பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள்

பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள், கனி விமலநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இயற்பியல் என்னும் பவுதிகவியல், விஞ்ஞானத்தின் அத்தனைப் பிரிவுகளுக்கும் அடிபப்டையாக இருக்கிறது என்பதை பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் விளக்கமாகத் தந்து இருக்கிறது. ஒளி என்பதில் அடங்கியுள்ள ரகசியம், சார்பியல், அணு பற்றிய பாடப்பிரிவில் ஒரு பிரிவான குவாண்டம் என்பது போன்ற கனமான விஷயங்கள் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாட உதாரணங்களுடனும் தரப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இலங்கைத் தமிழ் வார்த்தைகள் பல இடங்களில் இடம்பெற்று இருக்கின்றன. […]

Read more

ராபின்சன் குருசோ

ராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. கடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

இந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

பிறவி என்பது?

பிறவி என்பது?, சம்பத்குமார், கங்கை புத்தக நிலையம், விலை 180ரூ. அமானுஷ்யமான விஷயங்களைப் படிப்பது போன்ற உணர்வு, இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. நாம் பூமியில் பிறந்தது எதற்காக? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? என்பது போன்ற பல விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. மறு பிறப்பு உண்டா, சொர்க்கம் நரகம் என்பவை உண்டா போன்ற விஷயங்களும் 103 சிறு சிறு கட்டுரைகளில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, விலை 270ரூ. இன்றைய சமுதாய வளர்ச்சியால் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் துன்ப விளைவுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி என்ற கருத்துக்களையும் கொண்ட கட்டுரைத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. நாகரிக வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் மனிதர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட அவலங்களை இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நயம்பட விவரிக்கின்றன. நீர், நிலம், காற்று ஆகியவைகளில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் […]

Read more

தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 130ரூ. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தெனாலி ராமன் கதைகள் அனைத்தையும் கொண்ட முழுத் தொகுப்பாக வெளியாகி உள்ள இந்த நூலில், மொத்தம் 46 கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நூலின் ஆசிரியர், தெனாலிராமன் பிறந்த ஊரான விஜயநகரத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு கிராமங்களில் நிலவும் தெனாலிராமன் கதைகளையும் சேகரித்துத் தந்து இருப்பதால் அத்தனை கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மகாத்மா காந்தியடிகள்

மகாத்மா காந்தியடிகள், தொகுப்பு ஆசிரியர் பி.எம்.சரவணன், பி.எம்.சரவணன் வெளியீடு, விலை 25ரூ. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வெளிவந்துள்ளன என்றாலும், இந்த நூலில், மகாத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தனித்தனி தலைப்புகளில் கொடுக்கப்பட்டு இருப்பதால் படிக்க எளிமையாக இருக்கிறது. காந்தியின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் அனைத்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 370ரூ. பழங்கால தமிழ்ச் சமுதாயத்தில் அறங்களின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது, அறத்தின் மரபுகள், தொல்காப்பிய அறம் உள்ளிட்ட பல்வேறு அறங்களின் உருவாக்கம், அவை பரவிய வரலாறு மற்றும் சங்க காலத் தமிழ்ச் சங்க வரலாறு ஆகியவை ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பயன் அளிப்பதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029562.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள்

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள், கே.சாய்குமார், சாய் குமார் வெளியீடு, விலை 140ரூ. புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள கோவில்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மொத்தம் 355 சைவம் மற்றும் வைணவக் கோவில்களின் வரலாறு, அந்தக் கோவில்களுக்குச் செல்லும் வழி, அந்தக் கோவில்கள் திறந்து இருக்கும் நேரம், அங்கு தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் மற்றும் தொலைபேசி விவரம் என்று பக்தர்களுக்குத் தேவையான அனைத்து பயன் உள்ள […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், சா.கந்தசாமி, சாகித்ய அகாடமி வெளியிடு, விலை 290ரூ. சுயசரித்திரம் என்பது, இந்தியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது என்றும், அதனை எழுதியவர் 1748ம் ஆண்டு புதுச்சேரியில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளை என்ற தகவலையும் தரும் இந்த நூலில், ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரனார், தமிழ்த் தாத்தா உவே.சாமிநாதைய்யர், பாரதியார், திரு.வி.க., மா.பொ.சி., கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோர் உள்பட 12 தலைவர்களின் சுயசரிதங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைவர்கள் பற்றிய குறிப்பும், அதனைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் […]

Read more
1 21 22 23 24 25 223