

Read more
1 23 24 25 26 27 223