மாவீரன் சிவாஜி

மாவீரன் சிவாஜி, கோவிந்த் பன்சாரே, தமிழில் செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம். கொள்ளையில் பங்கு இல்லை! கோவிந்த் பான்சாரே எழுதி, தமிழில் செ. நடேசன் மொழி பெயர்த்த,‘மாவீரன் சிவாஜி’ நூலை சமீபத்தில் படித்தேன். விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சிவாஜியைப் பற்றி பல்வேறு கோணங்களில், பல்வேறு வரலாற்று செய்திகளை பலர் சொல்லியும், எழுதியும் உள்ளனர். இவற்றில், பெரும்பாலான செய்திகள், இட்டுக்கட்டி சொல்லப்பட்டதான கருத்தே நிலவுகிறது. இந்நிலையில், கோவிந்த் பன்சால் எழுதிய, இந்நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய கால இந்திய வரலாற்றில், […]

Read more

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து, சாத்திரி, திலீபன் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ. உலுக்கி எடுக்கும் கண்ணீர் கதை ஆயுத எழுத்து, நம் முகத்தில் அறையும் எழுத்து. ஒவ்வொரு அஸ்தமனத்திற்கு பின்னும் ஒரு விடியல் உண்டு என்று சொன்னால், ‘எங்கள் வானம் விடியலே இல்லாத இருண்ட வானம்’ என்று சொல்வார்கள் இலங்கைத் தமிழ்ப் போராளிகள். அவர்களின் கண்ணீர்க் கதைதான் இந்த நாவல். கடந்த, 30 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் தான் […]

Read more

தி லைப் அண்டு டைம் ஆப் என்.டி.வானமாமலை

தி லைப் அண்டு டைம் ஆப் என்.டி.வானமாமலை, வழக்கறிஞர் எஸ். அருணாச்சலம், ஆல் இந்தியா பப்ளிக் ரைட்ஸ் புரொடக்ஷன், ஆர்கனைசேஷன் வெளியீடு, பக். 320, விலை 200ரூ. விழுதுகள் வாழ்த்தும் விருட்சம் தமிழில் நூலாசிரியரால், ‘கரை சேர்க்கும் உயிர் துடுப்பாய்’ என்னும் தலைப்பில் வெளியான நூல், தற்போது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் பெற்றுள்ளது. முற்போக்குச் சிந்தனையும், தொண்டுள்ளமும் நிறைந்த மூத்த வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல். என்.டி.வி., என்று அன்புடன் அழைக்கப்படும் என்.டி. வானமாமலை, ஒரு வழக்கறிஞன் சடர்விட்டுப் பிரகாசிக்கத் தேவையான அயராத உழைப்பு, […]

Read more

காங்கேயக் காளை

காங்கேயக் காளை, குமாரவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 91, விலை 80ரூ. ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது காங்கேயம் காளைகள்தான். விவசாயம் குறைந்து, வண்டிகளும், ஏர்களும் காணாமல் போன பின், காளைகளின் தேவையும் குறைந்துபோனது. அதன் விளைவு இப்போது காங்கேயம் காளைகளும் காணாமல் போய் வருகின்றன. காங்கேயம் காளைகள் தோற்றம், அவற்றின் வரலாறு, சிறப்பு, உள்ளிட்டவற்றை நூலாசிரியர் விளக்குகிறார். காங்கேயம் மாடுகளை வளர்க்கும் முறை, அவற்றை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது பற்றியும் விளக்கியுள்ளார். காங்கேயம் மட்டுமின்றி, மணப்பாறை, உம்பளச்சேரி, புலிக்குளம் […]

Read more

தென்பாண்டி தந்த திருவள்ளுவர்

தென்பாண்டி தந்த திருவள்ளுவர், கேசவ. சுப்பையா, துவாரகா பதிப்பகம், பக். 228, விலை 120ரூ. திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடம் குறித்த சர்ச்சை நீடிக்கிறது. அவர் சென்னை மயிலாப்பூரில் நெசவு தொழில் செய்து வாழ்ந்தார் என்று பலரும் எழுதியுள்ளனர். தமிழக சமணர்கள், திருவள்ளுவரை சமணர் என்றும் அவர் வாழ்ந்தது பொன்னூர் மலை என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், சிவ. பத்மநாபன், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, முட்டம் கடற்கரைக்கு அருகிலுள்ள திருநயினார்க்குறிச்சியில் வள்ளுவர் வாழ்ந்தார் என்று எழுதியும் பேசியும் வந்தார். திருக்குறளில் ஈடுபாடு கொண்ட அப்துல்கலாம், […]

