மூளைக்குள் வாருங்கள்

மூளைக்குள் வாருங்கள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.212, விலை ரூ.220. புலன்களின் மூலமாக மூளைக்குள் செல்லும் தகவல்கள் எல்லாம் மூளையில் பதிய வைக்கப்படுவதில்லை. நிறைய தகவல்களை மூளை வீணடித்துவிடுகிறது. தகவல்களை சரி பார்க்காமலேயே சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தகவல்களை எடிட் செய்து தனக்குள் பதிந்து வைத்துக் கொள்கிறது. அவகாசம் கொடுத்தால் மூளை சரியாக தர்க்கம் செய்யும். அவசரப்படுத்தினால் மூளை குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கும். மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் – டெம்போரல் லோப் இரண்டும் சேர்ந்துதான் தற்காலிக நினைவுகளை வைத்திருக்கின்றன. இப்பகுதி சேதமடைந்தால் பார்த்தது, கேட்டது […]

Read more

விந்தன் படைப்புலகம்

விந்தன் படைப்புலகம், மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.200.   “கல்கியின் மாணவன்’ என்று போற்றப்படும் எழுத்தாளர் விந்தனின் படைப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. நகைச்சுவையாக எழுதுவது அவருடைய நோக்கமாக இருந்தது. நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன் எழுதிய ஒரே வரலாற்று நூல் எம்.கே.டி.பாகவதர் கதைதான். “தினமணி கதிர்’ இதழில் தொடராக வந்தது. விந்தனின் “ஆத்திசூடி’ வித்தியாசமானது. புரட்சி சிந்தனை உடையது. நடிகர் எம்.ஆர். ராதாவைப் பேட்டி கண்டு “சிறைச்சாலை சிந்தனைகள்’ என்ற தொடர் வெளிவரவிந்தன் காரணமாக இருந்தார். “ஓ மனிதா!’ தொடர் அவருடைய […]

Read more

இவர்தான் லெனின்

இவர்தான் லெனின் (கட்டுரைகள், கதைகள், குறிப்புகள்),  பூ.சோமசுந்தரம், ஜீவா பதிப்பகம், பக்.264, விலை ரூ.220. ரஷ்ய பொதுவுடைமை இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் தலைமை தாங்கிய பெருமைக்குரியவர் வி.இ.லெனின். அவருடன் பழகியவர்கள் லெனினுடனான தமது அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதி இருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. லெனின் மிகப் பெரிய தலைவராக இருந்தபோதிலும், ரஷ்யாவில் வாழும் மிகச் சாதாரணமான ஏழை மக்களின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான கவனம் கொண்டிருந்தது; ஏழை மக்களுடன் நெருங்கிப் பழகியது; அவர்களின் நலன் என்கிற நோக்கில் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள்,  பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை ரூ.145. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை. குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப […]

Read more

துரிஞ்சிலாற்றின் பயணம்

துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190. நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது. கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. இதில், தமிழ் மக்களின் நீர் […]

Read more

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம், சிவம், ஸ்ரீ கமலா புக்ஸ்,பக்.320, விலை ரூ.160. வீடு, கடை, அலுவலகம், தோட்டம், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்டவற்றை வாஸ்து சாஸ்திர முறைப்படி எவ்வாறு அமைக்கவேண்டும்; அதனால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல். “சொந்த வீடு யோகம் யாருக்கு அமையும்? வாஸ்து சாஸ்திரத்திற்கும், ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா? வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி?’ என்றெல்லாம் வாஸ்து தொடர்பாக என்னென்ன வினாக்கள் எழுமோ, அவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் இந்நூல் கேள்வி – பதில் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. “வீடுகட்டும் மனையில் […]

Read more

இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள்

இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள்,  மால்கம் ஆதிசேசய்யா; தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்,  பக்.256, விலை ரூ.250. இன்றைய இந்தியப் பொருளாதாரநிலையின் தன்மையைத் தெரிந்து கொள்ள 1980- களிலும், 1990 -களிலும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் துணைபுரியும் வகையில் இந்நூலில்கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பொருளாதார நிபுணரான நூலாசிரியரின் கருத்துகள் இந்தக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியப் பொருளாதாரம் பற்றிய கட்டுரையில் “காந்தியைப் பொறுத்தவரை […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்,  வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்,திருப்புகழ்ச் சங்கமம்,  பக்.464,  விலை ரூ.396. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன், இறைவியைப் போற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமிழகத்துக் கோயில்கள் மட்டுமல்லாது, திருவேங் கடம், காஷ்மீர், காசி, இமயமலை போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் தீட்சிதர். இவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை. இந்நூலில் தீட்சிதர் 66 தலங்களில் பாடிய […]

Read more

மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள் (அர்தமோனவ்கள்) ,  மக்ஸீம் கார்க்கி,  தமிழில்: நா. தர்மராஜன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 476, விலை ரூ. 450. ரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி. உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய “தாய்’ நாவலின் ஆசிரியர். கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் “அர்த்தமோனவ்கள்’. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் – தலைமுறைகள் – எதிர்காலத்தில் […]

Read more

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும், துரை ஆனந்த் குமார், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.80, விலை ரூ.100. வளரிளம் பருவம் எனப்படும் டீன் ஏஜில் ஆண், பெண் குழந்தைகளிடம் உடல், மன ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என அலைபாயும் பருவ வயதை பக்குவத்துடன் எவ்வாறு கடந்து செல்வது என்பதை ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் பதிவு செய்துள்ளது. ஒருவரின் எதிர்காலம், குணாதிசயம், மன உறுதி, உடல்நலம் உள்ளிட்ட அடிப்படைக்கூறுகளை நிர்ணயிப்பதில், 11 வயது முதல் 19 வயது வரையிலான 9 வருடங்கள் […]

Read more
1 9 10 11 12 13 180