இராமாயணம் இராமன் இராமராஜ்யம்

இராமாயணம் இராமன் இராமராஜ்யம், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை நன்னொடை 120ரூ. சில மாதங்களுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில், 7 நாட்களாக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் வருணாசிரமத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மத வெறியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராமாயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதை பல ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார். பல்வேறு மொழிகளில் ராமாயணம் 48 நூல்களாக வெளியாகி இருக்கிறது […]

Read more

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும், சங்கர சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. எந்தக் காலத்துக்கும், எந்த இனத்தாருக்கும் பொருந்தும் திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அத்தகைய திருக்குறளில் ஏராளமான விஞ்ஞான கருத்துக்களும் பொதிந்து இருக்கின்றன என்ற அதிசய தகவலைத் தரும் இந்தப் புத்தகத்தின், 12 தலைப்புகளில் அடங்கிய பல திருக்குறள்களில் என்ன என்பதை, அறிவியல் பூர்வமாக மிகச் சிறப்பாக, படங்களுடன் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே படித்த குறள்களுக்குள் இவ்வளவு விஞ்ஞானம் அடங்கி இருக்கிறதா என்ற வியப்பு இதனைப் படிக்கும் போது மேலிடுகிறது. […]

Read more

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. இது வரலாற்று நூல் என்றாலும், விறுவிறுப்பான நாவலைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும் வகையில் துணுக்குத் தோரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை தடம் பதித்தவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான, அதே சமயம் உயரிய வாழ்க்கைக்கு உரம் போட்ட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், மின்னல் வேகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக சுருக்கமாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பல தலைவர்கள் பற்றி இதுவரை அதிகம் கேள்விப்படாத தகவல்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் இதில் இடம் […]

Read more

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள், மா.அமரேசன், அறம் பதிப்பகம், விலை 200ரூ. பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் புத்த சமயக்கோட்பாடுகள் பிரதி பலிக்கின்றன என்பதை தனது ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் மா.அமரேசன். இதற்கு இளைய ராஜாவின் பூர்வ பவுத்த இசைக் கூறுகளே காரணம் என்றும் விவரிக்கிறார். ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் உள்ளிட்ட 8 பாடல்களை ஆசிரியர் விரிவான முறையில் ஒப்பீடும் செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

யூஏஏ எனும் ஆலமரம்

யூஏஏ எனும் ஆலமரம், டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. நாடக திலகம் ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக குழுவினர் பற்றியும், அவர்கள் அரங்கேற்றி உள்ள நாடகங்கள் பற்றியும் பல்வேறு அரிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாடக ஆர்வலர்கள் ஒவ்வொருவரையும் படிக்க தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]

Read more

தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள்

தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள், முத்து ரத்தினம், சரண் பதிப்பகம், விலை 90ரூ. தங்கள் நகைச்சுவை திறன் மூலம் அடுத்தவரை மகிழ்விப்போருக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் உண்டு. திரைத்துறையில் சாதித்த பல நகைச்சுவை கலைஞர்கள் கதாநாயகன் நாயகிக்கு இணையான புகழ் பெற்று விளங்கி உள்ளனர். அந்த வகையில் அந்றைய என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய சந்தானம் வரை தமிழ் திரையுலகில் சாதித்த காமெடி நடிகர் நடிகைகளை பற்றிய நூல் இது. இன்றைய தலைமுறை அதிகம் அறியாத பழங்கால நகைச்சுவை நாயகர்கள் பற்றிய தகவல்கள் நூலுக்கு […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், விலை 120ரூ. நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் என்றால், அதன் பெருமைக்குரிய அம்சமாக விளங்குவது நஞ்சில்லா வேளாண்மை, உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்காத அந்த இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது இந்த நூல். விவசாயத்தில் விஷம் நுழையும் விதத்தை விளக்கி இருக்கிறார் ஆசிரியர். அதற்கான மாற்று வழிகளையும் எடுத்துரைத்து இருக்கிறார். மாடித்தோட்டம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் தனது அனுபவங்களை அவர் விளக்கி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி: […]

Read more

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]

Read more
1 31 32 33 34 35 223