Read more

என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், பக். 120, விலை 90ரூ. தன் உடலைக் குறித்த புரிதல், வணிக மருத்துவத்தை நிராகரித்தல், இயற்கையைச் சார்ந்திருத்தல், உணவு பற்றிய எளிய ரகசியங்கள் ஆகியனவற்றை இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார் நூலாசிரியர். இயற்கைக்கு எதிரான பயணத்தில் ஒரு முறிப்பை ஏற்படுத்துகிறது இந்நூல். வெளியேறாமல் தேங்கிய கழிவுகளை நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ உடல் காய்ச்சலை உருவாக்கி மொத்தமாக ஓர் எரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காய்ச்சல் என்பது உடல் கொண்டாடும் போகிப்பண்டிகை. இறைச்சி […]

Read more

டெஸ்டினேஷன் போர்பந்தர்

டெஸ்டினேஷன் போர்பந்தர்(ஆங்கிலம்), பி. புருஷோத்தமன், காந்தி வேர்ல்ட் பவுண்டேஷன், பக். 104, விலை 120ரூ. நூலாசிரியர் காந்தியடிகள் மீது மட்டற்ற மரியாதையும், பக்தியும் கொண்டவர். நீண்ட நாட்களாக, காந்தியடிகள் அவதரித்த இடமான போர்பந்தரைச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற அவரது ஆவல், கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேறியது. அங்கு சென்று ஒவ்வோர் இடத்தையும் இவர் பார்வையிட்டபோது, காந்தியடிகளின் இளமைப் பருவத்தில் இருந்து அவரது இறுதி நாட்கள் வரை நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், இவர் மனதில் நிழலாடின. அவற்றை ஒன்று விடாமல் போட்டோ பிடிப்பது போல் […]

Read more

திருப்போரூர்ச் சந்நிதி முறை

திருப்போரூர்ச் சந்நிதி முறை, பி.ரா. நடராசன், சங்கர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. சிதம்பரம் சுவாமிகளின் ஒப்பற்ற நூல்! கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த இலக்கணப் புலவர், சிதம்பர சுவாமிகள். மதுரையிலிருந்து முருகன் திருவருளால், திருப்போரூர் வந்தார். புதைத்திருந்த சுயம்பு முருகனுக்கு, வியந்து போகுமளவு கற்கோவில் கட்டினார். ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் சொற்கோவிலும் படைத்தார். இவரது உரையால்தான், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு, அப்பர் பாடியது தேவாரம், சுந்தரர் பாடியது திருப்பாட்டு என்று வகைப்படுத்தப்பட்டது. இத்தகு அருட்புலவரின் புதிய பக்தி […]

Read more

பங்களா கொட்டா

பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை பதிப்பகம், பக். 128, விலை 130ரூ. சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரிக்கு கட்ட விரும்பும் ஞானசேகர் என்பவரின் கனவையும், அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் விவரிக்கிறது, இந்த நாவல். தஞ்சை மண்ணின் பின்னணியில் நிகழ்கிறது இந்தக் கதைக்களம். கதையின் ஊடாக அந்நிலத்தின் ஜாதியக் கட்டமைப்பையும், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், குடும்ப உறவுக்குள் இருக்கும் அன்பையும், பிணக்குகளையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் விறுவிறுப்பாக கூறிக்கொண்டே செல்கிறது இந்நாவல். […]

Read more

அ. ஞானசம்பந்தன்

அ. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம், பெரிய புராணத்தைக் கற்பதன் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.’(பக். 72) என்று கூறும், ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியரான’ அ.க. ஞானசம்பந்தன், 35 ஆய்வு நூல்களையும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களையும், ஆறு பதிப்பு நூல்களையும் வெளியிட்டு, அன்னைத் தமிழுக்கு அரணாகவும், அணியாகவும் விளங்கி 85வது அகவையில் காலமானார். நாவலர் சோமசுந்தர பாரதியாரால் இலக்கியத் துறைக்கு வந்த அ.ச..வின் […]

Read more
1 139 140 141 142 143 240