தனிமனிதன்

தனிமனிதன்,  சிந்து சீனு,  லாவண்யா புத்தகாலயம், பக். 110, விலை  ரூ.110. எளிய மனிதர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளையும், அவர்தம் மனக் குமுறல்களையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பே ‘தனிமனிதன். அதிகார வர்க்கமும், மேல்தட்டு சமூகமும் விளிம்புநிலை மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே எப்போதும் குறியாக உள்ளன. அடித்தட்டு மக்களின் மனக்குமுறல்களுக்கு முழுமையான தீர்வு கிடைப்பது இல்லை. இந்த அவலத்தை சில கதாபாத்திரங்கள் மூலமாக ‘தனிமனிதன்’ பதிவு செய்துள்ளது. குப்பை அள்ளும் தொழிலாளி, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக வேலையை இழக்கும் தொழிலாளி, சுமை […]

Read more

செத்தை

செத்தை, வீரபாண்டியன், எழுத்து,  பக்.144, விலை ரூ.110. சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’. மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

வல்லமை சேர்

வல்லமை சேர் , ரவி கண்ணப்பன், தி ரைட் பப்ளிஷிங், பக்.146, விலை ரூ.140. மனிதனின் எண்ணவோட்டங்களை ஊக்குவித்து, அதன் மூலம் குடும்பத்தில், சமுதாயத்தில் மாற்றங்களை, ஏற்றங்களை அடையச் செய்ய பல சான்றோர்கள் புத்தகங்கள் மூலம் வழி காட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த நூலின் ஆசிரியர் இந்நூல் மூலம் விவசாயம் சார்ந்த சிந்தனை விதையைத் தூவியிருக்கிறார். ஒருவருடைய வலிமையான சிந்தனை சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் தன்மை படைத்தது. நமது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தால், அது […]

Read more

ஆட்டிசம் ஒரு பார்வை

ஆட்டிசம் ஒரு பார்வை, ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன் & நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன்,  பக்.160, விலை ரூ.150. மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய நரம்பு சார்ந்த ஒருவகை வளர்ச்சிக் குறைபாடே ஆட்டிசம் என்று கூறும் நூலாசிரியர், ஆட்டிசம் என்பது பலர் நினைப்பது போல ஒரு வியாதி அல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே என்கிறார். ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்வகையில் ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் உடல், மனநிலையைப் பற்றிய […]

Read more

நல்லாரைக் காண்பதுவும்

நல்லாரைக் காண்பதுவும், டி.கே.எஸ்.கலை வாணன், வானதி பதிப்பகம், பக்: 416, விலை ரூ.350. வாழ்ந்து மறைந்த நல்லோர்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்கள் என மொத்தம் எழுபது பேர்களைத் தேர்வு செய்து, அவர்களின் நற்குணங்களையும், நல்ல தன்மைகளையும் சம்பவங்களுடன் இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். அவ்வை டி.கே.சண்முகத்தின் புதல்வரான இவர், எந்த வகையில் அவர்களோடு இணைந்திருந்தார் என்பதையும், அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் சுவைபட ஒரு டைரி குறிப்பைப் போன்று எழுதிக் குவித்திருக்கிறார். வாழ்ந்து மறைந்த நல்லோர் வரிசையில் காமராஜர், அண்ணா, க.அன்பழகன், ஜி.கே. மூப்பனார், ஜி.உமாபதி, நீதியரசர் […]

Read more

மனிதம் புனிதம்

மனிதம் புனிதம், நா.பெருமாள், ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், பக்.208, விலை ரூ.150. மனிதர்கள் மனிதத்தன்மையோடு வாழும்போதுதான் மனிதம் புனிதம் பெறும் என்பதை விளக்கும்விதமாக, இந்நூலில் அடங்கியுள்ள 21 கட்டுரைகளும் உள்ளன. தனிமனிதன் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரைகளும், புறநிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் அநாதை இல்லங்களிலும் தள்ளிவிடாமல் பிள்ளைகள்காப்பாற்ற வேண்டும். பிள்ளைகளைச் சார்ந்திருக்காமல் வாழ பெற்றோர் முதலில் இருந்தே சேமிக்கத்தொடங்க வேண்டும். அவ்வாறு சேமித்தவற்றில் தங்களுக்குத் தேவையானது […]

Read more

நிலைகெட்ட மனிதர்கள்

நிலைகெட்ட மனிதர்கள், க.முத்துக்கிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், பக்.168, விலை ரூ.170. சினிமா, அரசியல், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளும் எவரொருவரையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இத்துறைகளில் பேரும் புகழும் ஈட்டுவது எளிதல்ல. கடும் உழைப்பும் முயற்சியும் இருந்தாலொழிய வெற்றி பெற இயலாது. ஆனாலும் எவ்வித அடிப்படை அறிவும் புரிதலும் இல்லாத சிலர் இத்துறைகளில் கோலோச்சுவது மட்டுமல்லாது கோடிக்கணக்கில் பணமும் ஈட்டுகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது. அப்படியானவர்களைப் பகடி செய்து புனையப்பட்ட நாவல்தான் ‘நிலைகெட்ட மனிதர்கள்’. மளிகை மண்டி முதலாளி, அவருடைய வேலைக்காரன், மளிகை […]

Read more

அக்கா

அக்கா,  ஏ.எஸ்.பொன்னம்மாளின் சட்ட மன்ற சரிதம், திலகபாமா, காவ்யா,  பக்: 586, விலை ரூ.600. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, ஓர் ஆதிதிராவிடர் நல விடுதியில் வார்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் அரசியலில் நுழைந்து ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சாதனை படைத்த ஏ. எஸ். பொன்னம்மாளின் வாழ்க்கை வரலாறு, சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்த நூல். 1957-இல் முதன்முதலாக நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றது, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, […]

Read more

மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது, வெ.நல்லதம்பி, வள்ளுவன் வெளியீட்டகம், பக்.280, விலை ரூ.300. மலர் சாகுபடியை மையப்படுத்தியும், மலர்கள் குறித்த உலகளாவிய பல நுணுக்கமான செய்திகளை நாவல் முழுவதும் ஆங்காங்கே பதிவுசெய்தும் புனையப்பட்ட நாவல் “மலரினும் மெல்லிது’. மலர் சாகுபடியை வாழ்வாதாரமாகக் கொண்ட, எளிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்த வேளாண் பல்கலைக்கழக மாணவி கமலாவும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் முதன்மைக் கதாபாத்திரங்கள். இவர்கள் இருவருக்கும் மலர்கள் மீதும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மலர் சாகுபடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துதல் […]

Read more

தமிழ் இலக்கியத்தின் வரலாறு

தமிழ் இலக்கியத்தின் வரலாறு, பால.இரமணி, ஏகம் பதிப்பகம், பக்.184, விலை  ரூ.150. தமிழ் இலக்கியத்தின் வரலாறு குறித்து இதிலுள்ள எட்டு கட்டுரைகளும் அழுத்தமாகவும், ஆழமாகவும், சுருக்கமாகவும் செவ்விலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சொல்லிச் செல்கின்றன. “தமிழில் இதுவரை பல இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இலக்கியத்தின் வரலாறு உரைக்கும் முதல் நூல், முன்னோடி நூல் இது ஒன்றுதான்’ என்று வ.நாராயண நம்பி பதிவு செய்துள்ளது போலவே, 184 பக்கங்களில் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை மிகமிக எளிமையாக எடுத்துரைக்கும் நூல் இதுவாகத்தான் இருக்கும். காப்பியம், […]

Read more
1 11 12 13 14 15 180