ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள்

ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள், கைலாசம் சுப்ரமண்யம், சீ.சுந்தரம், வானதி பதிப்பகம், விலை 300ரூ. திருமாலின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாகக் கருதப்படும் நரசிம்மருக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள 200 -க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பற்றிய அரிய தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. பிரகலாதனை காத்தருளவும், ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும் அவதரித்த நரசிம்மர் பற்றிய விஸ்தாரமான குறிப்புகள், நரசிம்மர் ஆலயங்களின் தனித்தன்மை ஆகியவற்றைத் தந்து இருப்பதோடு, நரசிம்மர் நிகழ்த்திய அற்புதங்கள், நரசிம்மரை வழிபடுவதற்கான ஸ்தோத்திரங்கள் ஆகியவையும் இடம் பெற்று […]

Read more

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம், சுவாமி தயானந்த சரசுவதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 1000ரூ. மகாபாரதம் அனுசாசன பர்வத்தில் இடம் பெற்று இருப்பது விஷ்ணு சஹஸ்ரநாமம், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகக் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்துக்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றதாகும். விஷ்ணுவைக் குறிக்கும் இந்த ஆயிரம் நாமங்களும், அவற்றுக்கு சுவாமி தயானந்த சரசுவதி அளித்த விரிவான விளக்கங்களும் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விஷ்ணுவின் வழிபாட்டில் ஒவ்வொரு நாமத்துக்கும் என்ன பொருள் என்பதோடு, […]

Read more

திருக்குறள் மூலமும் உரையும்

திருக்குறள் மூலமும் உரையும், கீர்த்தி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று கொண்டாடப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரை எழுதி இருக்கின்ற போதிலும், பரிமேழலகரின் உரை, காலத்தால் அழியாப் புகழ் பெற்றதாகும். இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு குறளுக்கும் பரிமேழலகர் கொடுத்த உரையும், அதனையும் எளிமைப்படுத்தி ஆசிரியர் கொடுத்துள்ள தெளிவுரையும் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் உட்பட அனைவரும் திருக்குறளை புரிந்து படிக்க இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில்

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில், கே.சித்தார்த்தன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி எளிய வடிவில் புதுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதியை அப்படியே கையாண்டு, பின் பகுதியில் கட்டியங்காரனின் மனைவி மங்கையர்க்கரசி, அன்னபூரணி போன்ற கற்பனைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதை சுவாரசியமாக பின்னப்பட்டு இருக்கறிது. கதை முழுவதையும் நாடக வடிவில் கொடுத்து இருப்பதோடு, ஒவ்வொரு காட்சியின் விவரமும் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. கட்டியங்காரன் நடத்தும் சூழ்ச்சிகள், கடைசியில் […]

Read more

தமிழ் இலக்கியத்தில் கவின்கலைகள்

தமிழ் இலக்கியத்தில் கவின்கலைகள், அ.பழநிசாமி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 175ரூ. கட்டிடங்கள், சிற்பம், ஓவியம், இசை, காவியம், கூத்து, நாடகம் போன்ற நுண்கலைகள் பழந்தமிழகத்தில் எவ்வாறு சிறப்புப் பெற்று திகழ்ந்தன என்பதை விரிவாக எடுத்துக் காட்டுகிறது இந்த நூல். சங்க கால இலக்கியங்கள், காப்பியங்கள், திருக்குறள், நீதிநூல்கள் போன்றவற்றில் இந்து மேற்கோள்களைக் காட்டியும், நேரில் ஆய்வு செய்தும் தரப்பட்டுள்ள தகவல்கள், இந்தத் துறையில் ஆய்வு செய்பவர்களுக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும் நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு, முத்தலாங்குறிச்சி காமராசு, தமிழ் திசை, விலை 170ரூ. வீரத்தின் விளை நிலமாகத் திகழும் தமிழகத்தின் தென் பகுதியில் சீரோடும் சிறப்போடும் விளங்கிய நட்டாத்தி ஜமீன், சாத்தான் குளம் ஜமீன் ஆகியவர்களின் மறைந்து போக இருந்த வரலாற்றைத் தேடிப் பிடித்து, நல்ல ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர். இந்த வரலாறு தொடர்பான கள ஆய்வு மூலமும், இந்த ஜமீன்களின் வாரிசுகளை நேரில் சந்தித்தும் பெற்ற விவரங்கள் மலைக்க வைக்கின்றன. இந்த ஜமீன்களின் வீர வரலாறு, காதலால் அழிந்து போன ஜமீன் […]

Read more

மீன்கள் உறங்கும் குளம்

மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம், வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. இந்த நூல் மூலம் மகாகவி பாரதியாரை வித்தியாசமான கோணத்தில் பார்க்க முடிகிறது. பாரதியாருக்கும், வள்ளலாருக்கும் உள்ள ஒற்றுமை, பாரதியாருடன் நேரில் பழகிய ராஜாஜி உள்பட 5 பிரமுகர்களின் ஆச்சரியமான கருத்துக்கள், பாரதியாரின் நகைச்சுவை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டு என்று பலதரப்பட்ட ருசிகரமான தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027275.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

ஒரு சாமானியனின் சாதனை

ஒரு சாமானியனின் சாதனை, எஸ்.கே. இளங்கோவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ‘அரவணைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சமுதாய தொண்டாற்றி வரும் இந்த நூலின் ஆசிரியர், தான் அடிமட்ட நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி உன்னதமான இடத்துக்கு வந்தது எப்படி என்பதை அழகாக பதிவு செய்து இருக்கிறார். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் நல்ல உந்துசக்தியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 27/2/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

விழித்தெழுக என் தேசம்

விழித்தெழுக என் தேசம், சி.ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், விலை 250ரூ. அறிவியலாளரும், கவிஞருமான சி.ஜெயபாரதன் (கனடா) எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “தாரணி எங்கும் நீர், நிலம் நெருப்பு, வாயு, வானமாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்” என்ற வரிகள் புவி வெப்பமாதலின் அத்தனை அழிவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 27/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 29 30 31 32 33 223