பண்டைக்கால இந்தியா

பண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ். புக்ஸ் வேல்டு, விலை 230ரூ. மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே, 1942ம் ஆண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது பெரும்பகுதி எழுதப்பட்ட இந்த நூல், இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றை மார்க்சிய சிந்தனையோடு அணுகி இருக்கிறது. ஆரியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தார்கள்? யாகம், வேதம் என்றால் என்ன? அந்தக் காலத்தில் இருந்த ஆண் பெண் திருமண உறவுமுறை எப்படி? என்பது போன்றவற்றை விளக்கி இருக்கும் ஆசிரியர், பகவத் கீதை என்பது, மகாபாரத […]

Read more

உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள், ராபர்ட் ஹெச் ஷூல்லர், தர்மகீர்த்தி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 210ரூ. எப்படிப்பட்ட வேதனையான சூழ்நிலையிலும், எந்தவிதமான தோல்விகளை சந்தித்து இருந்தாலும், அவற்றில் இருந்து மீண்டு, வெற்றியாளராக பரிணமிப்பது எப்படி என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் தந்து இருக்கும் இந்த நூல், தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல் வரிசையில் தனி இடம் பெற்று இருக்கிறது என்று கூறலாம். ஒவ்வொருவரும் குறைகளை சரி செய்து, புரிய திறமையை வளர்த்துக்கொண்டு மறுபடி வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்பதை இந்த நூல் ஆணித்தரமாக எடுத்துக்கூறுகிறது. நன்றி: தினத்தந்தி 3/7/19, […]

Read more

நிலம் உங்கள் எதிர்காலம்

நிலம் உங்கள் எதிர்காலம், சா.மு.பரஞ்சோதி, பெரிகாம் பதிப்பகம், விலை 525ரூ. நிலம், வீடு, மனைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் ஆலோசகர்களுக்கும், தரகர்களுக்கும் பயன் உள்ள வகையில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. பலவிதமான பட்டாக்கள், பத்திரங்கள், மற்ற ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் கிரைய ஒப்பந்தத்தின் போதும் கவனிக்க வேண்டியவை, சர்வே தொடர்பான செய்திகள் என்று ரியல் எஸ்டேட் தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கும் இந்த நூலில் விளக்கம் தரப்பட்டு இருக்கின்றன. நிலம் மற்றும் வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி […]

Read more

தமிழ் சினிமா உலகம் தொகுதி 1

தமிழ் சினிமா உலகம், தொகுதி 1, திருப்பூர் அகிலா விஜயகுமார், மணிவாசகர் பதிப்பகம், விலை 600ரூ. தமிழ் சினிமா உலகில் 1930-ம் ஆண்டு மவுன மொழிப் படங்களின் சகாப்தம் முடிவடைந்து, 1931-ல் ‘காளிதாஸ்’ படம் மூலம் பேசும் மொழிப்படங்களின் வருகை தொடங்கியது என்ற தகவலைத் தரும் இந்த நூல், 1931 முதல் 1940 வரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வரலாறு, அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஆகிய விவரங்கள், சினிமா ரசிகர்கள் படித்து சுவைக்கும் வகையிலும், மாணவர்களுக்கு உதவும் ஆய்வு தகல் […]

Read more

ராதிகா சாந்தவனம்

ராதிகா சாந்தவனம், முத்து பழனி,  காவ்யா, விலை 270ரூ. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான பிரதாப சிம்மனின் அரசவையில் நடனக் கணிகையாக தேவதாசியாக இருந்த முத்து பழனி என்ற பெண், தெலுங்கு மொழியில் படைத்த இந்த நூல், காமம் கொப்பளிக்கும் காதல் இலக்கியமாகப் போற்றப்படுவது ஏன் என்பதை, இந்த நூலில் காணப்படும் உணர்ச்சிகரமான பாடல்களைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. 584 பாடல்களைக் கொண்ட இந்த நூல், முதலில் 1887ல் ஆங்கிலேயர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்டது. சிற்றின்பங்களை மையமாகக் கொண்டு இருந்ததால் தடை […]

Read more

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ்.ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை புதிய முறையில் எவ்வாறு அணுகி அவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆலோசனைகள் வழங்குவதில் புகழ்பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமர்த்தியின் கருத்துகள் ஏராளம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள் என்று பல இடங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சிந்தனைத் துளிகள் தொகுக்கப்பட்டு, அனைவரும் படிக்கும் வகையில் எளிய முறையில் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம்

நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம், எம்.சீனிவாசன், விலை 120ரூ. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அச்சமின்றி நீண்டகாலம் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த நூல் தருகிறது. நீரிழிவு நோய் பற்றிய அனைத்து தகவல்களும் சிறு, சிறு கட்டுரை வடிவத்தில் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் தொடர்பாக அனைவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதோடு, கட்டுரைகளின் ஊடே, நீரிழிவு நோயை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நகைச்சுவை துணுக்குகளும் கொடுத்து இருப்பது படிக்க சுவாரசியமாக உள்ளது. நன்றி: தினத்தந்தி […]

Read more

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல், இரா.சர்மிளா, காவ்யா, விலை 120ரூ. நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்பதையும், அந்த செல்களில், ‘குருத்தணு’ எனப்படும் ஸ்டெம் செல்களின் சிறப்புகளையும் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் தந்து இருப்பதைப் பாராட்டலாம். ஸ்டெம் செல்கள் என்றால் என்ன? அவை நமது உடலில் ஆற்றும் பணிகள், ஸ்டெம் செல்களை சேமித்து வைத்து அதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது எவ்வாறு? ஸ்டெம் செல் வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது போன்ற பல வினாக்களுக்கு பயனுள்ள […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், விலை 570ரூ. தமிழகத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்து 13-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி வரை சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து சோழ மன்னர்கள் ஆட்சி செய்த முழுமையான வரலாறு, இந்த நூல் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சோழ மன்னர்கள் ஒவ்வொருவரும் எந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தனர், அவர்கள் ஆட்சி முறை, குடவோலை மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம், நிலங்களை அளக்க எடுக்க நடவடிக்கைகள், நீர்ப்பாசன திட்டங்கள், அப்போது நடைபெற்ற போர்கள் மற்றும் […]

Read more

தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more
1 22 23 24 25 26 223